Header image alt text

கொட்டகலை தமிழ் வித்தியாலயத்திற்கு புளொட் ஜெர்மன் கிளை உதவி-

kottagala 23.02.2015 (2) kottagala 23.02.2015 (3)நுவரெலியா கொட்டகலை சென்ற் அன்றூஸ் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு நேற்றையதினம் (23.02.2015) பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாகவே மேற்படி பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஏற்பாட்டில்; இவற்றை சமூக சேவையாளர் திரு. கெங்காதரன் அவர்கள் கொட்டகலை சென்ற் அன்றூஸ் தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி ஏ.என். குலேந்திரா அவர்களிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐ.நா அறிக்கை பிற்போடலை ஆட்சேபித்து யாழில் பேரணி-

yaaalil perani (4)இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை துரிதப்படுத்தக் கோரியும் யாழில் இன்று ஆர்ப்பாட்;டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவர் ராசகுமாரன் இதுபற்றி கருத்துக் கூறுகையில், அமைதியாக இடம்பெற்ற இந்த போரணியில் பல்லாயிரம் கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இது தமிழர்களின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்து காட்டுவதாக அமைந்திருந்தது என்றார். குறித்த ஆர்ப்பட்டப் பேரணி யாழ்ப்பாண வளாகத்தில் ஆரம்பித்து பலாலி மற்றும் அநுராதபுரம் சந்தி ஊடாக சென்று நல்லூர் வடக்கு வீதியில் உள்ள திடலில் ஒன்றுகூடலுடன் நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவென மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக சமூகம், பொதுசன அமைப்புக்கள், அரசியல் கட்சியினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

jaffna_perani_13jaffna_perani 11jaffna nocreditjaffna nocredit 1

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

president and sing forgn minister metஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றதாக, அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலையானது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க பணிகளுக்கு தொடர் ஆதரவு வழங்கும் சிங்கப்பூருக்கு அமைச்சர் மங்கள சமரவீர தனது நன்றிகளையும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், பொது முகாமைத்துவம், நகர அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சு அறிக்கையிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரசார நடவடிக்கைகள் நிறைவு-

therthal nadavadikkaiku arasa valankalaiமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகளை நாளை நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டுமென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 9 உறுப்பினர்களும், கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 52 ஆயிரத்து 758 பேர் தகுதிபெற்றுள்ளனர். 95 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-பொலிஸ் பேச்சாளர்-

நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 600 ஆக குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கொலைகள் மாத்திரமின்றி, கொள்ளைச் சம்பவங்கள், வீடுடைப்பு உட்பட அனைத்து குற்றச்செயல்களும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சனத்தொகை அதிகரித்து, நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி என்பன ஏற்பட்டுள்ள நிலையில், குற்றல்செயல்கள் குறைந்துள்ளமை சிறந்த விடயமாகும். பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்த விசாரணைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் பாவனை என்பன குற்றச்செயல்களின் வீழ்ச்சிக்கு காரணமாகும். நீதிமன்றம், சட்டமா அதிபர், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பும் குற்றச்செயல்களை குறைக்க வழிசெய்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சுதர்மன் ரதலியகொடவுக்கு பிணை-

சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.டி.என்) செய்திப்பிரிவு முன்னாள் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட, கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி சரணடைந்தபோது. அவரை இன்று 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவதூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரத்தை பிரிசுரித்தார் என்று சுதர்மன் ரதலியகொடவுக்கும் ஏனைய இருவருக்கும் எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்தே அம்மூவரும் தலா 500,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர், நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் அவருடைய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யயப்பட்டிருந்தது.

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்கத் தடை-

நாட்டின் கடற்பரப்புக்குள் இலங்கை கொடியுடன் மீன்பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன என மீனவ மற்றும் நீர்வள அபிவிருந்தி இராஜங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல, படகுகளின் கட்டுப்பாட்டை கண்காணிப்பதற்காக படகுகளில் ரி.எம்.எஸ் உபகரணங்களையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாகாண சபைத்தலைவர் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல்-

மத்திய மாகாண சபையின் தலைவர் மஹிந்த அபேகோன் உட்பட 13 பேரை, நாளை 25 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று உத்தரவிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு டிசெம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் ஒன்றில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, 14 பேரையும் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம்-

23.02.2015 நேற்று வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம் சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது இதன்போது தவிசாளர் அண்மையில் வட மாகாண சபை முதல்வரால் கொண்டுவரப்ப்ட இனப்படுகொலைத் தீர்மாணத்தினை ஆதரித்து உரை நிகழ்தினார் அவ் உரை வருமாறு

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை

வட மாகாண சபையின் முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வட மகாகாண சபையின் 22வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீhமானம் ஆகிய இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்ற தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க வேண்டியநிலை காணப்படுகின்றது. முதற்கண் இவ்வாறாண துணிச்சலான தீர்மானத்தினை எதிர்ப்பின்றி வடக்கு தமிழர்களது அரசாக நிறைவேற்றியமையை இட்டு பாராட்டுவதோடு வாழ்த்துகின்றேன் இவ் விடயம் தொர்பில் இவ் இலங்கைத்தீவில் எமக்கும் சுதந்திரம் வழங்கியதாக கூறப்பட்ட காலம் முதலாக இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக நீண்ட நெடிய வரலாற்றை கொண்டு வாழ்ந்த தமிழர்கள் மீது அரசு இனப்படுகொலையே மேற்கொண்டு வந்துள்ளது Read more