சித்தன்கேணி மாதர் சங்க பொன் விழா
சித்தன்கேணி மாதர் சங்க மண்டபத்தில் சங்க தலைவர் திருமதி அஜித்தா சிவகரன் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழவில் பிரதம் விருநதினராக சங்கானைப் பிரதேச செயலர் திரு.அ.சோதிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினரக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.ஆ.கோகுலன், கிராம சேவை அலுவலர் திரு.ந.சர்வேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாதர்சங்க மூத்த உறுப்பினர் திருமதி. மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களும் சங்கானை பிரதேச செயலர் காசிநாதன் நிரூபா அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
இவ் நிகழ்வில் சங்கத் தலைவர் திருமதி அஜித்தா சிவகுமார் அவர்கள் உரையாற்றுகையில் இன்று பொன் விழா காணும் இவ் மாதர்சங்கத்தின் தலைவியாக பதவி வகிப்பதை இடடு மகிழ்வடைகின்றேன். முன் ஒரு காலம் பெண்கள் வாழ்ந்த நிலை இன்று பாரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ் நிலையில் நாம் அனைவரும் இணைந்து பெண்களை வலுவூட்ட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது. இதன் அங்கமாக எமது மாதர்சங்க எல்லைக்கு உட்பட்ட பெண்கள்; இன்று பல நிலைகளிலும் இடம் பிடித்துள்ளனர். எமது பிரதேச சபைத் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது நிலை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்
இது பெண்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே கொள்ள முடியும் இதிலும் அகில இலங்கை பெண் உள்ளூராட்சி உறுப்பினர் சங்கத்தில் உப தலைவராக இடம் பிடித்து எமது பிரதேசத்திற்கு கொளரவம் பெற்றுத்தந்துள்ளார். இவ் செயற்பாட்டிற்கு மேலாக எமது எல்லைக்குள் பெண் வைத்திய நிபுணர்கள் மற்றும் பலதுறை சார் ஆசிரியர்கள் என பலரும் எமது சங்கத்திற்கு பலம் சேர்ர்து வருகின்றனர். இந்த வகையில் எமது சங்கம் பலம் வாய்ந்த ஓர் சங்கமாக அமைந்துள்ளமை குறிப்பிக்; கூடிய ஒன்றாகும். இன்றைய பொண் விழா நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மதிப்புக்குரிய திருமதி நாகரஞ்ச்சினி ஐங்கரன் அவர்களை எமது சங்கத்தில் ஆயுள் அங்கத்தவராக இணந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக்குறிப்பிட்டார் இதன் போது தவிசாளர் சங்க அங்கத்துவ படிவத்தில் கைச்சாத்திட்டு ஆயுள் அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டார்.
இவ் பொண் விழாவில் தொhடர்ந்து பாலர் பாசாலை ஆசிரியரும் சங்கத்தின் சிறேஸ்ட உறுப்பினருமான செல்வி லீலாவதி மாரிமுத்து அவர்கள் பொன்விழா நூலை வெளியீடு செய்து உரை நிகழ்த்தினார்.
இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இன்று சித்தன்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொண் விழா பாரதியின் அன்றைய கனவினை நிஜமாக்கியுள்ளதாக அமைந்துவிட்டது என்பதற்கு மேலாக எனது பிரிவுக்கு உட்பட்ட ஒரு மாதர்கிராம அபிவிருத்திச் சங்கம் என்ற வகையில் பெருமை கொள்கின்றேன்.
அன்று பெண்கள் நிலை தொடர்பில் நோக்கும் போது குறித்தொதுக்கப்பட்ட சில கடமைகளுடன் சமூக கட்டமைப்புக்குள் வாழ்ந்த நிலையில் 1953 ஆம் ஆண்டு இவ் ஊரைச் சேர்ந்த உயர் திரு. மா.வைத்தீஸ்வரன் அவர்களது உயரிய சிந்தனையில் இவ் மாதர்சங்கத்தின் ஆரம்பநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டிலேயே கூட்:றவுத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு அக்கலப்பகுதியிலேயே பெண்களை வலுவுட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டமை பெண்கள் மீது எமது சமூகம் கொண்டிருந்த ஒப்பற்ற மதிப்பை எடுத்துக்காட்டியுள்ளது. இதற்கும் மேலாக இவ் மாதர்களை வலுவுட்டும் அதே வேளை இவ் ஊரில் சைவமும் தழிழும் தளைத்தோங்க முதலியார். குமாரசாமி வள்ளியம்மை அவர்கள் இவ் புனித பூமியினை உயரிய செயற்பாட்டிற்கு அர்ப்பணித்து அதற்கு குண்றக்குடி அடிகளார் மூலம் அடிக்கல் நாட்டி வைத்த பெருமையும் சிறப்பும் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதே வேளை 1965; ஆண்டு முதலாக பாலர்பாடசாலையை அவ்விடத்தில் ஆரம்பித்து இன்று வரை பாலர்கல்வியினை வளம் படுத்தி கிராமத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றமை இவ் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மிகப்பாரிய வெற்றி இலக்கு என்றே இவ் இடத்தில் குறிப்பிட முடியும். இவ் வகையில் வரலாற்றில் தனிப் பெருமை கொண்டதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட மாதர்கிராம அபிவிருத்திச் சங்கம் என்ற பெருமையினையும் கொண்டு இயங்கும் இவ் சங்கம் போற்றுதற்கு உரியது. இந்த வகையில் இன்று பொண் விழாக் காணும் சித்தங்கேணி மாதாசங்கத்தினை மனதார வாழ்த்துகின்றேன். