Header image alt text

thampasitti libraryவடமராட்சி தம்பசிட்டியில் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தேர்தல் விளக்கவுரை-

யாழ். வடமராட்சி தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் தேர்தல் விளக்கவுரை ஆற்றியுள்ளார். இன்றுமாலை முதல் இந்த சந்திப்புகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பிரதேசத்திலும் வேறு இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக மக்கைளை சந்தித்து நிகழ்கால அரசியல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

எந்தவொரு தரப்புடனும் இரகசிய ஒப்பந்தம் இல்லை-மைத்திரிபால-

maithriநாங்கள் எவருடனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில்இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது. நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம். பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

காவத்தை துப்பாக்கிச்சூடு தொடர்பில் நால்வர் இனங்காணப்பட்டனர்-

ethirani vedpalaruku atharavu sooduஇரத்தினபுரி கஹாவத்தை நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கஹாவத்தையில் இன்று பொதுக்கூட்டம் இடம்பெறவிருந்தது இந்நிலையில், இதற்கான ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பொலன்னறுவையில் நேற்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பங்குகொண்டு திரும்பிய மூன்று பேரூந்துகள்மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் காவல்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

94 வீதமான வாக்காளர் அட்டைகளே விநியோகம்-தேர்தல் திணைக்களம்-

therthal nadavadikkaiku arasa valankalaiஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை 94 வீதம் நிறைவுபெற்றுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 6 வீதமானவற்றை விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் காலஅவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளளது. வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய தபாலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1185 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 142 முறைப்பாடுகள் வன்முறைகளுடன் தொடர்புபட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 1043 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.

கட்சித் தாவல் வெறும் வதந்தியே-சஜித்- கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவல்-

இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமளவுக்கு எனக்கு பைத்தியம் இல்லை. இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள், எங்களுக்கு சேறுபூசவே முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டிய தேவையும் எனக்கில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளப்போகிறார் என்ற வதந்தி பரவியுள்ள நிலையிலேயே அவர் அதற்கு பதிலளித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளனர். நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சிக்கு கட்சி தாவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்-

திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஆளுந்தரப்பு அலுவலகமொன்றுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வீடியோக் காட்சிகளை தடுத்து நிறுத்த முயன்ற உதவித் தேர்தல் பொறுப்பதிகாரியை பிளாஸ்டிக் கதிரையொன்றால் தாக்கிய சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தங்களது தேர்தல் பிரசார அலுவலகத்துக்குள் நுழைந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள், அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைகளை பலவந்தமாக எடுத்துச் சென்றனர் என பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாரவூர்தி மீது துப்பாக்கி சூடு-

புத்தளம் ஆண்டிகம கிரியன்னல்லிய பாதையில் காவல்துறையின் நிறுத்தல் சமிஞ்சை பொருட்படுத்தாது சென்ற பாரவூர்தி மீது நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தியின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த பாரவூர்தி சோதனை செய்யப்பட்ட போது அதிலிருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பல்லம காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பில் பாரவூர்தி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ஒரு வகை நச்சு விதையை உண்டமை காரணமாக குறித்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொது நோக்குடனேயே ஒன்றிணைவு-

maithripala3தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளும், பொது இலக்குடனேயே ஒன்றிணைந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரலகங்கவிலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ{டனும் தாம் இரகசிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறான எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. புதிதாக ஏற்படுத்திக் கொள்வதாகவும் இல்லை. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொது இலக்குடன் அனைத்து தரப்பும் ஒன்றிணைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகளில் ஈடுபடுவோரை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்-வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkவன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தி கூறியுள்ளார். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அடாவடி செயற்பாடுகள் கொண்ட பொதுபல சேனா அமைப்பினரே காரணம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு தமிழ், முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறான ஒரு அமைப்பு ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து, அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்த அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் முற்றாக சிதைந்து போயுள்ளது. மேலும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும், வன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தி கூறியுள்ளார்.

நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா வீட்டின்மீது குண்டுத் தாக்குதல்-

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவின் வீட்டின்மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதனால் அவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். பெற்றோலினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே வீசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேற்படி சல்மா ஹம்சா கர்தான்குடி நகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக இருப்பதுடன், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவிருந்து பெண் செயற்பாட்டாளராகவும் மனிதநேய செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை நேற்று அதிகாலை காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூகின் வீட்டு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு கைக்குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாது-மாகாண சபை உறுப்பினர் அனந்தி-

ananthi நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தமைக்காக, தான் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது, பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக மைத்திரி இருந்துள்ளார். அப்போது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழ் மக்களை கொல்லும்போது எந்த கருத்துக்களையும் கூறவில்லை. அந்த அடிப்படையில், மக்களிடம் சென்று இவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது. அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சரத் பொன்சேகா தோல்வியடைந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்த செயற்பாட்டினை நான் முற்றாக நிராகரிப்பதுடன், இந்த தேர்தலிற்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாது என்று மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு-

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12மணியுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் எதிர்வரும் 6ம் திகதியுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களும் நீக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 90சதவீதமான வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். இன்றும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், 08ம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச அஞ்சல் நிலையங்களுக்கு சென்று பெறமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட அதிரப்படையினர் களமிறங்கல்-

therthalஅரலகங்வில பகுதியில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர் அரலகங்வில மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று 5 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் பிரசார கூட்டம் நிறைவுபெற்ற பின்னர், குறித்த இடத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டமை குறித்து தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரலகங்வில பகுதியை அண்மித்து, சிறு அளவிலான மேலும் நான்கு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மைத்திரிக்கு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு, ஆரிப் சம்சுதீனும் ஆதரவு-

yarl palkalaikalagaசமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரன் தமது ஆதரவு அறிவித்தலை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து பொது எதிரணியுடன் இணைந்துகொண்டுள்ளார். பொலன்னறுவை தம்பாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் தனது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.

ஒரு இலட்சத்து 75,000 பேர் தேர்தல் கடமைகளில்-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் அரச அதிகாரிகள் ஒரு இலட்சத்து 75,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு நடைபெறவுள்ள தேர்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள மத்திய நிலையங்கள் போன்றவற்றில் சேவையில் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தாபல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கு 95 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உதவித் தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

கிழக்கில் நான்கு வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல்-

kilakkil naanku veedukalmeethu.மட்டக்களப்பு, காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனவை ஆதரித்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி அல்.அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின்மீதுமே மேற்படி கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு-

ethirani vedpalaruku atharavu sooduகுருநாகல் பகுதியில் அமைந்துள்ள, வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேடருவவின் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்த குறித்த வீட்டின் காவலாளி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த லக்ஷ்மன் வேடருவ அண்மையில் அதிலிருந்து விலகி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு-

pulikal meethaana thadai needippu (2)புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை தமிழக அரசாங்கம் நீடித்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை தலைமை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னாள் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் வேனில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இவற்றை புலிகளே மேற்கொண்டதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் கடந்த வருடம் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் என்பவை தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தன. இவ் விடயங்கள் புலிகள் அமைப்பு தமிழகத்தில் தொடர்ந்தும் இயங்குகின்றது என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, புலிகள் மீதான தடையும் நீடிக்கப்படுகின்றது என ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட – கிழக்கு உறவுகளுக்கு அவசர உதவி கோருகிறது வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.

IMG_5241இலங்கையில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தின் எதிரொலியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு உறவுகளுக்கு புலம்பெயர் கருணை உள்ளங்கள் உள்ளூரில் இருக்கும் கொடையாளிகளின் உதவிகளை வவுனியா கோயில்குளம் இளைஞர் கழகத்தின் இடர் முகாமத்துவப்பிரிவு நாடியுள்ளது.
திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள், கோயில்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம்மக்களுக்கான அடிப்படை உதவிகளான பொருட்கள், உடைகள், பாய்கள், போர்வைகள்,  சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள், பால்மா, நுளம்பு வலை, எனும் அவசியப் பொருட்கள் தேவையாக உள்ளதுடன் அவர்கள் மீண்டும் தமது இருப்பிடம் செல்லும் போது அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் போன்றவை தேவையாக உள்ளது.
எனவே மனிதநேய உணர்வுமிக்க எமது உறவுகள் உங்களால் முடிந்த நிதி அல்லது பொருள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொருள் உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம் அல்லது கழகத்தின் அலுவலகமான வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம், இல.58, 5 ம் ஒழுங்கை, கோவில் புதுக்குளம், வவுனியா என்ற முகவரிக்கு சென்று கையளிக்கலாம்.
தொடர்புகளுக்கு – ஊடகப்பிரிவு, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.
0766644059, 0757729544, 0770733719,  0775058672

காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவை ஆரம்பம்-

kaankesanயாழ். காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்துள்ளனர். அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இவர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளனர். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதியுடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இறுதியாக ரயில் சேவை இடம்பெற்று பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் ரயில் சேவை அஸ்தமித்திருந்தது. மீண்டும் 24 வருடங்களில் பின்னர் ரயில் சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோழர் சுந்தரம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம்-

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 33வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா-

untitledபழிவாங்கும் அரசியல் தம்மிடமில்லை எனவும், ராஜபக்ச குடும்பத்தினரே வைராக்கிய அரசியலை முன்னெடுப்பதாகவும் சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே தாம் முனைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாத்த்தளை மாவட்ட எம்.பியும் பிரதியமைச்சருமான நந்திமித்ர ஏக்கநாயக்க எதிரணியுடன் இணைந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு அவரது இல்லத்தில் நடைபெற்றநிலையில் அங்கு உரையாற்றும்போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு உரையாற்றியுள்ளார். எம்மிடம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்படப் போவதுமில்லை. எனது ஆட்சிக்காலத்தல் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட எதிரணி பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டார். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் ஆதரவளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜே.வி.பியின் எம்.பியாக 2004ம் அண்டு முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், பின்னர் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினராக செயற்பட்டு வந்தார். 2010 பொதுத் தேர்தலில் அச்சல ஜாகொட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். சிறிதுகாலம் அவர் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும் இருந்தார். பின்னர் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.

புத்திரசிகாமணி, பீ.பி. லக்சரு மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

aikkiya thesiya katshiமுன்னாள் பிரதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான வீ.புத்திரசிகாமணியும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அறிவித்துள்ளார். அத்துடன் ஹிரியால மற்றும் குருனாகலை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் 3பேரும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். மற்றும் அம்பலாங்கொட பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் பீ.பி.லக்சரு எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். காலி பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற அவர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் வெளியிட்டுள்ளார். அம்பலாங்கொட பிரதேச சபைக்கு சுயேட்சை குழு மூலம் தெரிவான அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி வந்தார்.

பல்கலைக்கழகம் செல்வோரிடம் கட்டணம் அறவிடுவதில்லை-மைத்திரிபால-

Maithripala-Sirisena3பல்கலைக்கழகம் செல்லும் எவரிடமும் கட்டண அறவீடுகளை தாம் மேற்கொள்ளப்போவதில்லை என எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் இது தொடர்பில் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதையை நிலைமையின்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிகணனிக்கு அவர்கள் கல்வியை முடித்த பின்னர் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. இது தமது ஆட்சியின் போது முழுமையாக அகற்றப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் தமது 49 வருடகால அரசியல் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டையும் பார்த்துள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ளதை போன்று, அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள தேர்தலை தாம் பார்த்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் வீட்டின்மீது தாக்குதல்-

UNP amaipalar veeduஐக்கிய தேசியக் கட்சியின் பெலியத்த தொகுதி அமைப்பாளர் விமல் ஜயசிறியின் பெலியத்த – கஹவத்த வீட்டின்மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 15 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியதுடன் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம், ஆவணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் விமல் ஜயசிறியின் மனைவி பிரியங்கா கருணாதிலகவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய குழு துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பெலியத்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அலைபேசியூடான தேர்தல் பிரசாரத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்-

vaakkalarkalin adaiyaalam uruthiசந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!2015

