வவுனியா துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்-
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெரிய உலுக்குளம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இரவு நேர இரவு பாவக்குளம் அருகே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் கைகள் மற்றும் ஒரு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.