Header image alt text

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா-

kachchative thiruvilaகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேர்ப் பவனி, திருப்பலி பூஜைகளும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகள் அங்கு சென்றுள்ளனர். கடற்படையினரால் இதற்கான படகு சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேசுவரத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 4,296 பேர் சனிக்கிழமை புறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து 110 படகுகளில் செல்லும் இவர்களின் பாதுகாப்புக்காக, இரு விசைப் படகுகள், இரண்டு நாட்டுப் படகுகளில் 20 மீனவர்கள் செல்வதாகவும், பக்தர்கள் பாதுகாப்புக்காக “லைப் ஜாக்கெட்´ வழங்க இராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அரசியல் விவகாரச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. ஐநா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின்போது அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை-

russia ethirkatchi suttukolaiரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். போரிஸ் நெம்ட்சொவ் என்ற அவர் ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அவர் மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரெயினில் இடம்பெறும் யுத்தத்துக்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு அவர் ஆதரவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்துக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லண்டன் விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு-

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இச் சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று அவர்மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டுவரும் சுபாஹரி, உள்நாட்டு யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு இலங்கையிலருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவராவார். அவரது கணவரான சோதிலிங்கம் செல்லத்துரை (44) தமது பிள்ளைகளின் கல்வி நிமித்தம் அவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்தார். இதனையடுத்து செல்லத்துரை தனது 18 வயது மகளான ஹம்சனாவுடன் கடந்த ஒக்டோபரில் லண்டன் சென்றார். இவர்களின் 22வயது மகன் இலங்கையில் அவர் கணனி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகையின் பூக்கள் கம்பஹாவுக்கு மாற்றம்-

alari marigai pookkal (1)அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதன் காரணத்தினாலேயே இவையனைத்தும் அகற்றபட்டதாக, பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட அனைத்து பூந்தொட்டிகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமரின் ஊடக செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் சீனப் பிரதமர் சந்திப்பு-

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், சீனாவின் பிரதமர் லீ கேகியாங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. சீனாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது இலங்கையுடனான நல்லுறவுக்கு சீனா முக்கியத்துவம் வழங்கும் என்று சீனாவின் பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை நாட்டு மக்களின் அபிலாசைகளை முக்கியத்துவப் படுத்தும் வகையிலான வெளிவிவகார கொள்கையை வகுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவின் எதிர்க்கட்சிக் குழு இலங்கை வருகை-

மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டின் எதிர்க்கட்சிக் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. அவர்கள் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது மாலைதீவில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது விடுதலை தொடர்பில் ராஜதந்திர உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த குழு இலங்கை வந்துள்ளது.

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரம் கோரல்-

sri lanka refugees in INDIAஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எல்லோரும் திரும்பி வரவிரும்பமாட்டார்களென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை திரும்ப விரும்புவோரின் விவரங்களை கேட்டோம். இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய இலங்கை அகதிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பிவர விரும்பவில்லை. திரும்பி வர விரும்புவோரும் உள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

செட்டிக்குளம், மிஹிந்தலை பகுதிகளில் பலத்த காற்று, வீடுகளுக்கு சேதம்-

வவுனியா செட்டிக்குளம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் நேற்றுமாலை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. செட்டிக்குளம் பகுதியில் 03 வீடுகளும் மிஹிந்தலை பகுதியில் 10 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனானா வானிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சர்வதேச மகளீர் தினத்தினையொட்டி வலி மேற்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு-

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியில் சர்வதேச மகளீர் தினத்தினை ஒட்டி பல்வேறு வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்;பட்டுள்ளது. இதில் பாடசலை மாணவர்கட்கு 24 வகையான போட்டிகளும் பிரதேச மட்ட அமைப்புகளுக்கு 46 வகையான போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது. இவ் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு வெகு விமரிசையாக வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 08.03.2015 அன்று மாலை இடம்பெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். இவ் நிகழ்வு வருடம் தோறும் தவிசாளரால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Read more

பெரியமடு அம்பாள் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி-

IMG_6870வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று (26.02.2015) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. ம.தியாகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி.மங்களகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. ⇓Photos Read more

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபை தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை-

law helpமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளையதினம் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் இந்தத் தேர்தலை மார்ச் 27ம் திகதிவரை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1000 ஏக்கர் காணியில் மூன்று வாரத்தினுள் மீள்குடியேற்றம்-

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உள்ள ஆயிரம் ஏக்கர் காணியில் மூன்று கிழமைக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ் சென்றுள்ள அமைச்சர் இன்றுகாலை வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி. பலிஹக்கராவை ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்தார். அதன் பின்னர் வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆளுனர், அரச அதிபர், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி, பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலுக்கு பின்னர்; ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் கூறுகையில், வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அதில் முதல்கட்டமாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள 6300 ஏக்கர் காணியில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அங்கு மக்களை மூன்று கிழமை அவகாசத்துக்குள மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துரிதமாக அதை மேற்கொள்ள ஒரு செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் நாடுதிரும்பினர்-

sri lankan refugeesதமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த 40க்கும் அதிகமான இலங்கை அகதிகள் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் (யூ.என்.எச்.சீ.ஆர்) ஒத்துழைப்புடன் மேற்படி இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இலங்கையின் வவுனியா, மன்னார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் குறித்து அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்-

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவி ஏற்று சில காலத்திலேயே முக்கியமான சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி இருந்தது. அதேநேரம் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் துரித அவதானம் செலத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜனாதிபதிக்கான அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சசி வீரவன்ச பிணையில் விடுதலை-

sashi weerawansaமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் சசி வீரவன்சவிற்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 15,000 ரூபா ரொக்கப் பிணை, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் சசி வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மாதாந்தம் நீதிமன்ற பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாதெனவும் நீதவான் நிபந்தனை விதித்துள்ளார். சசி வீரவன்சவின் உடல்நலத் தகுதியை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி நேற்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். போலி ஆவணங்கள் சமர்பித்து இரு கடவுச்சீட்டுக்கள் தயாரித்த குற்றத்தின்பேரில் சசி வீரவன்ச கைது செய்யப்பட்டார். மாலபே தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டார். பின் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சசி வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த வேளையில் இப்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் குணரத்தினத்தின் கோரிக்கை நிராகரிப்பு-

kumar gunaratnamமுன்னிலை சோசலிச கட்சியின் செயற்பட்டாளர் குமார் குணரத்தினத்தினால் இலங்கையில் குடியுரிமை கேட்டு முன்வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த குமார் குணரட்னம், பின்னர் அவுஸ்திரேலியாவின் குடியிரிமை பெற்றார். இந்நிலையில், தற்போது இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக, தமக்கு இலங்கையில் குடியுரிமை கோரி இருந்தார். இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் குடிவரவுத் திணைக்களம் விளக்கம் கோரி இருந்தது. இதனடிப்படையில் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மீனவர்கள் 86பேர் கைது-

indian fishermen arrestகடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 86பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் வசமிருந்து 10 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் படகுகள் சகிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வேன் குறித்து சாட்சியமளிக்கத் தயார்-பிரஷாந்த ஜெயக்கொடி-

prashantha jayakodyவெள்ளை வேன் கலாச்சாரத்துடன் தொடர்புடைய நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியமளிக்கத் தான் தயார் என, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்த அவர் நாட்டிற்கு வந்துள்ளதோடு, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் பிரஷாந்த ஜெயக்கொடி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரத்திற்கு கணித பாடம் அவசியமில்லை-

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு, இந்த சலுகையால் அவற்றில் இருந்து விடுபட இயலாது எனவும் மேலும் கூறியுள்ளது

யாழ். மாலுசந்தியைச் சேர்ந்த இளைஞனை காணவில்லை-

யாழ். மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் அந்த தாய், தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்ஸ்தானிகர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு-

uyar sthanikarkal niyamanamஇலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் மூவர் தமது நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். இதன்போது ஜோர்ஜியா, கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கைகான புதிய உயர்ஸ்தானிகர்களே தங்களது நியமனக்கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கரைத்துறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசசபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம்-

valaignarmadammaanthalankokkuthoduvaialampilமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபை தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றையதினமும்(25.02.2015) முன்னெடுக்கப்பட்டிருந்தன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான திரு. அற்புதராஜா, புன்னாலைக்கட்டுவன் லோகன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் திரு. சிவநேசன்(பவன்) ஆகியோர் புதுக்குடியிருப்பு நகரம், புதுக்குடியிருப்பு, மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், கொக்குத்தொடுவாய், அலம்பில், செம்மலை, தண்ணீர்ஊற்று, கணுக்கேணி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கலாக பல கிராமங்களுக்கும் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் மக்களை சந்தித்து கிராம ரீதியிலான சிறுசிறு கூட்டங்களை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்கள்.

