சங்கானையில் ஞானம் பவுண்டேசன் நிறுவனம் தாணா ஓடைக் கிராம மக்களுக்கு உதவி-

P1000845P1000891P1000904lhio_hயாழ். சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட து-178 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தாணா ஓடைக் கிராமத்தில் 05.02.2015 அன்று ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தினரால் 37 பயனாளிகளுக்கு ஏறத்தாழ 80,000 ரூபா பெறுமதியிலான மலசலகூட வசதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் அதிதிகளாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன், சங்கானைப் பிரதேச செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமாரன், கிராம உத்தியோகஸ்தர் திரு.சிவகுமார், இளைப்பாறிய கிராம உத்தியோகஸ்தர் திரு.ஜெகதீசன் உட்பட பல உத்தியோகஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக சங்கானை முருகமூர்த்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது தொடர்நது அடிக்கல் நாட்டும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்-

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன