வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட ஆச்சிபுரம், சம்மளகுளம், கல்நாட்டினகுளம், கோமரசங்குளம், கல்வீரங்குளம், சிதம்பரபுரம்கற்குளம், ஆசிகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 648 குடும்பங்ளை சேர்ந்த சுமார் 1950 பேருக்கு உதவ வட மாகாண சபை உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களினால் வட மாகாண விவசாய அமைச்சு, வட மாகாண சுகாதார அமைச்சின் உதவியுடன் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், கௌரவ ம.தியாகராசா, கௌரவ இ.இந்திரராசா சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள இடைத்தங்கள் முகாம்களுக்கு நேரில் எடுத்துச்சென்று வழங்கியதுடன். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்த்து, கேட்டு ஆராய்ந்து அறிந்ததுடன். மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கும் உலர் உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.