கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அண்மையில் வட்டுக்கோட்டை முதலிகோவிலடிப் பகுதியில் அமைந்துள்ள அம்பாள் சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி, ஐங்கரன் அவர்கள் குறித்த சன சமூக நிலையததவரின் கோரிக்கைக்கு அமைய அக்கிராம பாடசாலை மாணவர்கட்கு ஜேர்மன் நாட்டின் செல்வதுரை. ஜெகன்நாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படு வரும் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதே சபை உறுப்பினர் கொளரவ.சசிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.