வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. மேலும் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுச் செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இதேவேளை 3 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகளில், மாத்தளையில் நுவரெலியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 70 வீத வாக்குப் பதிவுகளும் அம்பாறையில் 50 வீத வாக்குப் பதிவுகளும் கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் 75 வீத வாக்குப் பதிவுகளும் பதுளையில் 60 வீத வாக்குப் பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 50 வீத வாக்குப் பதிவும், கண்டியில் 65 வீத வாக்குப் பதிவும் கிளிநொச்சியில் 55 வீத வாக்குப் பதிவும் பதிவாகியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 2.30 மணிவரை 61 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.