வவுனியா, பரமேஸ்வரா வித்தியாலய விளையாட்டுப் போட்டியும், பாராட்டு நிகழ்வும்-
நேற்று 07.02.2015 வெள்ளிக்கிழமை வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது சமூக ஆர்வலர் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு கடந்த 23.06.2014 புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், வறுமைக் கோட்டின்கீழ் இருந்த மாணவன் ஒருவருக்கான கல்விச் செலவும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியைத் தொடரும் இம் மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றுக்கான நிதிகள் யாவும் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 07.02.2015 மேற்படி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வரவேற்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.