Header image alt text

புளொட் ஜெர்மன் கிளைத் தோழர்களால் புகைப்படக் கருவி அன்பளிப்பு-

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளைத் தோழர்களினால் கழகத்தின் ஊடகப் பிரிவுக்கு புகைப்படக் கருவியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி புகைப்படக்கருவி கடந்த 13.01.2015 செவ்வாய்க்கிழமை அன்று புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் புதிய பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

pathukappuஇலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பலர் புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யு.டி பஸ்நாயக்கவை பாதுகாப்பமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இச் சந்திப்பில் சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்னல் லி செங்லின், அவுஸ்திரேலியாவிற்கான உயர் ஸ்தானிக அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஜேஸன் ஸடியர்ஸ்-, பங்களாதேஷ் உயர் ஸ்தானிக அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஷாஹ் அஸ்லம் பர்வஸ் ,இந்திய உயர்ஸ்தானிரகர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பிரகாஷ் கோபாலன், ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் மொடட்சுகு சிகேவா, பாகிஸ்தான் உயர் ஸதானிகர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் ராஜில் இர்ஷாட் கான், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கொமான்டர் ரொபர்ட் நொஸ் ரொஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் தலைமையில் அபிவிருத்தியை ஆராயும் குழு அமைப்பு-

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுக, நகர அபிவிருத்தித்திட்டம், வடக்கு அதிவேகப்பாதை போன்ற பொது வசதிகள் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிமசிங்கவை தலைவராக கொண்டு இயங்கும் என்றும் அவருடன் எரிசக்தி மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, துறைமுக, கடற்றொழில் மற்றும் விமான சேசைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் ஐ.நாவின் முடிவில் மாற்றமில்லை-

human raightsஇலங்கையில் ஆட்சி மாறினும் ஐ.நாவின் முடிவில் மாற்றமில்லை என ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு ஆட்சியை அமைத்துள்ளது. எனினும் ஆட்சி மாறினாலும் விசாரணையில் மாற்றம் இல்லை. எனவே திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிவிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல்ஹீசைனின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின்போது போர்க்குற்றம் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இதுகுறித்து பொறுப்புக் கூறப்படவில்லை. இதனையடுத்து ஜெனீவா கூட்டத்தொடரில் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு அமைவாக கடந்த வருடம் யூலைமாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் வாய்மொழிமூல அறிக்கையும் செப்ரெம்பர்மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இறுதி எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மனித உரிமை ஆணையாளர் ஜனாதிபதியின் பிரதிநிதி சந்திப்பு-

manitha urimai aanaiyaalarஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிகார விடயங்கள் சம்பந்தமான விசேட ஆலோசகர் ஜயந்த தனபால நாளைய தினம், மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சேனை சந்திக்கவுள்ளார். ஜெனீவா நகரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக இலங்கை தொடர்பில் நடைபெற்று வருகின்ற சர்வதேச விசாரணைகள் தொடர்பில் இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிபுணர்கள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னாள் அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் நாளை சந்திப்பின்போது இது குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சர்வதேச விசாரணையின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வடக்கு முதல்வர் சந்திப்பு-

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நேற்றையதினம் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வடமாகாணத்தில் காணப்படுகின்ற நிலைமைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வரை கிழக்கில் ஆட்சி மாற்றமில்லை-

east makanamகிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்ற விடயம் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிர்வாகம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் இருந்து வந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படும்போதே, அங்கு புதிய மாகாண அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏதுநிலை காணப்படுகிறது. எனினும் இந்த இரு கட்சிகளும் இன்னும் விட்டுக் கொடுக்காத போக்கை கடைபிடித்து வருவதால், கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி குறித்து ஐயநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்ததல் இரு கட்சிகளுக்கும் முக்கியமானது என்ற அடிப்படையில், கிழக்கு மாகாண ஆட்சி தொடர்ந்தும் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் பெல்ஜியத்துக்கு விஜயம்-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளையதினம் பெல்ஜியத்துக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார். இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. இலங்கையில் சர்வதேச மீன்பிடி சட்டத்திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடையை நீக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

வெள்ளவத்தை தொடர்மாடியில் இருந்து வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு-

wellawattaகொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து 4வயதான குழந்தை ஒன்று தவறிவிழுந்து உயிரிழந்துள்ளது. குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து இந்த குழந்தை வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடும் காயங்களுடன் கலுபோவில வைத்தியசாலையில் இந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, காவற்துறை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் மேஜர் நாடு திரும்பினார்-

singa maerஅச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறிய இலங்கை இராணுவத்தினர் சிங்க படைப்பிரிவின் முன்னாள் மேஜர் ஜெனரால் ஜயநாத் பெரேரா நாடு திரும்பியுள்ளார். கடந்த காலங்களில் தாம் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உட்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூக நிலை கருதி தாம் நாடு திரும்பியதாகவும் மேஜர் ஜெனரால் ஜயநாத் பெரேரா கூறியுள்ளார்.