Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 26 December 2014
Posted in செய்திகள் 

துயர் பகிர்வோம்!                                                  

ஆழிப்பேரலை நடந்து முடிந்தது –alai3

சில நாளிகை போல் இருந்தாலும்

பத்தாண்டுகள் உருண்டோடிப் போன

இந்நாளில் செத்து மடிந்துபோன எம் உறவுகளை

நினைவேந்தி மீண்டும் … மீண்டும்…

ஆறாத்துயரோடு அஞ்சலித்து நிற்கின்றோம்

துயர் பகிரும் நாம்….          

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

இலங்கையின் முதலாவது சுனாமி பேரலை அனர்த்த நினைவுத் தூபியில் அஞ்சலி-

sunamiஇலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா, பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலக்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமிப் பேரலையின் 31ஆம் நாள் நினைவாக 26.01.2005ஆம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவிலே நிறுவப்பட்ட நினைவுத் தூபியில் 10ஆம் ஆண்டு நினைவு நாள் பிரார்த்தனையும் அஞ்சலிக் கூட்டமும் இன்றையதினம் காலை 9.25 முதல் நரசிங்கர் ஆலய பரிபாலன சபைத் தலைவரின் தலைமையில் ஆரம்பமானது. இவ் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவசக்தி ஆனந்தன், கௌரவ வினோ, வவுனியா மாவட்ட அரச அதிபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வட மாகாண சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான திரு சிவமோகன், திரு இந்திரராஜா, திரு தியாகராஜா, திரு லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் திரு சேனாதிராஜா, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளின் முகாமையாளர்கள், வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு எஸ்.இராசலிங்கம், சர்வதேச இந்து மத பேரவையின் தலைவர் திரு சிவகஜன், கோவில்குளம் இளைஞர் கழக தலைவர் திரு சு.காண்டீபன், கழக உப செயலாளர் திரு கேசவன், கழக பொருளாளர் நிகே, உறுப்பினர் சஞ்சீ மற்றும் சமூக ஆர்வலர்கள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.                                                                                         

sunami01 sunami02 sunami03 sunami04 sunami05 sunami06 sunami07 sunami08 sunami09 sunami12

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பத்துவருட பூர்த்தி-

aaliசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர். சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, நாடளாவிய ரீதியில் மத வழிபாட்டுத் தலங்களில் விசேட பிரார்த்தனைகளும், காலை 9.25முதல் 9.27வரையிலான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 10ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு-

சீரற்ற காலநிலை காரணமாக போவதென்ன நீர்தேக்கத்தின் சகல அவசர கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. நீர்தேக்கத்தின் ஆறு அவசர கதவுகளும் ஆறு அடி வீதம் திறக்கப்பட்டதாக அதற்கான பொறுப்பான பொறியிலாளர் எச்.எம்.எல்.ஆர் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, அம்பன்கஹ, எலஹெர மற்றும் பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் தாழ் நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மவுசாகலை நீர்தேக்கத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக அவசர கதவுகளை திறக்க நேரிட்டுள்ளது. இதன்காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடையக் கூடும் என மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கிதுல்கல, ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களின் தாழ் நிலங்கள் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவிக்கின்றார். 73 நீர்த்தேக்கங்களில் 58 நீர்த்தேங்கங்கள் வான் பாய்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட இந்நிலையானது தற்போது ஹம்பாந்தோட்டை மொனராகலை மாவட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், அநுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பலநீர்த் தேக்கங்கள் வான் பாய்ந்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவித்துள்ளார். மேலும், தெதுறுஓயா, கலா ஓயா, மல்வத்து ஓயா, மீ ஓயா மற்றும் மகாவலி கங்கை உள்ளிட்ட பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

100 கோடி ரூபா கொடுத்தாலும் அரசுடன் இணைய மாட்டேன் – திகாம்பரம்-

தான் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். பரவிவரும் இந்த செய்தி குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், மலையக மக்களே என் உயிர். அதனால் மலையக மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசாங்கத்தில் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டேன். 100 கோடி ரூபா பணத்தை கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டு வரச் சொன்னாலும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள மாட்டேன். மலையக மக்களின் தனிவீடு காணி உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். தோல்வி பயத்தில் சிலர் நான் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வதந்தியை பரப்புகின்றனர். ஆனால் நான் தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன் என்றார்.

