வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா-

IMG_5681வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றுகாலை (19.01.2015) 9மணியளவில் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிமனையைச் சேர்ந்த திருமதி .N.கிரேனியர், ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சு.தவபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி. உமா இராசையா, பிரதி அதிபர் திருமதி. க.பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி கால்கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு. கண்ணதாசன், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் சஞ்சீ, நிகேதன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.Photos

IMG_5627IMG_5628IMG_5629IMG_5631IMG_5632IMG_5633IMG_5635IMG_5650IMG_5667IMG_5671IMG_5675IMG_5676IMG_5679IMG_5681IMG_5688IMG_5702IMG_5725IMG_5741IMG_5768IMG_5742