பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் சத்தியப்பிரமாணம்-

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஸ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அவர், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். பின்னர் 27.03.2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக அவர் பொறுப்பேற்றார். இதேவேளை அண்மையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கே.ஸ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.