மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு, வறிய குடும்பத்திற்கு நிதியுதவி-
நுவரெலியா, தலவாக்கலை லோகித் தோட்டத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் கடந்த 16.01.2015 வெள்ளிக்கிழமை அன்று அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி அப்பியாசக் கொப்பிகள் லோகித் தோட்டத்தின் கோயில் பரிபாலன சபையின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. இதேவேளை தலவாக்கலை லோகித் தோட்டத்தைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வறுமைக்கோட்டின்கீழுள்ள நான்கு பிள்ளைகளின் தாயாரான 39வயதுடைய சுரேஸ் பெத்தாயி என்பவருக்கு கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் கடந்த 15.01.2015 வியாழக்கிழமை அன்று 10,000 ரூபாய் நிதியுதவி தலவாக்கலை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி உதவிகள் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன.