இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு 

59/2, Temple Road, Maskeliya. Phone No: 072 5316735 , 0777560863      
e-mail: edoscmb@yahoo.co     
10வது ஆண்டுவிழா 23.02.2015       (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
Maskeliya10Maskeliya1114.02.2015ம் திகதி மஸ்கெலிய சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் 10வது ஆண்டுவிழா நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ வீ.ஆனந்தசங்கரி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
ஈடோஸ் நிறுவனத்தின் செயலாளரும் நிகழ்வின் தலைவருமான திரு இரா. சங்கையா அவர்கள் தனது உரையில் கௌரவ வீ.ஆனந்தசங்கரி அவர்களும் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் மலையக மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் எனவும் 1977மற்றும் 1983 ஆண்டுகளில் எற்பட்ட கலவரத்தில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த எமது மக்களை கிளிநொச்சி. வவுனியா. முல்லைத்தீவு. நெடுங்கேணி போன்ற பிரதேசங்களில் குடியேற்றிய பெருமை இவர்களையே சாரும் எனக்குறிப்பிட்டு அதனால்தான் இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.  
மேலும் தனதுரையில் கலனிவத்த தோட்ட நிர்வாகம் எமது நிகழ்வில் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வதற்காக அன்று விடுமுறை கொடுத்து அனைவரையும் கலந்து கொள்ள ஏற்பாடுகளை செய்து கொடுத்தமைக்காக தோட்ட நிர்வாகத்தினருக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது ஆய்வுரையில் மலையக மாணவர்களின் பரிதாப நிலையினை எடுத்துரைக்கையில் குறிப்பிட்ட ஒரு பள்ளியில் 10.ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்கள் அதுவும் குறிப்பாக தமிழ் மொழியில் சரியாக எழுத வாசிக்க தெரியாத காரணத்தினால்; அவர்களை 11ம் வகுப்பிற்கு அனுப்பி அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாமல் போனால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற காரணத்தினால் குறிப்பிட்ட பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் 10ம் வகுப்பு சித்தியடையவில்லை என்று அவர்களை பெயில் ஆக்கி 10ம் வகுப்பிலேயே வைத்துள்ளார்கள். 
இதுதான் இன்றும் மலையக மாணவர்களின் கல்வி நிலைமை அது மட்டுமல்ல சில தோட்டங்களில் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதே கிடையாது. எல்லோருக்கும் கட்டாய கல்வி என சட்டம் எழுத்தில் இருந்தால் மட்டும் போதாது. என்று ஆதங்கத்துடன் கூறினார். அதுமட்டுமல்ல வெகு தூரத்தில் அமைந்துள்ள தோட்டங்களில் இருந்து நகருக்கு வரும் மாணவர்கள் பாதி நேரத்தை பயணத்திலேயே செலவிடுவதால், வீடு செல்லும்போது களைப்படைந்து விடுவதாலும் அதனால் படிப்பதற்கான நேரம் குறைவாக இருப்பதாலும் அவர்களின் கலவி பாழாவதற்கு இதுவும் ஒரு காரணமாகின்றது. எனவே எமது அமைப்பு இதற்கான ஏற்பாடுகளையும் எதிர்காலத்தில் ஏற்படுத்தி கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்
முக்கியமான நிழ்வு ஒன்று இருந்தபோதும் திரு சித்தார்த்தன் அவர்களும், திரு. வீஆனந்தசங்கரி அவர்களின் உடன் பிறந்த தம்பி மரணமடைந்து அவரின் இறுதிச் சடங்கு அடுத்தநாள்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தும்; இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையானது  மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் மலையக மக்கள் மீதும் இவர்கள் இருவரும் காட்டும் அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது என நன்றி கூறி பாராட்டினார்.
அடுத்து உரையாற்றிய திரு. சித்தார்த்தன் அவர்கள் தனக்கும் மலையகத்திற்கும் இடையேயுள்ள நீண்டகால தொடர்பு பற்றியும் தங்கள் அமைப்பினூடாக ஏற்கனவே ஆற்றிய சேவைகள் மற்றும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினார். கல்வியில் மலையகம்  மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் தமிழ் மாணவர்களின் கலவியின் தரம் பாதிப்படைந்துள்ளதையும் பட்டியலிட்டார். எனவே இவ்வாறான சேவையை வடக்கு கிழக்கிலும் ஆரம்பிப்பதோடு மட்டுமல்ல திரு. சங்கையாவைப் போல சேவை மனப்பான்மையுள்ள ஆயிரம் சங்கையாக்கள் உருவாகவேண்டும் எனவும் கூறினார். அது மட்டுமல்ல இந்த நிறுவனத்திற்கு  தன்னாலான முழு உதவிகளையும் செய்து ஒத்துழைப்பையும் நல்குவதாக கூறினார்.
