வடலியடைப்பு சனசமூக நிலையத்தில் கலந்துரையாடல், அரங்கம் அமைக்க நிதியுதவி-
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு க.சுதர்சன் அவர்களின் தலைமையில் அங்கத்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இவ் நிபழ்வின்போது குறித்த நிலையத்தவரின் வேண்டுகோளுக்கு அமைவாக திறந்தவெளி அரங்கம் ஒன்றை அங்கு அமைக்கும் பொருட்டு வட மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்கூடாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர் திரு கணேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். ⇓Photos