ஜெர்மன் புலம்பெயர் உறவுகளின் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம்-
ஜேர்மனி நாட்டின் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் 2015ம் ஆண்டுக்குரிய நிகழ்ச்சித்திட்டம் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் கடந்த 24.01.2015 அன்று யாழ். சுழிபுரத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதலாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் புலம்பெயர் உறவுகள் ஜேர்மன் நாட்டின் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்று வருகின்றது. வறிய மாணவர்களின் மேலதிக கல்விக்கு உதவும் பொருட்டு கடந்த ஆண்டில் 94 மாணவர்கள் வலி மேற்கு பிரதேசத்தில் உதவிகளை பெற்றிருந்தனர் இவ் ஆண்டு 113 மணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கன உதவித்திட்டங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் சார்பில் ஜெர்மன் நாட்டிலிருந்து சபாரட்ணம் ஜெயகுமார் (சாமியார்) கலந்து சிறப்பித்துக்கொண்டார்.