அடுத்து உரையாற்றிய திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தான் மலையகத்தில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தான் அரசியலுக்கு போகாமல் தொடாந்;து ஆசிரியர் தொழிலிலேயே நீடித்திருந்தால் மலையகத்தில்தால் அந்த சேவையை செய்திருப்பேன் எனவும் கூறினார். கல்வியல் மலையகம் முன்னேற வேண்டுமஎன்பது தனது நீண்டநாளய கனவு என்பதையும் சுட்டிக்காட்டி அதை இந்த அமைப்பு ஒரு சேவையாக எவரையும் எதிர்பார்க்காமல் இந்தளவிற்கு செயற்படுவதையிட்டு பெருமையாக இருக்கின்றது என்று கூறி நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். தன்னாலான முழு ஒத்துழைப்பையும் செய்வதாக உறுதியளித்தார்.
அடுத்து உரையாற்ற வந்த அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் கௌரவ செ. சிவசுந்தரம் அவர்கள் மலையக மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்காக கடந்த 10 வருடங்களாக இந்த நிறுவனம் மஸ்கெலிய பிரதேசத்தில் ஆற்றிவரும் சேவையை பாராட்டுவதாக கூறினார். நாம் பட்டம் பெற்றுவிட்N;டாம் பதவிகள் கிடைத்துவிட்டன என்று பெருமையடைவதில் அர்த்தமில்லை இங்கே இன்னும் எழுத வாசிக்க தெரியாமல் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் இருக்கின்றார்கள்  என்று சொல்லும் போது எமக்கு வேதனையாக இருக்கின்றது என விசனத்துடன் குறிப்பிட்டார். 
அது மட்டுமல்ல எமது மக்களுக்கு யார் உதவி செய்தாலும் அதை பெருந்தன்மையுடன்  ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை விடுத்து நாங்கள்தான் செய்யவேண்டும்  என ஒரு குறிப்பிட்ட அமைப்புகள் பேசக் கூடாது;. மீரியபெத்தையில் மண்சரிவால்  பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு உதவிகள் செய்ய வந்தபோது வெளியாட்கள் இங்கே வரக் கூடாது என பிரதேசவாதம் பேசக்கூடாது. இந்தநிகழ்வில் கூட இங்குள்ள எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தும் நானும் சக பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ராஜ்குமார்  அவர்களுமே கலந்து கொண்டுள்ளோம் 
இது எதனைக் காட்டுகின்றது. மலையக தலைவர்கள் எமது மாணவர்களின்  கல்வி விடயத்தில் எந்தளவிற்கு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இரண்டு தலைவர்களும் சொந்த பிரச்சினைகள் வேலைச்சுமைகள் இருந்தபோதும் இங்கே வந்துளார்கள் என்றால் அவர்கள் எம் மாணவர்கள மீதும் மக்கள் மீதும் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்துள்ளார்கள் என்று நினைக்கும்பேர்து அவர்கள் மீது அளவுமீறிய மதிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றது என்று கூறினார். மேலும் இந்த அமைப்பிற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக கூறினார்.
செல்வி சுவேதா மலையக பெண்களின் இன்றைய நிலைமை பற்றியும் அமைப்பின் முன்னாள்  மாணவியும், தற்போது பாடசாலையொன்றில் அசிரியையாகவும் கடமையாற்றும் செல்வி. ந.குணநாயகி மலையக மாணவர்களின் இன்றைய பரிதாபகரமான நிலை பற்றியும்  உரையாற்றினார்கள்.
அமைப்பின் ஆசிரியர்கள் செல்வி ரா.திவ்யா மற்றும் செல்வி ச.சுவேதா ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
அமைப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்சிகளை மேற் கொண்டு வருபவர்களால்  தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ராஜ்குமார், கொழுப்பு வர்த்தகர் திரு. கமலகுமார், காட்மோர்  தோட்ட அரசியல் பிரமுகர் திரு.ஆறுமுகம், மற்றும் பல தோட்டங்களைச்  சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
திரு. செ. மதிவதணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு நன்றி கூறி பாராட்டிப் பேசினார்
திருமதி. ம. அருளானந்தீஸ்வரி,
உபதலைவர்- ஈடோஸ் 
Maskeliya01Maskeliya02Maskeliya03Maskeliya04Maskeliya05Maskeliya06Maskeliya07Maskeliya08Maskeliya09Maskeliya12Maskeliya13Maskeliya14Maskeliya15Maskeliya16Maskeliya17Maskeliya18