13வது சட்டதிருத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை-வெங்கையா நாயுடு-

13th amentmentஇலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கூறியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவையும் சீனாவையும் மோதவிட நினைத்தார் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்து. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதலே நல்ல நட்பு இருந்தது. அது தொடர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழர்கள் நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முயற்சியால் ஏற்பட்ட இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா என்றும் மாறவில்லை என அவர் கூறியுள்ளார்.