இச்சந்திப்புக்களின்போது உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு பெரியளவிலே வாக்களித்திருக்கின்றார்கள். அவருக்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாக்களித்திருக்கவில்லை. ஒரு மாற்றத்தை வேண்டியே அவர்கள் வாக்களித்திருந்தார்கள். எனவே, தமிழ் மக்கள் அளித்த வாக்கை மதித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், தமிழ் மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற முக்கிய பிரச்சினைகளான, இடம்பெயர்ந்து மிக நீண்டகாலமாகவே தங்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாத மக்களின் மீள் குடியேற்றம். சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்களின் விடுதலை, காணாமற்போனோர் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் சம்பந்தமாக ஒரு நியாயமான, நீதியான தீர்வினைக் காண்பது. இவைகளை அரசு செய்யவேண்டும். மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைக்கு ஒரு நியாயமான தீர்வுக்காகவும் தான் ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இந்த அரசு உணர்ந்து தனது கடமையை சரிவரச் செய்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருமலை அமர்வுகள் இடமாற்றம்-

janathipathi anaikuluகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை அமர்வுகள் இடம்பெறும் இடங்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆணைக்குழுவின் அமர்வுகளை இம்மாதம் 28ஆம் திகதிமுதல் மார்ச் 03ஆம் திகதிவரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், மார்ச் 2, 3ஆம் திகதிகள் திருமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவிருந்த அமர்வுகள், திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாஸ குறிப்பிட்டுள்ளார். மாவட்ட செயலகத்தில் குறித்த இரு தினங்களும் அமர்வுகளை நடத்துவதற்கு போதியளவு இடவசதிகள் இன்மையே இதற்குக் காரணமென அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இம்மாதம் 28ஆம் திகதியும், மார்ச் 01ஆம் திகதியும் ஏற்கனவே திட்டமிட்டவாறு காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் திருமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, அனைத்து முறைப்பாட்டாளர்களும் தமது சாட்சியங்களை பதிவுசெய்ய முடியுமெனவும், புதிதாக முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் எச்.டபிள்யூ குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்ந்த ஆய்வின் பின்பே விசாரணை அறிக்கையை பின்போட தீர்மானித்தது-ஐ.நா

jepriஇலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை ஆழ்ந்த ஆய்வின் பின்னரே பிற்போட தீர்மானித்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜோகிம் ரக்கொ இதனைத் தெரித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் வரையில் பிற்போடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இணங்கியிருந்தது. இந்த தீர்மானம் முக்கியமான சந்தர்ப்பத்தில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்டதாக ஜோகிம் ரக்கொ குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க தூதுக்குழு இனப்பிரச்சினை குறித்து ஆலோசனை-

இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்கவின் தூதுக்குழு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இந்த குழு இலங்கை வந்துள்ளது. கடந்த அரசாங்கத்தில், அமைச்சராக இருந்த எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழு ஒன்றே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று, தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் அவருடன் இந்த குழு சந்திப்பை நடத்தி இருக்கிறது. இந்த குழு ஏற்கனவே நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நாடு திரும்பினார்-

உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி நாடு திரும்பியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது உரிய முறையில் தன்னால் கடமையாற்ற முடியவில்லை என்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததையடுத்தே அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதனால் இந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பியதுடன் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தானந்த மற்றும் சஜின் வாஸிடம் விசாரணை-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தனவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில், ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச நிறுவனமொன்றின் முன்னாள் தலைவர் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தந்தையின் பாதுகாப்பு பிரிவில் மகன் இணைவு, பந்து விக்ரமவுக்கு அழைப்பு-

கடற்படையில் கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு யோசித்த ராஜபக்ஷ ஏற்கெனவே கோரியிருந்தார இதேவேளை இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பந்து விக்ரமவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு முக்கியம் -மு.கா, சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாத கட்சி-ஐ.தே.க-

அரசியல் தீர்வின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்காவின் தூதுக்குழுவை சந்தித்து உரையாற்றிய கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் சரியான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படுவது அனைத்து சமுகங்களுக்கு முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாதிகளின் கட்சி என்று தற்போது உறுதியாகி இருப்பதாக ஐ.தே.கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனவாதத்தை உயர்த்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு-

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள காணியொன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் குண்டொன்று வெடித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இருந்த குண்டு வெடித்ததா? அல்லது யாராவது எறிந்த குண்டு வெடித்ததா? என்பது தொடர்பான விசாரணைகள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலனறுவையில் 3 பிரதேச சபைத் தலைவர்கள் நீக்கம்-

