பிரான்ஸ் „சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்.

Attentat-Paris-Hebdostrasseபிரான்சில் கேலிச்சித்திரங்களுடன் வெளிவரும் நகைச்சுவை  வார இதழான ‘சார்லி ஹெப்டோ’வின் அலுவலகம் மீது இன்று நண்பகல் முகமூடி அணிந்த இரு துப்பாக்கிதாரிகள் தானியங்கி இயந்திர துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும் ஐந்து பேர் ஆபத்தான நிலையிலும் 20 பேர்வரை காயமடைத்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் போலிஸ் அதிகாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் காரில் Bildschirmfoto-2015-01-07தப்பியோடியுள்ளனர். இவர்களை பிடிக்க பெரும் பொலிஸ் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிந்திய தகவல்களின் படி இச் செயலுடன் மூவர் சம்பத்தப்பட்டுள்தாகவும் தாக்குதலை நடத்தியோர் இனக்கணப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இனம் காணப்பட்டவர்கள் Said Kouachi, Cherif Kouachi வயது 32, 34 பிரான்சில் பிறந்தவர்கள் இவர்கள் சகோதரர்கள் மற்றையவர் Hamid Mourad. வயது 18 இவர் இரந்தர வதிவிடம் இல்லதவர். இவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய கார்  Renault Clio என்றும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். பாரிசிலிருந்து வெளிவரும் இந்த சஞ்சிகை கடந்த காலங்களில் தீவிரவாதிகளால் இலக்குவைக்கப்பட்டிருந்தது. தாக்குதலை நடத்தியவர்கள் இறைதூதரை நிந்தித்தற்கு பழி தீர்த்துவிட்டோம் என்று குரல் எழுப்பியவாறு தப்பித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு வார இதழான. „சார்லி ஹெப்டொ’ டென்மார்க் பத்திரிகையொன்றின் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை 2006ம் ஆண்டில் மறு பிரசுரம் செய்து சர்ச்சைக்குள்ளானது. 2011ம் ஆண்டிலும் முகமது நபியின் கேலி சித்திரம் ஒன்றை பிரசுரித்தது இந்த காரணங்களால் சஞ்சிகையின் அலுவலகங்கள் முன்பும் தாக்குதலுக்கு உள்ளாயின. „இன்னசன்ஸ் ஒப் முஸ்லீம்ஸ்’ என்ற படம் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், இந்த சஞ்சிகை முகமது நபியை நிர்வாணமாகக் காட்டும் படங்களை பிரசுரித்தது. பிரான்சின் இனவெறிக்கெதிரான சட்டங்களின் கீழ் இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலும், சார்லி ஹெப்டோ சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் பலவற்றை தொடர்ந்தும் பிரசுரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். சுவிசிலும் பல நூற்றக்ககணக்கான மக்கள் இச்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

B6w559XCcAIRGyXfrontparis00007