மைத்திரி நிச்சயம் வெல்வார் – மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் மக்களை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தோம். அதற்கமைய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காக சென்று வருகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.
சனநாயகத்துக்காக வாக்களிக்கவில்லை-சுரேஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையில், இது ஜனநாயகத்துக்கான ஜனாதிபதி தேர்தல் இல்லை. எங்கள் வாக்குகளை வேறு ஒருவர் பயன்படுத்தக்கூடாது என்ற வகையில் நாங்கள் வாக்களித்து வருகின்றோம். ஆட்சி மாறினால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. பொது எதிரணி ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டவுள்ளதாக கூறுகின்றது. அது தெற்கில் மட்டுமா அல்லது வடக்கிலும் நிலைநிறுத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது எனத்தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் காலை முதல் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கள்ளவாக்கு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது மக்கள் சுறு சுறுப்பாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன –
அதே நேரம் மத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு கெப் ரக வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155யையும்; . குறித்த வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்;.
மேலும் உடுகமவில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் வாக்குச்சீட்டுகள் போன்ற ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும். அவை எவ்வாறான ஆவணங்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
தேர்தல் அணையாளர் தெரிவித்தார்.
வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின் தலையில் சுட வேண்டும் என்றார்
பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்டக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.$
கைக் குண்டு வீச்சு
யாழ்.பருத்தித்துறை அல்வாய் சிறீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாகவும். இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார். இது தொடர்பில் கபே அமைப்புக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கபே அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். மேலும் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் இருந்து பல கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள்-
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது. இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00மணி வரையில் வாக்களிக்க முடியும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. காலையில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு மேல் மாகாணத்தில் இன்றுகாலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தவுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் மக்கள் காலை நேரத்தில் மந்தகதியிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மேல்மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தவுடனேயே கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.