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப் பகுதி மக்களின் பல் வேறு தேவைகள் தொடர்பில் பல் வேறு சேவைகளை நன்கே ஆற்றியுள்ளமை யாபேரும் அறிந்த உண்மையாகும். குறிப்பாக மாதர்களுக்கான பல்வேறு பயிற்சிகள், மாணவர்களுக்கான இசைத்துறை மற்றும் நடனப்பயிற்சிகள், பாலர்பாடசாலைச் சேவைகள் என பலவற்றை குறிப்பிட முடியும். இவ் சேவைகள் தெடர்பில் வெறுமனே எழுத்து வடிவில் இப் பகுதியில் குறிப்பிட்டுவிட முடியாது. நான் எனது ஆரம்ப கல்வியைத் தொடங்கிய இடம் இது. இவ் இடத்திலிருந்தே எனது பயனம் ஆரம்பமானது. அன்று முதலாக இன்று வரை இப் பிரதேசத்தினை என்றுமே மறக்க முடியாத நிலை உள்ளது. இவ் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொண் விழா தொடர்பில் அதன் நிலை மற்றும் செற்பாடுகள் தொடர்பில் எனது சிற்றிவுக்கு எட்டிய நிலையில் சில பதிவுகளை இவ் இடத்தில் பதிவு செய்யலாம் என கருதுகின்றேன். இந்த வகையில்
ஒரு பிரதேசத்தினை பிரதிநிதித்துவபடுத்தும் கிராமி மட்டஅமைப்பு என்பது அக்கிராமத்தின் பல் வேறு துறைசர் செயற்பாடுகளிலும் மற்றத்தினையும் முன்னேற்றத்தினையும் ஏற்படுத்தும் வினைத்திறன் மிக்க அமைப்பாக செயல்படுவது மிக முக்கியமான ஒன்றாகும் அந்த வைகையில் சித்தன்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் மிகுந்த வினைத்திறன் மிக்க பணிகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஆற்றிவருவது குறிப்பிடக் கூடிய ஒன்றபகும்.. இவ் செயற்பாடுகள் தொடர்பில் அன்று முதலாக சித்தன்கேணி மாதர்சங்கம் என்று குறிப்பிட்டாலே என் கண் முன்னே வருவது எமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியை செல்வி லீலாவதி மாரிமுத்து அவர்களே. அவர்களையும் ஆரம்ப காலம் முதலாக இன்று வரை பணியாற்றி வரும் ஏனைய உறுப்பினர்களையும் பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன்.
இதே வேளை இன்றைய நாட்டின் நிலைமையில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நிலை என்பது மிக முக்கிய இடத்தினை பெற்றுள்ளது யாவரும் அறிந்த உண்மையாகும் அந்த வகையில் நடந்து முடிந்த கொடுர யுத்தத்pல அதிகம் பாதிக்கப்பட்வர்கள் பெண்களும் சிறுவர்களும் என்பதும் இவ்விடத்தில் குறிப்பி;டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும் ஒட்டு மொத்தத்pல் அன்றும் சரி இன்றும் சரி பாதிப்புக்கு உள்ளாணவர்கள் பெண்கள் என்பதனை யாவரும் நன்கு அறிவர் இந்த வகையில் இப் பாதிதப்புகளில் இருந்து பெண’களை காப்பாற்றும் மிகப்பரிய பெறுப்புக்கள் இவ் மாதர்கிராம அபிவிருத்திச் சங்கங்களை சாரும் ஒவ் வொரு பகுதி மாதத் கிரம அமைப்புகளும் காத்திரமான வகையில் துன்பத்திற்கு உள்ளாகும் உள்ளான பெண்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வர்களேயானால் அது எமது அடிமைத்தனம் மற்றும் விடுதலைக்கு வழிவகுக்கும் இதே வேளை பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தொடர்பில் உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருடடு கடந்த மகளீர் தினத்தில் இப் பிரதேசத்தினை சேர்ந்த 10000 பெண்களின் கைiயாப்பத்தினை பெற்று மகளீர் தின நாளினை விடுமுறை ஆக்கும் பொருட்டு இந்த நாட்டின் அன்றைய ஐனாதிபதியின் பாரியாருக்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன் . நிட்சயமாக இவ்வாறான வகையில் விழிபபுணர்வு ஏற்படுத்தி பெண்கள் தொடர்பில் முன்னேற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்hயமானது ஆகும்
இநத வகையில் இவர்களது பணி இன்று போல் என்றும் தொடர வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல சித்தன்கேணி பெரியவளவு மகாகணபதிப்பிள்ளையார் இவர்கழுக்கான சகல சௌபாக்கியங்களையும் வழங்க பிரார்திக்கின்றேன். என குறிப்பி;ட்டாhர்.