முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம்
கிளிநொச்சி, முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,220பேர் பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் இதுவரை மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்;படாத பகுதிகளில் ஒன்றான முகமாலையில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முகமாலையை சேர்ந்த 103 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் இத்தாவில் பகுதியை சேர்ந்த 10 குடும்பங்;களைச் சேர்ந்த 39 பேரும் வேம்பொடுகேணி பகுதியை 130 குடும்பங்;;களைச் சேர்ந்த 842 பேருமே இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர் என அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் முகமாலையில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட போதும், வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையால் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.