மரண அறிவித்தல்-
வவுனியா கோவில்புதுக்குளம் ஐந்தாம் ஒழங்கையைச் சேர்ந்த அமரர் சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் இன்று(07.01.2015) புதன்கிழமை நண்பகல அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். வவுனியா இலங்கை போக்குவரத்துக்கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரான அமரர் வசந்தன் அவர்கள் பல்கலைக்கழக வாழ்வை இடைநிறுத்தியதிலிருந்து இற்றைவரை கழகத்தின் செயற்பாடுகளில் தீவிர பங்கினை ஆற்றியவர். அன்னாரது இழப்பை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.
துயர் பகிர்கின்றோம்… மலர்வு : 1961.07.15 உதிர்வு: 07.01.2015
அமரர்: சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்)
தோழனே! இனிய நல் நண்பனே!
வசந்தனே!
எம் மக்களின் வசந்தத்திற்காய்
உன் வாழ்நாள் முழுவதையும வழங்கினாய் நீ!
பல்கலைக்கழகப் படிப்பை
பாதியில் விட்டுவிட்டு –
அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய
அயராது உழைத்தாய் – நீ!
அகவை ஐம்பத்தினான்காகியும்
இல்லறம் புகமறுத்து
மக்கள் சேவையே நல்லறம் என
உரைத்து வாழ்ந்தவனே…
காலத்தின் கோலத்தால்
கால்தவறி வீழ்ந்து – எமை
கதிகலங்க வைத்துவிட்டு
இடைநடுவில் எங்கு சென்றாய் தோழா?
குரலிழந்த குயில்போல் – நாம்
நலிவடைந்து நிற்கின்றோம்
உன் பிரிவை – எமக்கு
சொல்வதற்கு வார்த்தையில்லை
செய்வதறியாது செயலிழந்து நிற்கின்றோம்
நீ கண்ட கனவு…
நீ கொண்ட லட்சியம்…
நீ செய்த பணிகள்…..
உன் வழியில்; நாம் தொடர்வோம்!!
நண்பனே, நற் தோழனே – உன்னை
பிரிய மனமின்றி
விம்மும் நெஞ்சங்களுடன்
விடை தருகின்றோம்!!!
அமைதியாய் போய்வா…..
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன், கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
07.01.2015