சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றதாக, அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலையானது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க பணிகளுக்கு தொடர் ஆதரவு வழங்கும் சிங்கப்பூருக்கு அமைச்சர் மங்கள சமரவீர தனது நன்றிகளையும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், பொது முகாமைத்துவம், நகர அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சு அறிக்கையிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரசார நடவடிக்கைகள் நிறைவு-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகளை நாளை நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டுமென தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 9 உறுப்பினர்களும், கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 52 ஆயிரத்து 758 பேர் தகுதிபெற்றுள்ளனர். 95 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-பொலிஸ் பேச்சாளர்-
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 600 ஆக குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கொலைகள் மாத்திரமின்றி, கொள்ளைச் சம்பவங்கள், வீடுடைப்பு உட்பட அனைத்து குற்றச்செயல்களும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சனத்தொகை அதிகரித்து, நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி என்பன ஏற்பட்டுள்ள நிலையில், குற்றல்செயல்கள் குறைந்துள்ளமை சிறந்த விடயமாகும். பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்த விசாரணைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் பாவனை என்பன குற்றச்செயல்களின் வீழ்ச்சிக்கு காரணமாகும். நீதிமன்றம், சட்டமா அதிபர், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பும் குற்றச்செயல்களை குறைக்க வழிசெய்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.
சுதர்மன் ரதலியகொடவுக்கு பிணை-
சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.டி.என்) செய்திப்பிரிவு முன்னாள் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட, கொழும்பு மேலதிக நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி சரணடைந்தபோது. அவரை இன்று 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவதூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரத்தை பிரிசுரித்தார் என்று சுதர்மன் ரதலியகொடவுக்கும் ஏனைய இருவருக்கும் எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்தே அம்மூவரும் தலா 500,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர், நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் அவருடைய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யயப்பட்டிருந்தது.
வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்கத் தடை-
நாட்டின் கடற்பரப்புக்குள் இலங்கை கொடியுடன் மீன்பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன என மீனவ மற்றும் நீர்வள அபிவிருந்தி இராஜங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல, படகுகளின் கட்டுப்பாட்டை கண்காணிப்பதற்காக படகுகளில் ரி.எம்.எஸ் உபகரணங்களையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண சபைத்தலைவர் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல்-
மத்திய மாகாண சபையின் தலைவர் மஹிந்த அபேகோன் உட்பட 13 பேரை, நாளை 25 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று உத்தரவிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு டிசெம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் ஒன்றில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, 14 பேரையும் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம்-
23.02.2015 நேற்று வலி மேற்கு பிரதேச சபையின் 43வது மாதாந்த சபைக் கூட்டம் சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது இதன்போது தவிசாளர் அண்மையில் வட மாகாண சபை முதல்வரால் கொண்டுவரப்ப்ட இனப்படுகொலைத் தீர்மாணத்தினை ஆதரித்து உரை நிகழ்தினார் அவ் உரை வருமாறு
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை
