வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வு-(Photos)

vali0யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள் 30.12.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2மணியளவில் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டடபத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ..தெட்சணாமூர்த்தி அவர்களும் அவர்களது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வன.பிதா. கலாநிதி. டி.எஸ். சொலமன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக உலக தரிசன நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ஆர்.ஜே. அன்டனி மற்றும் தொழிலதிபர் திரு.ச.சுகந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். 

இவ் நிகழ்வானது வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடாந்து இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து 100ற்றுக்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் வாத்தியம் முழங்க யாழ்பாணக் கல்லூரி சாரணர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விழக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் வித்தியாசாகரம் சிவஸ்ரீ. சபா. வாசுதேவக்குருக்கள் மற்றும் தென் இந்திய திருச்சபையின் மூளாய் தேவாலய பங்குத்தந்தை வண பிதா. செபஸ்டியன் அன்டனி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தலைமை உரையினை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கள் வழங்கினார்.

இவ் நிகழ்வினைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபையின் 2014ம் ஆண்டின் மக்கள் அபிவிருத்திகள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய வலி மேற்கின் வசந்தம் நூல் பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதம விருந்தினர் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ..தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடாந்து நூல் ஆய்வுரையின் மூளாய் ஆசுகவி சுப்பிரமணியம் அவர்கள் வழஙகினார். தொடந்து கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரை இடம்பெற்றது இதனைத் தெடர்ந்து உள்ளுர் ஆட்சி சேவையில் இருபத்தைந்து வருடங்கள் பூர்த்தி செய்த உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது பிரதேச இசைக்கலைஞர்ள் 85 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

தெடாந்து உள்ளுர்ஆட்சி வாரம் தொடர்பில் நடாத்தப்பட்ட பேடடிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடாந்து மலேசிய இசைக்கலைஞர் சைலேந்திர சர்மா அவர்களின் இசை வேள்வி நடைபெற்றது. இதனைத் தெடாந்து மலேசிய இசைக்கலைஞர் சைலேந்திர சர்மா அவர்க்கு தவிசாளர் முன்னிலையில் இந்திய துனைத் தூதுவரால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதனைத் தெடாந்து தவிசாளர் முன்னிலையில் இந்திய துணைத் தூதுவரின் வருகையைப் பாராட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வண.பிதா. கலாநிதி. டி.எஸ். சொலமன் அவர்கள் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்..தெட்சணாமூர்த்தி அவர்கட்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து தவிசாள் இந்திய துணைத் தூதரின் பாரியாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து துணைத் தூதுவர் திரு.எஸ்..தெட்சணாமூர்த்தி அவர்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வண.பிதா. கலாநிதி.டி.எஸ். சொலமன் அவர்கா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதன் பின்னர் இந்திய துணைத் தூதர் வலி மேற்கு பிரதேச நூலகத்திற்கு நூல்கள் சிலவற்றை வழங்கினார். இதன் பின்னர் பிரதேச முதியோர்கள் 40 பேர் கௌரவிக்கப்பட்டார். இவ் நிகழவில் சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் வித்தியாசாகரம் சிவஸ்ரீ. சபா. வாசுதேவக்குருக்கள் ஆசியுரை வழங்கும்போது இவ் நிகழ்வானது அற்புதமான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு பெண் தவிசாளராக இப் பிரதேசத்தினை வழிகாட்டிச் செல்லும் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது செயற்பாடு போற்றத்தக்கது. இவ் நிகழ்வின் வாயிலாக்; இவ் பிரதேசத்தில் உள்ள பலரும் இன்று கௌரவிக்கப்படுவது பாராட்டத்தக்கது போற்றத்தக்கது.

தென் இந்திய திருச் சபையின் மூளாய் தேவாலய பங்குத் தந்தை வண பிதா. செபஸ்டியன் அன்டனி அவர்களும் ஆசியுரை வழங்கும் போது. இன்று இப் பிரதேசம் புதுப் பொலிவு பெறுகின்றது. என்றுமே இல்லாத வகையில் பிரமாண்டமான வகையில் வரவேற்பு எமமை பிரமிக்க வைத்தது. இன்று இவ் சபையின் தலைவராக ஒரு பெண் இவ்வளவு சிறப்பாக பணியாற்றுவது போற்றத்தக்கது . நான் தவிசாளரின் செயற்பாடுகளை அவதானித்து வருகின்றேன்

