Header image alt text

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா-

IMG_5681வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றுகாலை (19.01.2015) 9மணியளவில் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிமனையைச் சேர்ந்த திருமதி .N.கிரேனியர், ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சு.தவபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி. உமா இராசையா, பிரதி அதிபர் திருமதி. க.பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி கால்கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு. கண்ணதாசன், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் சஞ்சீ, நிகேதன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.PhotosRead more

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்-

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விபரம் வருமாறு,

01.மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் – என்.ரூபசிங்க
02.கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர்,இளைஞர் மற்றும் கலாசாரம் – கே.லியனகே
03.பொது பணிப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அவலுவல்கள் – கே.பி.தென்னகோன்
04.உள்விவகார மற்றும் மீன்பிடி – ஏ.பி.பொரலெஸ்ஸ
05.உணவு பாதுகாப்பு – ஜே.பி.சுகததாஸ
06.வெளிவிவகாரம் – சி.வாகிஸ்வரா
07.புத்த சாசன, பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, ஜனநாயக ஆட்சி – ஜே.ததல்லகே
8.பெருந்தோட்டக் கைத்தொழில் – ஏ.எம் ஜயவிக்ரம
09.நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு – கே.ஹெட்டியாராச்சி
10.மின்வலு மற்றும் சக்தி – M.S. பட்டகொட
11.சுகாதார மற்றும் சுதேச – D.M.R.B. திசாநாயக்க
12.நீர்ப்பாசன மற்றும் விவசாயம் – B.விஜேரத்ன
13.நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு – யு.ஆர்.செனவிரத்ன
14.காணி – I.H.K மஹாநாம
15.வீடமைப்பு மற்றும் சமுர்த்தி – P.H.L. விமலசிறி பெரேரா
16.நீதி மற்றும் தொழில் உறவுகள் – W.F. கமலினி டி சில்வா
17.சுற்றுலா மற்றும் விளையாட்டு – M.I.M.ராபிக்
18.துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து – L.P.ஜயம்பதி
19.கைத்தொழில் மற்றும் வணிகம் – W.H.கருணாரத்ன
20.தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி – வி.சிவஞானசோதி
21.மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் – ஆர்.நடராஜபிள்ளை
22.கல்வி – உபாலி மாரசிங்க
23.வெளிநாட்டு வேலைவாய்ப்பு – G.S.விதானகே
24.சமூக சேவைகள் மற்றும் கால்நடைவளம் – D.K.R. ஏக்கநாயக்க
25.மகளிர் விவகாரம் – திருமதி. W.S. கருணாரத்ன
26.முஸ்லீம் மத அலுவல்கள் & தபால் – அப்துல் மஜீத்

இராஜாங்க அமைச்சுக்கள்

27.கலாச்சாரம் – திருமதி H.D.S. மல்காந்தி
28.கல்வி – டி. நாணயக்கார
29.சிவில் விமான சேவை – டி.சரணபால
30.மின்வலு மற்றும் சக்தி – H.M.B.C.ஹேரத்
31.கடற்றொழில் – நிமல் தர்மசிறி ஹெட்டியாராச்சி
32.சிறுவர் அலுவல்கள் விவகாரம் – எஸ்.எஸ் மியானவல
33.உயர் கல்வி – பி.ரணபெரும
34.பாதுகாப்பு – A.P.G.கித்சிறி
35.பெருந்தோட்டக் கைத்தொழில் – திருமதி ஆர்.விஜயலெட்சுமி
36.இளைஞர் அலுவல்கள் – திருமதி ND.சுகததாச

ஆட்சி மாற்ற அறிகுறி கிழக்கு மாகாணசபையில்

east makanamஇலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களை கூட்டாக சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்காக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு தடவைகள் பேச்சுக்கள் நடந்துள்ளபோதிலும், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ள நிலையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது. Read more

பைஸர் முஸ்தபா, ரோசி சேனாநாயக்க கடமைகள் பொறுப்பேற்பு-

faiserroshi senanayakeவிமான சேவைகள் இராஜங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். பத்தரமுல்லை- செத்சிரிபாயவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக பைஸர் முஸ்தபா பதவி வகித்திருந்தார். இதேவேளை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். செத்சிரியாபவில் உள்ள சிறுவர் விவகார அமைச்சு அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பளராகவும் ரோஸி சேனாநாயக்க செயற்பட்டு வருகின்றார். இதேவேளை ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கண்காணிப்பு அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை-

எந்த தருணத்திலும் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால், அதன்பொருட்;டு தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்புகள் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அடுத்த தேர்தலில் வாக்களிப்பின்போது தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இதைவிட மேலதிக வாய்ப்புகளை வழங்க முடியும், 100 நாட்கள் அல்ல 10 நாட்களிலும் தேர்தல் நடத்த எம்மால் முடியும். இன்று தேர்தல் வைக்கவேண்டும் என்று கோரினாலும் எம்மால் தேர்தல் ஒன்றுக்கு சொல்ல முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை ஆளுநர் பதவி விலகல்-

மத்திய மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் ஆளுநராக 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகின்றது. டிக்கிரி கொப்பேகடுவ கண்டி மாநகர சபையின் அமைச்சராகவும் இருந்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தாயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது சட்டதிருத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை-வெங்கையா நாயுடு-

13th amentmentஇலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கூறியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவையும் சீனாவையும் மோதவிட நினைத்தார் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்து. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதலே நல்ல நட்பு இருந்தது. அது தொடர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழர்கள் நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முயற்சியால் ஏற்பட்ட இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா என்றும் மாறவில்லை என அவர் கூறியுள்ளார்.

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் இடைநிறுத்தம்-

northern highwayவடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையானது, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை அமுலாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.