Header image alt text

ஜெர்மன் புலம்பெயர் உறவுகளின் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம்-

kalvikku kai koduppom (3)kalvikku kai koduppom (2)ஜேர்மனி நாட்டின் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் 2015ம் ஆண்டுக்குரிய நிகழ்ச்சித்திட்டம் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் கடந்த 24.01.2015 அன்று யாழ். சுழிபுரத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதலாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் புலம்பெயர் உறவுகள் ஜேர்மன் நாட்டின் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்று வருகின்றது. வறிய மாணவர்களின் மேலதிக கல்விக்கு உதவும் பொருட்டு கடந்த ஆண்டில் 94 மாணவர்கள் வலி மேற்கு பிரதேசத்தில் உதவிகளை பெற்றிருந்தனர் இவ் ஆண்டு 113 மணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கன உதவித்திட்டங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் சார்பில் ஜெர்மன் நாட்டிலிருந்து சபாரட்ணம் ஜெயகுமார் (சாமியார்) கலந்து சிறப்பித்துக்கொண்டார்.

சங்கானையில் ஞானம் பவுண்டேசன் நிறுவனம் தாணா ஓடைக் கிராம மக்களுக்கு உதவி-

P1000845P1000891P1000904lhio_hயாழ். சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட து-178 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தாணா ஓடைக் கிராமத்தில் 05.02.2015 அன்று ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தினரால் 37 பயனாளிகளுக்கு ஏறத்தாழ 80,000 ரூபா பெறுமதியிலான மலசலகூட வசதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் அதிதிகளாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன், சங்கானைப் பிரதேச செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமாரன், கிராம உத்தியோகஸ்தர் திரு.சிவகுமார், இளைப்பாறிய கிராம உத்தியோகஸ்தர் திரு.ஜெகதீசன் உட்பட பல உத்தியோகஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக சங்கானை முருகமூர்த்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது தொடர்நது அடிக்கல் நாட்டும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்-

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன

யாழ் இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம்-

blutயாழ்ப்பாண இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து நாளை அதாவது 08.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 02.00 மணிவரை யாழ் இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்களான தமிழ் தேசிய இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது. இரத்ததானம் செய்ய விரும்பிய கொடையாளர்கள் நாளை மேற்படி இரத்ததான முகாமில் கலந்து கொள்ளமுடியும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் யாழில் பரவலாக மக்களுக்கு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள 076 6644 059, 077 0733 719, 077 5058 572, 071 880 9757, 075 7729 544 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.

biut

மக்கள் ஆணைக்கு முரணாக முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பு-

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே மாகாணசபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிமைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசியிடம் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்திருந்தது. அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரச கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது. இந்த சூழ்நிலையில், மீண்டும் அரச கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது. அரசாங்க கூட்டணியிலும் பார்க்க 6ஆயிரத்து 100வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்தது. எம்மைவிட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது. எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என இரா. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

வவுனியா, பரமேஸ்வரா வித்தியாலய விளையாட்டுப் போட்டியும், பாராட்டு நிகழ்வும்-

parmesvara01நேற்று 07.02.2015 வெள்ளிக்கிழமை வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது சமூக ஆர்வலர் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு கடந்த 23.06.2014 புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், வறுமைக் கோட்டின்கீழ் இருந்த மாணவன் ஒருவருக்கான கல்விச் செலவும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியைத் தொடரும் இம் மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றுக்கான நிதிகள் யாவும் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 07.02.2015 மேற்படி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வரவேற்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

parmesvara02parmesvara03parmesvara01parmesvara04parmesvara07parmesvara06parmesvara05parmesvara08parmesvara09parmesvara10parmesvara11parmesvara12