ஈர் பதினைந்தாண்டுகள் அரசியல் போராட்டம்

ஈர் பதினைந்தாண்டுகள் ஆயதப் போராட்டம்

முடிவற்று ஜந்து வருடங்கள் கடந்தாயிற்று

முடிவில்லா நிலையில் இரண்டாயிரத்து பதினைந்து

இவ் ஆண்டிலாவது முடியட்டும் எமது வேதனைகள்

இது வரை அனுபவித்த சோதனைகள் போதும்

புரையோடிப்போன பிரச்சனை தீரும் இவ் ஆண்டிலாவது – என்ற

புது நம்பிக்கையுடன் வரவேற்போம் இப் புதிய ஆண்டை

எமது மக்களோடும் மண்ணோடும் வாழும்
த.ம.வி.க (P.L.O.T.E)
ஜ.ம.வி.மு (D.P.L.F)

„ஓன்றாய் நாம் இல்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை’ அமரர் தோழர் உமாமகேசுவரன்

 

சமுக அபிவிருத்தியை ஏற்படுத்துவேன்-மைத்ரிபால சிறிசேன-

தமது ஆட்சியில் தெளிவான சமுக அபிவிருத்தியை மேற்கொள்ளவிருப்பதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைக்கவிருப்பதகாவும், எந்த ஒரு நாட்டிலும் ஜனாதிபதியின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையில், விவசாய மக்களின் நிலைமைகளை நான் நன்கு அறிந்திருக்கின்றேன். நாட்டில் தற்போது தேசியத்திற்கு இடமில்லை. இன்று மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு என்றால் இலங்கை தேசிய உற்பத்திக்கு என்ன நிலமை என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நந்தமித்ர ஏக்கநாயக்க மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நீண்டகால மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தமித்ர ஏக்கநாயக்க எதிரணியில் இன்று இணைந்து கொண்டுள்ளார். பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிரணியினருக்கு தனது ஆதரவினை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எனக்கும் இடையில் கருத்து மோதல்கள் எதுவும் கிடையாது. அதேவேளை எதிரணியில் இணைந்து கொள்ளுமாறு எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவுமில்லை. எனது சுயவிருப்பின் பேரிலேயே அரசில் இருந்து வெளியேறினேன் என அவர் கூறியுள்ளார்

ஆனைமடு நகரில் மைத்திரியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்-

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆனமடுவ நகர தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆனைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆனமடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படகுமூலம் தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது-

லங்கையிலிருந்து தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் இலங்கை அகதி ஒருவர் வந்திருப்பதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞனை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மணிகண்டன் எனவும் தந்தையிடம் படகுக்கு 50ஆயிரம் ரூபாய் வாங்கிகொண்டு யாழிலிருந்து நள்ளிரவு 2மணிக்கு புறப்பட்டு சபரிமலை செல்வதற்கு வந்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு-

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் அலுவலகத்திலே இன்றைய தினம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமார் குணரத்னம் நாடு திரும்பினார்-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பின் குமார் குணரத்னம் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் குமார் குணரத்னத்திற்கு இலங்கைவர தடை இருந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 அளவில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் தொடக்க நிகழ்விற்காக இலங்கை வந்திருந்த குமார் குணரத்னம், கடத்தி அச்சுறுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் பேஸ்புக் குறித்து 2250 முறைப்பாடுகள் பதிவு-

2014ம் ஆண்டில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் 2250 முறைப்பாடுகள் பதிவானதாக இலங்கை கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளின் பின் பல போலி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த வருடத்தில் இணையம் தொடர்பில் 70 முறைப்பாடுகள் பதிவானதாக அவர் கூறினார். மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா திருநாவற்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் அமைப்பால் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. படங்கள் இணைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் நிவாரண பொருட்கள் இன்றைய தினம் (31.12.2014)  திருநாவற்குள மக்களுக்கு புளொட் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் சமூகப் பணியில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), புளொட் முக்கியஸ்தர் திரு முத்தையா கண்ணதாசன் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், சுகந்தன், சஞ்சீ,நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_5372 IMG_5382 IMG_5388 IMG_5392 IMG_5395 IMG_5403 IMG_5405 IMG_5406 IMG_5408 IMG_5412 IMG_5424 IMG_5441