வவுனியா தாண்டிகுளம் பிரமண்டு மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2015

IMG_2869வவுனியா தாண்டிகுளம் பிரமண்டு மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று (12.02.2015) அதிபர் திருமதி.மஞ்சுளா திருவருள்நேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கோட்ட கல்வி அதிகாரி திரு. நடாராஜா அவர்களும் சிறப்பு  விருந்தினராக  வவுனியா தெற்கு வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர் அவர்களும் கௌரவ விருந்தினராக  புளொட் தலைவரும்; வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்தன்  அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில்; திரு.தர்மலிங்கம் சித்தார்தன்  அவர்கள் பங்குபற்ற முடியாத காரணத்தினால் பதிலாக புளொடின் மத்திய குழு உறுப்பினரும் வன்னி பிராந்திய அமைப்பாளருமான திரு.க.சிவநேசன் (பவன்) அவர்களும் புளொட் இன் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னால் உப நகர பிதாவும் திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் விசேட அதிதியாக திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களும் திரு.பரமாநந்தன் செழியன், திரு.அன்டன் பொன்னையா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் இறுதி அம்சமாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்குரிய அனைத்து செலவுகளும் இலண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பினை சேர்ந்த திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பொறுப்பேற்றிருந்தார்.                         Photos⇓

IMG_2858 IMG_2863 IMG_2867 IMG_2869 IMG_2880 IMG_2890 IMG_2891 IMG_2902 IMG_2913 IMG_2914 IMG_2917 IMG_2921 IMG_2922 IMG_2929 IMG_2934 IMG_2935 IMG_2938 IMG_2940 IMG_2941 IMG_2942 IMG_2945 IMG_2948 IMG_2950 IMG_2953 IMG_2960 IMG_2963 IMG_2965 IMG_2968 IMG_2969 IMG_2972 IMG_2974 IMG_2975 IMG_2978 IMG_2984 IMG_2987 IMG_2988