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, மலையக ரயில் சேவைகள் இரத்து-

malyagamநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் மல்லவபிட்டி, ரிதிகம, மாவத்தகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல, கட்டுவன பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றுகாலை கொழும்பில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளநிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டும் உள்ளன.

பதுளை, மண்சரிவில் புதையுண்டு அறுவர் உயிரிழப்பு-

koslanda_image_007பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிலர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

ரூ.2,500 மில்லியன் நட்டஈடு கோரி திஸ்ஸவுக்கு மைத்திரி நோட்டீஸ்-

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார். இந்த போலி ஒப்பந்ததத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியே, மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கைப் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நத்தார் வாழ்த்துக்கள்

பாரினில் untitledபாலன்

ஜேசுவின் பிறப்போடு  ஏழை, எழியோர் உட்பட

எல்லோரும்

சாந்தி சமாதானத்தோடு  சரிநிகர் வாழ்வு வாழ

நாமும் நல்வாழ்த்தைக்

கூறி நிற்கின்றோம்.

வாழ்த்தும் நாம் என்றென்றும்

மக்கள் அன்புடன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)

ilaiya natsathira(படங்கள் இணைப்பு)

கடந்த 22.12.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேசத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் மூளாய் மனிதவள சனசமூக நிலையத்திற்கு விஜயம் செயதார். இதன்போது அப்பகுதியில் சனசமூக நிலையத்தினை அமைக்கும் பணிக்காக பன்முகப்படுத்ப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரூபா 100000ஐ  ஒதுக்கீடு செய்த நிலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாடாளுமனற உறுப்பினரும் வலி மேறகு தவிசாளரும் இணைந்து வேலைத்திட்டத்தினை சனசமூக நிலையத்தவரின் கோரிக்கைக்கு இணங்க ஆரம்பித்து வைத்தனர். Read more

இருபத்திரண்டு மாவட்டங்களில் வெற்றி உறுதி-மைத்திரிபால சிறிசேன-

m125 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது ஆய்வறிக்கைகளில் இருந்து தெளிவாகின்றது. எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள உண்மையான தகவல்களின்படி, 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பொது வேட்பாளரின் அன்னப்பறவை சின்னம் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அதிவேக வீதியில் விபத்தில் எட்டுப்பேர் காயம்-

தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து கெலனிகம நோக்கி பயணித்த வேன் ஒன்று பின்னால் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வேனில் பயணித்த எட்டுப் பேர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மைத்திரியின் மேடை மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது-

கொழும்பு வெல்லம்பிடிய – உமகிலிய விளையாட்டரங்களில் அமைக்கப்பட்டிருந்த எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான தேர்தல் விஷேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது, நேற்று இரவு இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இரு டிபென்டர் வாகனங்களில் வந்த குழுவினரே துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இ.தொ.காவின் இரு முக்கிய பிரமுகர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

Cwc1_CIஇலங்கை தொழிலாளர் கங்கிரசின் முக்கிய பிரமுகர்கள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். அக் கட்சியின் உபதலைவர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரான உதயகுமார் மற்றும் நுவரெலிய பிரதேசசபை உறுப்பினர் நாகராஜன் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளனர். மேலும் தற்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டு உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திவெளியில் மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்-

office attack_மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20ற்கும்  மேற்பட்டோரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய  கும்பல் இந்த அலுவலகத்துக்கு இன்றுஅதிகாலை வந்ததாகவும் அவர்கள்  அலுவலகத்துக்கு  பெற்றோல் குண்டு வீசியதுடன் அங்கிருந்தவற்றை அடித்து உடைத்ததாகவும் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, அலுவலகத்திலிருந்த 11 பேரும் தப்பியோடியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகங்களை அரவணைக்கும் ஜனாதிபதி வேண்டும்-மன்னார் ஆயர்-

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்;களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையெனவும், போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரம், சமாதானம் கிடைக்கவில்லையெனவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார்தின (கிறிஸ்து பிறப்பு) நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் இன்று அதிகாலை, மன்னார் ஆயர் அருட்கலாநிதி இராயேப்பு ஜோசேப்பு தலைமையில் நடைபெற்றது. நள்ளிரவுத் திருப்பலியை தொடர்ந்து ஆயர் கருத்துக் கூறுகையில், அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது. இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றார்.

