sutha

அமரர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)

மலர்வு: 17.04.1968 (புங்குடுதீவு)                    உதிர்வு: 08.01.2015 (சுவிஸ்லாந்து)

துயர் பகிர்வோம்

பாசமிகு தோழனே!

எங்கள் பயணத்தில்

உனது பணியும் பாரியதுதான்..

பாதியிலே  –  நீ

எமைவிட்டு செல்வதுதான்

பாரிய வேதனையைத் தருகிறது

உன்னுடன் தோழமையோடு நேசமாய் இருந்த – நாமின்று

உன் இழப்பால் துயருற்று நிற்கின்றோம்

உன் நினைவும் உன் பணியும்

எம் அமைப்பின் வரலாற்று ஏடுகளில்

என்றென்றும் நிலைத்திருக்கும்….

 
அன்னாரில் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களோடு, நாமும் எம் துயரை பகிர்ந்துகொள்வதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகளையும் செலுத்தி நிற்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு-

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் ,நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமது நன்றிகளை இதன்போது குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, “அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணையாளர், முப்படையினர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி. மஹிந்த ராஜபக்ஷவுக்கு என் விஷேட நன்றிகள், எனக் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் முடிவுகளை அடுத்து, யாருக்கும் மனதளவிலும் வேதனை அளிக்க வேண்டாம் என மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா-

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த முறையில் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அமைதியான முறையில் சுயாதீனமான தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையாளர், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே பார்வையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்-

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன. வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார். இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,

வடமாகாணம்

யாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். வன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர் . திகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

மத்திய மாகாணம்

மாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.

தென் மாகாணம்

காலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமத்திய மாகாணம்

பொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றில் செல்லுபடியான வாக்குகள் – 12,123,452 (98.85%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 140,925 (1.15%)

ஜனாதிபதி தேர்தல் 2015: அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகளின் படி 

மகிந்தராஜபக்ஷ 11,864 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 14,976 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 14,163 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 16,116 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,879 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,270 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 10,382வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொலனறுவை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மைத்திரிபால சிறிசேன 9,480 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மகிந்தராஜபக்ஷ 4,309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஹம்பாந்தொட்ட மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 10,295 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 5,620 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மாத்தளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,683 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 8,394 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,281 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 7,513 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பதுளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,115 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,031 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல்மூல வாக்களிப்பின்படி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளை பெற்றுள்ளார்
மஹிந்த ராஜபக்ச 4607 வாக்குகளை பெற்றுள்ளார்.