அண்மையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள இடம்பெயந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தபோது உடனடியாக செயற்படடு மக்களுக்கான நிவாரணத்ததை தன்னால் இயன்றவகையில் மேற் கொண்டு பூர்த்தி செய்தமை பாராட்டத்தக்கது. இரவு பகல் என்று பாராதாது அரச உதவிகளுக்கு மேலாக மக்களுக்கு வழங்கிய உதவிகள் போற்றத்தக்கது. ஒரு முன்னுதாரணமான் தலைவராக செயற்படுவது குறிப்பிக் கூடிய ஒன்றாகும். இவருடைய பணி மேலும் சிறக்க இறைவனைப் பிரார்த்திப்பதோடு இவருக்கு ஒத்துளைப்பாக இப் பிரதேச சபையில் கடமையாற்றும் உறுப்பினர்கள மற்றும் உத்தியோகஸ்தர்களுக்காகவும் இறைவனை பிராhத்திக்கின்றேன் என குறிப்பிட்hர்.

இவ் நிகழ்வில் தலைமை உரையாற்றிய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது., தாய் நாட்டின் விடுதலைக்கு தம்மை அர்பணித்து தியாகிகள் ஆகியோரை வணங்குகின்றேன். அன்பிற்கும் மதிப்புக்குகும் உரிய ஆசியுரை வழங்க வந்திருக்கும் சமயப் பெரியேர்களே, எமது நிகழ்விற்கு வருகை தந்துள்ள இந்திய துணைத் தூதுவர் அவர்களே யாழ்பாணக் கல்லூரி அதிபர் அவர்களே வேள்விசன் அமைப்பின் பிரதிநிதிகளே இங்கு வருகை தந்துள்ள எமது அன்பு உள்ளங்களே உங்கள் அணைவருக்கும் எனது முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று எமது பிரதேச சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இணைந்த மக்களுக்கு தெளிவு படுத்ததும் ஒர் பொண்ணான நாள் ஆகும் இந்த வகையில் இந்த நிகழ்வுக்கு தலமை தாங்கு வதில் மகிழ்வடைகின்றேன்.

உள்ளுராட்சி மன்றத்தின் 2011ம் ஆண்டுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நாம் நம்மால் ஆன சேவைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்கி வருகின்றோம். நாம் இங்கு ஆட்சிக்கு அமர்த்தப்பட்ட போது எம் முன்னே பல சவால்கள் அமைந்திருந்தது. அத்தடைகளைத் தாண்டி மக்கள் தேவைகளை இனங்கண்டு எம்மால் இயன்ற பணிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றோம். இதற்கும் அப்பால் ஆட்சியில் உள்ள அரச நிர்வாகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடைகளை உருவாக்கி அதன் வாயிலக எமது செயற்பாடுகளுக்கு தடை விதித்த போதிலும் அத்தடைகளுக்கும் அப்பால் எமது சேவைகள் மக்களுக்கு தொடர்த வண்ணம் உள்ளது.

எமக்கு மக்கள தந்த ஆணை என்பது சலுகைக்கானது அல்ல உரிமைக்கானது என்பது சகலரும் அறிந்த விடயம். சலுகைகளுக்கு நாம் பணிந்தால் எமது கடந்த கால வரலாறு பெய்ப்பிக்கப்டடு விடும். அந்த நிலையில் எமது வளங்களை உச்ச அளவில் பயன் படுத்தி மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ளோம் .அரச் அழுத்தங்கள் மத்தியில் உத்தியோகஸ்தர்கள் கடமை ஆற்ற வேண்டிய நிலை திணிக்கப்பட்டு உருவாக்கப்படடுள்ளது. இவ்வாறான நிலை மக்கள் நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரிய பின் அடைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின் இவற்றில் மாற்றங்கள் நிகழலாம் எனக் கருதியிருந்த வேளையிலும் மாற்றங்களை அவதானிக்க முடியாத நிலையே தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ் நிலையில் நாங்கள் உத்தியோகஸ்தர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக் முயலவில்லை 

