தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருப்பம் 

suvaminathanமீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது தெரிவித்ததாவது.
தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் சுரேஷ் பிரேமச்சந்திர மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகவும். மேலும் சில நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவை சந்திக்கவுள்ளதாகவும்.
வடக்குஇ கிழக்கு பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு கிடைக்குமெனவும் மேலும்இ பெருந்தோட்ட பகுதிகளிலும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும். ‘100 நாட்கள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பது சாத்தியமானதல்ல. ஆனால் என்னால் முடியுமான அளவுக்கு பல பிரச்சினைகளை தீர்க்க எனது முழு சக்தியையும் பிரயோகிப்பேன்’ எனவும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது எனவும் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை

thaiதமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறியதாவது.
விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும்.
‘உங்களின் ஏக்கம் எனக்கு நன்கு தெரியும். உங்கள் கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. நான் இந்தப் பதவியை ஏற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை காலமும் உங்கள் ஏக்;கங்களை சரியாக தீர்த்து வைக்க முடியவில்லை. காலமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ஆனால், இப்போது காலம் கனிந்திருக்கிறது.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அந்த வழி நிச்சயம் உங்களுக்குப் பிறக்கும். புதிய மாற்றத்துக்காக அனைவரும் ஒத்துழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்கு அதிகமாகவிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் நல்லதொரு செய்தியையும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கிறார்கள். எமது உறவுகளை எங்களுடன் வாழ வழிசெய்யுங்கள் என்பதே அந்த செய்தி. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் நீண்டகாலமாக இங்கிருக்கிறீர்கள். இவர்களின் நிலை தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். அவர்களின் ஆலோசனைக்கமைய, உங்களின் விடுதலை துரிதப்படுத்தப்படும் என்ற உறுதியை இன்றைய தைத்திருநாள் பரிசாக உங்களுக்கு நான் வழங்குகிறேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர்களின் ஆசையினை தீர்ப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். ஆகையினால், எதிர்காலத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறேன் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்  சந்திரானந்த பல்லேகம கூறினார்.

புதிய அரசாங்கம் 19ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும்

parlimentஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர்.
இதேவேளை,  முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்  இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அந்த ஐவரும் இணைந்தால், நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிப்பர் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.