பொலனறுவை மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளின் தலைவர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி திம்புலாகல, மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், கடந்த 18ம் திகதிமுதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பேசல ஜெயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடலியடைப்பு சனசமூக நிலையத்தில் கலந்துரையாடல், அரங்கம் அமைக்க நிதியுதவி-

kalivani1யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு க.சுதர்சன் அவர்களின் தலைமையில் அங்கத்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இவ் நிபழ்வின்போது குறித்த நிலையத்தவரின் வேண்டுகோளுக்கு அமைவாக திறந்தவெளி அரங்கம் ஒன்றை அங்கு அமைக்கும் பொருட்டு வட மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்கூடாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர் திரு கணேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். ⇓Photos Read more

ஐ.நா. உயரதிகாரி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம்-

jepriஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை சேர்ந்தவர்களையும் சந்திப்பதற்கு இவர் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரீபன் டுஜார்ரிக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், பரஸ்பர முக்கியத்துவமுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜெப்ரி பெல்ட்மனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்-

indian communist party (2)இலங்கையில் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். கோயம்பத்தூரில் இன்றுஇடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐ.நா வின் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். இந்தியா, இலங்கைக்கு ஆதரவு அளிப்பதை மாத்திரம் செய்யாது வெளிப்படையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நியாயம் நிலைநாட்டப்படும் என தா.பாண்டியன் மேலும் கூறியுள்ளார்.

தனது ஆசனத்தை மீளப் பெற்றுத் தருமாறுகோரி மனுத் தாக்கல்-

sarath kadsiகடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆசனத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். தமது பாராளுமன்ற ஆசனத்தை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயந்த கெட்டகொடவை நீதிமன்றத்திற்கு அழைத்து பாராளுமன்ற ஆசனத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான காரணத்தை கேட்டறியுமாறும் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே தமக்கு எதிரான வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் வென்றெடுத்த பாராளுமன்ற ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகமை தமக்குள்ளதெனவும் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை நிறைவுக்கு கொண்டுவர முன்னாள் பிரதம நீதியரசர் எதிர்ப்பு-

siraniசொத்து விவரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு முறைப்பாட்டாளர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் வழக்கின் பிரதிவாதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுஹெட்டி, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி முன்னிலையிலேயே, இந்த வழக்கை நிறைவுக்கு கொண்டுவருவதனை தான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேற்படி வழக்கு ஏப்ரல் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரிவு முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை-

law helpமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கீர்த்தி சமரசிங்க திஸாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றையதினம் கொழும்பு நீதவான் திலினி கமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் கீர்த்தி சமரசிங்க திஸாநாயக்க கடந்த 17ம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் விசேட தூதுவர் மலையகத்துக்கு விஜயம்-

malaysina high commissionerபெருந்தோட்ட உட்கட்டமைப்பு அவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம் மற்றும் மலேசிய அரசின் இந்திய மற்றும் தென்னாசிய பிராந்தியத்துக்கான விசேட தூதுவர் டத்தோ எஸ்.சாமிவேலு ஆகியோருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் இன்றுகாலை இச்சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்டபகுதி வீடமைப்பு தொடர்பான விடயங்களில் மலேசிய அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மலேசியாவின் அனுபவங்களின் ஊடாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகவிருந்தது என்று அமைச்சினுடைய ஊடகப்பிரிவு மேலும் கூறியுள்ளது.

கொட்டகலை தமிழ் வித்தியாலயத்திற்கு புளொட் ஜெர்மன் கிளை உதவி-

kottagala 23.02.2015 (2) kottagala 23.02.2015 (3)நுவரெலியா கொட்டகலை சென்ற் அன்றூஸ் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு நேற்றையதினம் (23.02.2015) பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாகவே மேற்படி பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஏற்பாட்டில்; இவற்றை சமூக சேவையாளர் திரு. கெங்காதரன் அவர்கள் கொட்டகலை சென்ற் அன்றூஸ் தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி ஏ.என். குலேந்திரா அவர்களிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐ.நா அறிக்கை பிற்போடலை ஆட்சேபித்து யாழில் பேரணி-

