தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்

sapaiதேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க ஆகிய பதினோரு பேர் பணியாற்றுவர்.

மஹிந்த ராஜபக்ஷ செய்தது பாரிய தவறு என விமர்சித்துள்ளார் – வாசுதேவ நாணயக்கார

vasuஜனாதிபதி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தமை அரசியல் ரீதியான தவறு. உடனடியாக ஆட்சியை விட்டுக் கொடுத்தமை பாரிய தவறாகும். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஏனைய கூட்டணி கட்சிகளுடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு மிக அவசர அவசரமாக பிரதமர் ஒருவரை நியமித்தமை வழமைக்கு மாறானது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தங்களுக்காக வாக்களித்த பெரும் எண்ணிக்கையிலான கட்சி அதரவாளர்களை உதாசீனம் செய்துள்ளது.

கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விட்டுக் கொடுத்த விதம் தவறானது.

5.7 மில்லியன் மக்கள் நம்பிக்கை வைத்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், தலைமைத்துவத்தை ஒப்படைத்து மைத்திரிபாலவிடம் சரணடைந்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் விமர்சனம் செய்துள்ளதுடன்.

தேசிய அரசாங்கம் என்ற  கோட்பாட்டை இடதுசாரி கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.