மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமான விமானம் மீட்கப்பட்டது

flightமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறியரக விமானமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை வெளிக்கள ஒளிபரப் உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்ற அழைப்பாணை

mahinda_rajapakseசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், 12.01.15திங்கட்கிழமை அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு மேற்படி நால்வருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல்

SLFPமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கினிகத்ஹேன பிரதேச செயலாளர் காரியாலத்துக்கு சொந்தமான அம்பேகமுவ கேட்போர் கூட்டம் அமைந்துள்ள கட்டடத்தொகுதியிலுள்ள அறையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரக்கட்சியின் காரியாலயமே அம்பேகமுவ பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி பிரதான அமைப்பாளர் டப்ளியு.ஜி. ரணசிங்க, இந்த காரியாலயத்தை நடத்தி சென்றதுடன் தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்காக பெருந்தொகையான பொருட்கள் இந்த அறையில் இருந்ததாக பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.