ஒரு போதும் முயலவும் மாட்டோம். அபிவிருத்தி நடவடிக்ககைகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பகின்றோம். ஆனாலும் நாமே முயன்று நம்மால் நமது மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றி வருகின்றோம். யாழ் மாவட்டத்திலேயே அரச சார்பு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் வளங்களை வழங்கி கட்டமைப்பை விருத்தி செய்த நிலையில் எமது ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் புறக்கணிக்கப்பட்டு அபிவிருத்தியில் பின்நிலை ஏற்பட்ட போதும் நாம் நமது பிரதேச மக்கள் நோக்கிய அபிவிருத்தியில் எமது இலக்குகளை நோக்கிய நகர்வை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது பிரதேசம் 25 கிராம சேவகர் பிரிவுகளையும் 92 கிராமங்களையும் கொண்டுள்ளது. இவ் நிலையில் பிரதேச ரீதியான பாகுபாடு இன்றி சகல நிலைகளிலும் எம்மால் ஆன அபிவிருத்திகளை வழங்கி வருகின்றோம். எமது பிரதேச மக்க தொடர்பில் பல தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்ககள் ஏராளமானவை காணப்படுகினறது. இவ் தேவைகளில் ஏதிர் வரும்; ஆண்டில் 60 வீதமானவை நிறைவுக்கு கொண்டு வரப்படும்.

இன்று உங்கள் மத்தியில் வெளியிடப்பட உள்ள எமது பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் நோக்கிய அபிவிருத்தி செயல் திட்ங்கள் தொடர்பிலான செயற்பாடுகளை சுமந்து வரும் வலி மேற்கின் வசந்தம் 3 வது நூல் மக்களுக்கு வெளிப்படையாக நாம் ஆற்றிவரும் பணிகளை எடுத்துக் காட்டும்.

எமது செய்பாடுகளை மேலும் வினைத்திறமை உள்ளதாக மாற்ற போதுமான ஆளனி அற்ற நிலை காணப்படுகின்றது. இவ் நிலையில் சுகாதாரம் மற்றும் துப்பரவு ஏற்பாடுகள் தொடர்பில் முழுமையான சேவைகளை வழங்க முடியாத நிலை உள்ளது. இவ் நிலை மிக நீண்ட காலமாக உள்ளது. இவ் விடயங்கள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியத நிலை உள்ளது. இதே வேளை எமது இனத்தின் இருப்பை முற்றாக அழிக்கும் நோக்கில் பல வகையிலும் இளைஞர்கள் மத்தியில் பல கவனக்கலைப்பான்கள் உருவாக்கப்ப்டு அதன் வாயிலாக திட்டமிட்ட கலச்சார சீரளிவு நவடிக்கைகள் ஏற்கடுத்தப்ப்ட்டு உள்ளது. இவ் நிலையில் எம் இனத்தின் இருப்பை தகர்த்தெறியும் திட்டங்கள் எதிரிகளால் மடடுமல்ல துரோகிகளாலும் ஏற்படுததபபடு வரும் நிலையை இங்கு குறித்துக் காட்ட முடியும்.இந்த நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும். என குறிப்பிட்டார்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர் உரையாற்றும் போது இன்றைய இந்த விழா எனக்கு மிக பெருமையயாகவும் கௌரவமாகவும் உள்ளது. இந்த நிகழ்வு தவிசாளரால் உரிய தமிழ் முறையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்ப்டமை வரவேற்கக்கூடியது ஒன்றாகும். இன்று எமது பிரதேசத்தில் இவவாறான தமிழ் கலாச்சரம மருவி வருவது மன வேதனையைத் தருகின்றது. இதற்கும் அபபால் இஙகு இவவளவு தழிழ் பண்பாடடுடன் இவ் விழா நடை பெறுவது மேலும் சிறப்பான ஒன்றக உள்ளது. இதற்கும் அப்பால் இவ விழாவில் பிரதேச கலைஞர்கள் கௌரவிக்கப்பட நிலை என்பது மற்றும் ஓர் சிறப்பான நிலையினை சுட்டிக் காட்டியுள்ளதுஇ. இனறு இவ்வறான இசைக்கலை கூட வீழ்ச்சி அடைந்து செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளமை மிக மனவேதனை தரும் ஒன்றாகவே உள்ளது. இவற்றை மெம் படுத்த நாம் ஒர் கலாச்சார மத்திய நிலையம் ஒன்றையும் நிறுவி உள்ளோம்.

Vali1 Vali2 vali3 vali4 vali5 vali6 vali7 vali08 vali8 vali9 vali10 vali11