வட மாகாண சபையின் முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வட மகாகாண சபையின் 22வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீhமானம் ஆகிய இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்ற தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க வேண்டியநிலை காணப்படுகின்றது. முதற்கண் இவ்வாறாண துணிச்சலான தீர்மானத்தினை எதிர்ப்பின்றி வடக்கு தமிழர்களது அரசாக நிறைவேற்றியமையை இட்டு பாராட்டுவதோடு வாழ்த்துகின்றேன் இவ் விடயம் தொர்பில் இவ் இலங்கைத்தீவில் எமக்கும் சுதந்திரம் வழங்கியதாக கூறப்பட்ட காலம் முதலாக இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக நீண்ட நெடிய வரலாற்றை கொண்டு வாழ்ந்த தமிழர்கள் மீது அரசு இனப்படுகொலையே மேற்கொண்டு வந்துள்ளது இவ்வாறு திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்ற எமது வட மாகாணசபை முதல்வரின் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் அதேவேளை இவ் இனப்படுகொலை குறித்த இந்த முறைப்பாட்டையும் கவனத்தில் எடுத்து தகுந்த விசாரணைக்கும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் சட்ட நடவடிக்கைக்கும் பரிந்துரைக்க ஆவன செய்யும் தமிழ் பொருட்டு அனைத்து தமிழ் உறவுகளும் உறுதியுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கடந்த 60 வருடகாலமாக வரலாற்று வன்முறைகள் கொலைகள், கூட்டுக்கொலைகள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் பண்பாடு, கலாச்சார மற்றும் மொழி அழிப்புக்கள் தொடார்சியாக மேற்கொள்ளபபட்டமை ஒர் இனத்தினை அழிக்கும் இல்லாதொழிக்கும் செயல் என்பது வெளிப்படையான உண்மை இந்த வகையில் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்கள் என்ற வகையில் மக்கள் கொல்லப்படும் சந்தர்ப்ங்களில் அவற்றை தடுக்க முடியாத நிலையில் இருந்த நாம் அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வடமாகாண சபையின் மூலம் புறப்பட்ட இந்த நீதிக்கான பயணத்தில் எமது வலுவையும் இணைத்துக் கொள்வோம். இதேவேளை தமிழர் தம் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த படுகொலைகள் தொடாடபிலும் குறிப்பாக குமுதினிப் படுகொலை, கொக்கட்டிச் சோலை படுகொலை, செம்மணிப் படுகொலை. நவாலி சென் பீட்டஸ் தேவாலய படுகொலைகள் செஞ்சோலைப் படுகொலைகள் என நீண்டு செல்லும் படுகொலைகள் தெடர்பான படுகொலைகள் தொடாபிலும் உரிய முறையிலான விசாரணைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்த வழி ஏற்படுத்தப்ப வேண்டும். இது மடடும் அல்லாமல் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் ஊடகத் துறைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் படுகொலைகளும் கூட உரிய முறையான விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தபபடுவது மிக முககியமான ஒன்றாகும்.
இதேவேளை இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடாபிலும் தற்போது உள்ள கொழும்பு அரசு அதிக அக்கறை காட்ட கூடிய வகையில் தீர்மாணங்களை மேற்கொள்ள வேண்டும் என இவ் இடத்தில் மிக வினயமாக கூறிக்கொள்கின்றேன். இவ்வாறே காணாமல் போனோர் தொடர்டபான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை ஏக்கத்துடன் தவித்து நிற்கும் உறவுகளுக்கு கொழும்பு அரசு திட்டவட்டமாக கூறும் வகையில் நடவடிக்கையை தமிழர் அரசாகிய வடக்கு அரசு ஏற்படுத்த வேண்டும். கடந்த இரண்டு தசாப்பத காலமாக இடம்பெற்று வந்த இவ் விடயம் தொடார்பில் உரிய முறையான மழுப்பல் அற்ற பதிலை ஆழும் வர்க்கம் கூறத்தக்கதான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் .இதேவேளை எமது மண்ணில் அரங்கேற்றப்பட்ட ஆள்கடத்தல், கப்பம் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த நவடிக்கை எடுக்கப்படவேண்டியது காலத்தின் க்ட்டாயம் ஆகும்.
போரின் வடுக்களுடன் வாழும் மக்களுக்கான உதவிகள் இவ் உதவிகள் முழுமையான வாழ்வாதாரத்திற்கு பொருத்தமற்ற ஒன்றாக அமைவது தொடர்பில் பலரும் அறிந்த விடயம் இவ் விடயம் தொடர்பில் போரின் வடுக்களுடன் வாழும் மக்களுக்கு அவர்கள் உண்மையில்; உயர் நிலை பெறத்தக்கதான வழிகளை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். இவ் விடயம் தொடர்பிலும் கொழும்பு அரசு புதிய உத்திமுறைகளை பயன்படுத்தி உண்மைத் தரவுகளுக்கு ஏற்ப உதவ முன்வர வேண்டும். இதற்கான உரிய உயரிய பொறிமுறையினை வடக்கு தமிழர் அரசு உரிய தீர்மானத்தின் வாயிலாக உருவாக்க கொழும்பு அரசுக்கு அழுத்தம் வழங்க உடன் நவடிககை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் இதன்போது சபையில் காணப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தவேளை சபையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் முன்னணியினை சேர்ந்த 3வரில் ஒருவர் வருகை தராது ஏனையவர்கள் பலத்த வாத விவாத எதிர்ப்புக்கு மத்தியில் இத்தீர்மானம் தொடாபில் நடு நிலையினை வகிப்பதாக கூறிக்கொண்டனர்