 

வெள்ளத்தால் 7 இலட்சம் பேர் பாதிப்பு-

8216FLOOD7கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்க அதிபர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வடக்கே மன்னார் மாவட்டமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும், படுக்கை விரிப்புகளும் அரசின் நிவாரண அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். அடை மழை காரணமாகவும், அனுராதபுரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தோடும் மழை நீர் அங்கிருந்து அருவியாற்றின் ஊடாக மன்னார் மாவட்டத்தை வந்தடைவதனாலும், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பு வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது. அருவியாற்றின் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளநீர் கரைபுரண்டோடுவதனால் மடு ரோட் பகுதியில் இருந்து முருங்கன் நகரை அண்டிய பகுதி வரை கிராமங்களும் வயல் நிலங்களும் காட்டுப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

மாதகல் புனித தோமையர் தேவாலய மாலைநேரப் பள்ளிக்கு கட்டிடம் அமைப்பு- (படங்கள் இணைப்பு)

SAM_2293யாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் மாலைநேரப் பள்ளியினை நடாத்துவதற்கு ஒரு கட்டிடம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியுதவியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான தனது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியினைக் (100,000) கொடுத்து மேற்படி முன்பள்ளிக்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். இந்த நிதியுடனும், மாதகலைச் சேர்ந்த வெளிநாட்டு அன்பர்களின் நிதியுதவியுடனும் மேற்படி முன்பள்ளியின் கட்டிட வேலைகள் இடம்பெற்று தற்போது பூர்த்தியடைந்துள்ளன.  Read more

ஆனைக்கோட்டை மூத்த பிரஜைகள் சங்கத்தின் தண்ணீர் தாங்கி அமைப்பதற்கு உதவி- (படங்கள் இணைப்பு)

SAM_2283யாழ். ஆனைக்கோட்டை மூத்த பிரஜைகள் சங்கத்திற்கு தண்ணீர் தாங்கி அமைத்துக் கொடுப்பதற்காக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளார். மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து இதற்குரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைவர் திரு. பொன்கலன் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (20.12.2014) நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

vaddukottai arasadi road (1) vaddukottai arasadi road (2) vaddukottai arasadi road (6)வட்டுக்கோட்டை அரசடி வீதியானது பன்நெடுங்காலமாக திருத்தப்படாத நிலையில் காணப்பட்து. இவ் நிலை தொடர்பில் அப்பகுதி அம்பாள் சனசமூக நிலையத்தினர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததனைத் தொடர்ந்து தவிசாளர் இவ் விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்தனைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்படட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக ரூபா 100000 ஒதுக்கீடு செய்யப்பட்டது இவ் நிலையில் அப் பகுதி வீதி புனரமைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் தவிசாளர் மேலும் ஏறத்தாள 3இலட்சம் ரூபா ஒதுக்கீட்டினை பிரதேச சபைக்கூடாக மேற்கொண்டு இவ் வீதி முழுமையாக செப்பனிடப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் அழைப்பில் 21.12.2014 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு வீதி வேலைத் திட்த்தினை பார்வையிட்டதற்கு மேலாக மக்களின் வேண்டுகோள்களையும் கேட்டறிந்து கொண்டார். இவ் நினகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ந.பி.ரஜ்குமார், சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

araliyil kaani araliyil18.12.2014 அன்று அராலி பகுதியில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை அப் பகுதி மக்களுக்கு வழங்குவது தொர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினார் இதேவேளை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்குரிய உள்ளுராட்சி வார நிகழ்வுகள் 21.12.2014 அன்று வலி காமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகம் முன்பாக வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் என்பன இடம் பெற்றது. தொடர்ந்து உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் கரப்பந்தாட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.