yaaalil perani (4)இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை துரிதப்படுத்தக் கோரியும் யாழில் இன்று ஆர்ப்பாட்;டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவர் ராசகுமாரன் இதுபற்றி கருத்துக் கூறுகையில், அமைதியாக இடம்பெற்ற இந்த போரணியில் பல்லாயிரம் கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இது தமிழர்களின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்து காட்டுவதாக அமைந்திருந்தது என்றார். குறித்த ஆர்ப்பட்டப் பேரணி யாழ்ப்பாண வளாகத்தில் ஆரம்பித்து பலாலி மற்றும் அநுராதபுரம் சந்தி ஊடாக சென்று நல்லூர் வடக்கு வீதியில் உள்ள திடலில் ஒன்றுகூடலுடன் நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவென மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக சமூகம், பொதுசன அமைப்புக்கள், அரசியல் கட்சியினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

jaffna_perani_13jaffna_perani 11jaffna nocreditjaffna nocredit 1

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

president and sing forgn minister metஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றதாக, அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலையானது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க பணிகளுக்கு தொடர் ஆதரவு வழங்கும் சிங்கப்பூருக்கு அமைச்சர் மங்கள சமரவீர தனது நன்றிகளையும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், பொது முகாமைத்துவம், நகர அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சு அறிக்கையிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரசார நடவடிக்கைகள் நிறைவு-

therthal nadavadikkaiku arasa valankalaiமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகளை நாளை நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டுமென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 9 உறுப்பினர்களும், கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 52 ஆயிரத்து 758 பேர் தகுதிபெற்றுள்ளனர். 95 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-பொலிஸ் பேச்சாளர்-

நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 600 ஆக குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கொலைகள் மாத்திரமின்றி, கொள்ளைச் சம்பவங்கள், வீடுடைப்பு உட்பட அனைத்து குற்றச்செயல்களும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சனத்தொகை அதிகரித்து, நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி என்பன ஏற்பட்டுள்ள நிலையில், குற்றல்செயல்கள் குறைந்துள்ளமை சிறந்த விடயமாகும். பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்த விசாரணைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் பாவனை என்பன குற்றச்செயல்களின் வீழ்ச்சிக்கு காரணமாகும். நீதிமன்றம், சட்டமா அதிபர், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பும் குற்றச்செயல்களை குறைக்க வழிசெய்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சுதர்மன் ரதலியகொடவுக்கு பிணை-

சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.டி.என்) செய்திப்பிரிவு முன்னாள் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட, கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி சரணடைந்தபோது. அவரை இன்று 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவதூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரத்தை பிரிசுரித்தார் என்று சுதர்மன் ரதலியகொடவுக்கும் ஏனைய இருவருக்கும் எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்தே அம்மூவரும் தலா 500,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர், நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் அவருடைய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யயப்பட்டிருந்தது.

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்கத் தடை-

நாட்டின் கடற்பரப்புக்குள் இலங்கை கொடியுடன் மீன்பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன என மீனவ மற்றும் நீர்வள அபிவிருந்தி இராஜங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல, படகுகளின் கட்டுப்பாட்டை கண்காணிப்பதற்காக படகுகளில் ரி.எம்.எஸ் உபகரணங்களையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாகாண சபைத்தலைவர் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல்-

மத்திய மாகாண சபையின் தலைவர் மஹிந்த அபேகோன் உட்பட 13 பேரை, நாளை 25 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று உத்தரவிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு டிசெம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் ஒன்றில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, 14 பேரையும் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம்-

23.02.2015 நேற்று வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம் சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது இதன்போது தவிசாளர் அண்மையில் வட மாகாண சபை முதல்வரால் கொண்டுவரப்ப்ட இனப்படுகொலைத் தீர்மாணத்தினை ஆதரித்து உரை நிகழ்தினார் அவ் உரை வருமாறு

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை

வட மாகாண சபையின் முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வட மகாகாண சபையின் 22வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீhமானம் ஆகிய இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்ற தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க வேண்டியநிலை காணப்படுகின்றது. முதற்கண் இவ்வாறாண துணிச்சலான தீர்மானத்தினை எதிர்ப்பின்றி வடக்கு தமிழர்களது அரசாக நிறைவேற்றியமையை இட்டு பாராட்டுவதோடு வாழ்த்துகின்றேன் இவ் விடயம் தொர்பில் இவ் இலங்கைத்தீவில் எமக்கும் சுதந்திரம் வழங்கியதாக கூறப்பட்ட காலம் முதலாக இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக நீண்ட நெடிய வரலாற்றை கொண்டு வாழ்ந்த தமிழர்கள் மீது அரசு இனப்படுகொலையே மேற்கொண்டு வந்துள்ளது Read more