Header image alt text

பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் சத்தியப்பிரமாணம்-

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஸ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அவர், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். பின்னர் 27.03.2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக அவர் பொறுப்பேற்றார். இதேவேளை அண்மையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கே.ஸ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கல்வியற்கல்லூரி மாணவிக்கு உதவி-

TYNCதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கற்றல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக சிறியளவு நிதியுதவியினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை வழங்கியது. இவ் நிகழ்வு இன்றைய தினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் இவ் உதவியினை புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவியின் தாயாரிடம் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், ஊடகப் பிரிவைச்சேர்ந்த திரு செ.சுகந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

tamil thesiya ilaignar kalakam 1tamil thesiya ilaignar kalakam2 tamil thesiya ilaignar kalakam3 tamil thesiya ilaignar kalakam4 tamil thesiya ilaignar kalakam5 tamil thesiya ilaignar kalakam6

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்தில் 15.01.2015 தைத்திருநாள் அன்று மூளாய் வேரம் பகுதியில் உள்ள வளர்மதி விளையாட்டுக் கழகத்தினர் துடுப்பாட்ட நிகழ்வை நடாத்தினர் இவ் நிகழ்வின்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு அவர் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.

valarmathi1valarmathi2valarmathi3valarmathi4

vaddukoddaiகிராமிய வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கில் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் சற்கரநாற்காலி வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனை வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திருமதி காந்தநேசன் பெற்றுக்கொண்டார்.

பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என ஹியூ ஸ்வைர் நம்பிக்கை-

camp_uk_minister_001camp_uk_minister_007camp_uk_minister_015புதிய அரசாங்கத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என தான் நம்புவதாக பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முதற்தடவையாக யாழ்ப்பாணம் சென்ற இவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சத்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். யாழ்ப்பாணத்தில் அவர் பிரிட்டிஷ் கவுன்ஸில், ஐக்கிய இராச்சியம் நிதியுதவி வழங்கும் ஹலோ நம்பிக்கை நிதியத்தின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள், ஆனையிறவு, சபாபதிபிள்ளை நலன்புரி கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார். வடமாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அதுமட்டுமன்றி மீண்டும் யுத்தத்துக்கு பலியாகக் கூடாதென்பதை வலியுறுத்தும் சின்னமாக ஆனையிறவுள்ளது என்றார்

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை-

இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும். இலங்கையில் 10மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கிகாரத்தை பெறவேண்டும். இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டக்களப்பில் கவனயீரப்பு-

maddakalapuகாணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது. இதில் ‘எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்’, ‘மகிந்த அரசில் காணமல் போனவர்களை மைத்திரி அரசே தேடித்தா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்குமாறு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

சங்கானை வைத்தியசாலைக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் அன்பளிப்பு

sanganai1கடந்த 22.01.2015 அன்று வலி மேற்கு பிரதேசத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் சங்கானை வைத்திய சாலைக்கு ஜேர்மனிய நாட்டு புலம் பெயர் தமிழ் மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில்  சங்கானை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திரு. செந்தூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்நாள் வடமாகான சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம். சித்தார்த்தன், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்), திருமதி. ஜெயகுமார், வசந்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து வைத்திய சாலையின் செயற்பாடுகள் மற்றும் பற்றாக் குறைகள் தொடர்பில் மேற்படி குழுவினர் ஆராய்ந்ததுடன் சிறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தாம் உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதே வேளை வைத்தியசாலை பொறுப்புவைத்தியரது கோரிக்கைகளில் ஒன்றான கழிவுகள் போடுவதற்கான பிளாஸ்டிக் பெட்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு வைத்திய சாலை நலன்புரிச் சங்கத்திற்கு வழங்குவதற்கென சிறு தொகைப்பணத்தினையும் ஜேர்மன் நாட்டின் தழிழ் உறவுகள் சார்பில் சபாரட்ணம்.ஜெயகுமார் வழங்கிவைத்தார்.

sanganai2sanganai3sanganai4sanganai5sanganai6