வடக்கு ஆளுநர் நியமனத்திற்கு கனடா வரவேற்பு-

vadakku alunarஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக இலங்கை அரசாங்கம் மீண்டும் நியமித்தமையை வரவேற்றுள்ள கனடா, வடக்கின் புதிய ஆளுநராக இராணுவப் பின்னணி இல்லாத சிவிலியன் ஒருவரை நியமித்தமையையும் வரவேற்றுள்ளது. இவை தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய வகையில் செயற்படுத்துவார் என நம்புகின்றேன். இலங்கையில் அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாட்டை உண்மையானதாக ஏற்படுத்துதல் என்பவை தொடர்பில் கனடா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தாம் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்துக்கு எச்சரிக்கை-

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசும் முன்னைய அரசைப் போலவே, கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், 100 நாள் செயற்திட்டத்துக்கு முன்னதாகவே, நாம் அரசிலிருந்து இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான சம்பிக்க ரணவக்க அமைச்சராகவும் பதவியில் இருப்பது இங்க குறிப்பிடத்தக்கது.

கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம்-

kamalesh sharmaபொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இன்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. பொதுநலவாய தலைமைத்துவம் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன அரசு குறித்து பிரித்தானியா நம்பிக்கை-

maiththiribala arasu kuriththuஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது என, தனது இருநாள் விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் மூலம் தெளிவாகியதாக, பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் குறிப்பிட்டுள்ளார். தனது விஜயத்தினை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியவேளை இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான விஷேட சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஹியூ ஸ்வைர் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதோடு, புதிய அரசு பதவியேற்ற பின் நாட்டுக்கு வருகை தந்துள்ள முதலாவது மேற்குலக நாடுகளின் இராஜதந்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரை அவர் சந்தித்துள்ளார். தனது கடந்த முறை விஜயத்தை விட இம்முறை இலங்கையின் சூழல் மாற்றமடைந்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டார் விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு-

qutar vipathuகட்டாரில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், இலங்கையைச் சேர்ந்த விமானப்பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.ஸ்ரீபவன் பதவியேற்றதால் நெருக்கடிகள் நிவர்த்தியாகும்-

பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றதன் பின்னர் சட்டத்துறையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் செயற்பாட்டு ரீதியாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை எதிர்காலத்தில் கூடி ஆராயவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண தெரிவித்துள்ளார். இதுவரை பிரதம நீதியரசராக செயற்பட்ட மொஹான் பீரிஸ் தமது பதவி விலகலை அறிவிக்காத போதும், புதிய நீதியரசரின் பதவியேற்பு சட்டரீதியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை வரலாற்றில் 2ஆவது தமிழ் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்-

k. sri bawan pathaviyetrathaalஇலங்கையின், 44 வது பிரதம நீதியரசராக நீதியரசர் கே.ஸ்ரீபவன் நேற்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் நேற்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை நீதித்துறை வரலாற்றில் இப்பதவியை வகிக்கவுள்ள இரண்டாவது தமிழராகவும் கே.ஸ்ரீபவன் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர் சுப்பையா சர்வானந்தா 1984- 1988 காலப்பகுதியில் இப்பதவியை வகித்துள்ளார்.
சிரேஷ்ட நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஒரு பார்வை.

முழு பெயர் – கனகசபாபதி சிறீபவன்

பிறப்பு: 29 பெப்ரவரி 1952

தந்தை – நடராஜா கனகசபாபதி

கல்வி – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

இலங்கை சட்டக் கல்லூரி,

கொழும்பு பல்கலைக்கழகம்

லண்டன் பல்கலைக்கழகம்

1952 பெப்பிரவரி மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்றார்.

1978 ஆம் ஆண்டு பதில் அரச சட்டத்தரணியாக செயற்பட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்;டார்.

1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்தில், அவர் வர்த்தக கற்கை நெறி பட்;டத்தை பெற்று கொண்டார்.

2002 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்ட கே.ஸ்ரீபவன் 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015- இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதுமட்டுமன்றி முன்னாள் பிரதம நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் மொஹான் பீரிஸ் சர்ச்சைக்கு பின்னர் பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றுள்ளார்.

மேலும் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் இப்பதவியை சிறுபான்மையினத்தவர் ஒருவர் ஏற்றுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இலங்கை நீதித்துறையும், தமிழர்களும்

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. இத்துறைக்கு தமிழர்கள் ஆற்றிய பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும்.

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக உயர் பொறுப்பொன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழராக செல்லப்பா நாகலிங்கம்கருதப்படுகின்றார்.

செல்லப்பா நாகலிங்கம்

இலங்கை நீதித்துறையில் முதல் தடவையாக உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்ட தமிழர் இவர் ஆவார். 1947 ஆம் ஆண்டில் இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார் .

பின்னர் உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்படார். அதுமட்டுமன்றி அக்காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக செல்லப்பா நாகலிங்கம்பல தடவைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கும் மேலதிகமாக இவர் இலங்கையின் பதில் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

சுப்பையா சர்வானந்தா

இலங்கை நீதித்துறையில் உயர் பதவியாக க் கருதப்படும் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர் இவர் ஆவார்.

இவர் 1974 ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 1984 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர். இனால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். இதுதவிர ஜே.ஆர். இவரை மேல் மாகாணத்தின் முதலாவது ஆளுநராக நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர சிவா செல்லையா, வீரவாகு சிவசுப்ரமணியம் , பொன்னுத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா, ஹென்ரி தம்பையா, வின்செட் தாமோதரம் , தௌ;ளிப்பளை ராஜரத்தினம் , தேசமான்ய பத்மநாதன் ராமநாதன், கிருஷ்ணபிள்ளை பாலகிட்டுணர், நமசிவாயம் நடராஜா , மாணிக்கவாசகர் வைத்தலிங்கம் , தந்தை செல்வாஎன அழைக்கப்படும் வேலுப்பிள்ளை செல்வநாயகம் , தற்போதைய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் என இப்பட்டியல் மிகப் பெரியது.

இலங்கையின் நீதித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ள தமிழர்களின் வரிசையில் மிக முக்கியமானதொரு பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் ஸ்ரீபவனின் மீது தற்போது முழு உலகின் பார்வையும் திரும்பியுள்ளது.

இதுதவிர தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே.ஸ்ரீபவன்முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.