வவுனியா விபத்தில் படுகாயமடைந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு-

tttttவவுனியாவில் நேற்று (30.01.2015) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களில் ஒருவரான 17வயதான செல்வன் சற்குணராசா சுலக்சன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவரான வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த இம்மாணவர் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று வந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் 12.15அளவில் கொழும்பிலிருந்து வந்த பஸ்வண்டி பாடசாலை விளையாடடுப் போட்டியினில் பங்குபற்றிவிட்டு பாடசாலை திரும்பிய மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி;யுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாணவன் சற்குணராசா சுலக்சன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30அளவில் மரணமாகியுள்ளதுடன், இவருடன் பயணித்த இன்னொரு உயர்தர வகுப்பு மாணவரான சுப்பிரமணியம் கிறிஷாந்தன் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றார். உயிரிழந்த மாணவன் சற்குணராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.