வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி திறந்துவைக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)
வவுனியா கோவிற்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலினால் அமைக்கப்பட்ட கோவிற்குளம் சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி இன்று(21ஃ01ஃ2015) காலை 10 மணியளவில் நல்லை ஆதினம் இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகளால் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்இ தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மத்திய குழு உறுப்பினரும்இ வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும்இ வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு)இ தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும்இ வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும்இ கோவிற்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)இதமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) முல்லை இணைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்)இ சமூக சேவை உத்தியோகஸ்தர் திரு எஸ்.எஸ்.வாசன்இ சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் திரு. கெனடி இ முதியோர் பராமரிப்பு உத்தியோகஸ்தர் திரு கிருபாஇ சட்டத்தரணி தயாபரன்இ தமிழ்மணி அகளங்கன்இ சமூக சேவகர் சேனாதிராசாஇ சமய பெரியார்கள்இசமூக ஆர்வலர்களான திரு முத்தையா கண்ணதாசன்இ சந்திரகுமார் (கண்ணன்) கோவில்குளம் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள்இ சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.