எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் -ஜே.வி.பி

JVPஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சாதாரண ஓர் அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள தமது கட்சி விரும்பவில்லை. புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசியல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென விரும்பிய போதிலும் அவர்கள் அரசியலில் ஈடுபடவில்லை எனவும். ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவ்வாறானவர்கள் சுதந்திரமாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களை ஒன்றிணைத்து புதிய ஓர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். அவ்வாறான ஓர் கூட்டமைப்பை அமைத்துக்கொள்ள சாத்தியம் கிட்டாவிட்டால் ஜே.வி.பி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்யிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை காணப்பட்ட போதிலும், அவற்றை தேர்தல்களில் வாக்கு வங்கிகளாக மாற்றிக்கொள்ளவில்லை சுட்டிக்காட்டியதுடன். அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி ?

northern_provincial_council1வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே வகிக்கிறார். ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஈ.பி.டி.பி கமல் கொலைக் குற்றச்சாட்டில் சிறை சென்றதால் பதவியிழந்ததை தொடர்ந்து, தவராஜா இந்தப்பதவிக்கு தேர்வானார். இப்பொழுது, ஈ.பி.டி.பி கட்சியிடமிருந்தே எதிர்க்கட்சி தலைமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எதிர்க்கட்சி தரப்பில் ஈ.பி.டி.பியில் இருவரும், சுதந்திரக்கட்சி தரப்பில் போட்டியிட்ட சிங்கள உறுப்பினர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூவரும் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குறிவைத்துள்ளது. அதற்கு ஆதரவளிக்க, சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களின் சத்தியக்கடதாசிகளுடன் எதிர்வரும் 16ம் திகதி தவிசாளரை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிவ்கான் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் உட்பட 12 பேருக்கு எதிராக ஜேவிபி முடைப்பாடு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச, ஊழல், மோசடிகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 12 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோர் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்துகொண்டு இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே, ஜே.வி.பி.யினர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். அதேபோன்று, இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவரையும் இந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜே.வி.பி, தனது முறைப்பாட்டில் கோரியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வர்த்தக மற்றும் வாணிபத்துறை முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்டமிடல் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட 11பேரும் கார்ல்டன் சுப்பர் ஸ்போட் க்ளப் நிறுவனமுமே இந்த முறைப்பாட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.