Header image alt text

பிரான்ஸ் „சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்.

Attentat-Paris-Hebdostrasseபிரான்சில் கேலிச்சித்திரங்களுடன் வெளிவரும் நகைச்சுவை  வார இதழான ‘சார்லி ஹெப்டோ’வின் அலுவலகம் மீது இன்று நண்பகல் முகமூடி அணிந்த இரு துப்பாக்கிதாரிகள் தானியங்கி இயந்திர துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும் ஐந்து பேர் ஆபத்தான நிலையிலும் 20 பேர்வரை காயமடைத்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் போலிஸ் அதிகாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் காரில் Bildschirmfoto-2015-01-07தப்பியோடியுள்ளனர். இவர்களை பிடிக்க பெரும் பொலிஸ் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிந்திய தகவல்களின் படி இச் செயலுடன் மூவர் சம்பத்தப்பட்டுள்தாகவும் தாக்குதலை நடத்தியோர் இனக்கணப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இனம் காணப்பட்டவர்கள் Said Kouachi, Cherif Kouachi வயது 32, 34 பிரான்சில் பிறந்தவர்கள் இவர்கள் சகோதரர்கள் மற்றையவர் Hamid Mourad. வயது 18 இவர் இரந்தர வதிவிடம் இல்லதவர். இவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய கார்  Renault Clio என்றும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். Read more

மரண அறிவித்தல்-

வவுனியா கோவில்புதுக்குளம் ஐந்தாம் ஒழங்கையைச் சேர்ந்த அமரர் சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் இன்று(07.01.2015) புதன்கிழமை நண்பகல அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். வவுனியா இலங்கை போக்குவரத்துக்கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரான அமரர் வசந்தன் அவர்கள் பல்கலைக்கழக வாழ்வை இடைநிறுத்தியதிலிருந்து இற்றைவரை கழகத்தின் செயற்பாடுகளில் தீவிர பங்கினை ஆற்றியவர். அன்னாரது இழப்பை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

 துயர் பகிர்கின்றோம்… suntharalingamமலர்வு : 1961.07.15                        உதிர்வு: 07.01.2015

 அமரர்: சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்)

தோழனே! இனிய நல் நண்பனே!

வசந்தனே!

எம் மக்களின் வசந்தத்திற்காய்

உன் வாழ்நாள் முழுவதையும வழங்கினாய் நீ!

பல்கலைக்கழகப் படிப்பை

பாதியில் விட்டுவிட்டு –

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய

அயராது உழைத்தாய் – நீ!

அகவை ஐம்பத்தினான்காகியும்

இல்லறம் புகமறுத்து

மக்கள் சேவையே நல்லறம் என

உரைத்து வாழ்ந்தவனே…

காலத்தின் கோலத்தால்

கால்தவறி வீழ்ந்து – எமை

கதிகலங்க வைத்துவிட்டு

இடைநடுவில் எங்கு சென்றாய் தோழா?

குரலிழந்த குயில்போல் – நாம்

நலிவடைந்து நிற்கின்றோம்

உன் பிரிவை – எமக்கு

சொல்வதற்கு வார்த்தையில்லை

செய்வதறியாது செயலிழந்து நிற்கின்றோம்

நீ கண்ட கனவு…

நீ கொண்ட லட்சியம்…

நீ செய்த பணிகள்…..

உன் வழியில்; நாம் தொடர்வோம்!!

நண்பனே, நற் தோழனே – உன்னை

பிரிய மனமின்றி

விம்மும் நெஞ்சங்களுடன்

விடை தருகின்றோம்!!!

அமைதியாய் போய்வா…..

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன், கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

07.01.2015

மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தவும்-சர்வதேச மன்னிப்புச் சபை-

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் அரசியல் பங்குபற்றுல் உரிமையை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது தாக்குதல், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனவே மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதே அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி உறுப்பினரது வாகனங்களுக்கு தீவைப்பு, பெலியத்தயில் துப்பாக்கிப் பிரயோகம்-

ஹொரனை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் அஜித் நவகமுவ என்பவரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலொரு வாகனம் அவருடையது என்றும் மற்றொன்று நண்பருடையது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை வீட்டில் காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார். துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் கோரிக்கை-

தனக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவல் சஜித் பிரேமதாச, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சஜித் பிரேமதாச ஆதரவு வழங்கவுள்ளார் என்றும் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது தனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்குங்கள் என்று, தேர்தல் ஆணையாளரிடம் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், ‘இவ்வாறானதொரு நடவடிக்கை தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தடையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியம்-தேர்தல்கள் செயலகம்-

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான விடுமுறையை பெற்றுச்செல்வதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார் அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் இதன்படி வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்காத தனியார் துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

மைத்திரிபாலவின் சகோதரர் பிணையில் விடுதலை-

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான ஷமிந்த சிறிசேன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திம்புலாகல பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான தம்மிக்க நிஷாந்த குமாரகேவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இந்நி;லையில் அவர், பொலிஸில் நேற்று ஆஜராகினார். இதனையடுத்து பொலிஸார் அவரை பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் நுவன் தாரக்க கீநெட்டிகல, பிணையில் விடுவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வு-(Photos)

vali0யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள் 30.12.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2மணியளவில் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டடபத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ..தெட்சணாமூர்த்தி அவர்களும் அவர்களது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வன.பிதா. கலாநிதி. டி.எஸ். சொலமன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக உலக தரிசன நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ஆர்.ஜே. அன்டனி மற்றும் தொழிலதிபர் திரு.ச.சுகந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். 

இவ் நிகழ்வானது வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடாந்து இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து 100ற்றுக்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் வாத்தியம் முழங்க யாழ்பாணக் கல்லூரி சாரணர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விழக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் வித்தியாசாகரம் சிவஸ்ரீ. சபா. வாசுதேவக்குருக்கள் மற்றும் தென் இந்திய திருச்சபையின் மூளாய் தேவாலய பங்குத்தந்தை வண பிதா. செபஸ்டியன் அன்டனி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தலைமை உரையினை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கள் வழங்கினார்.
Read more