பெரியமடு அம்பாள் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி-
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று (26.02.2015) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. ம.தியாகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி.மங்களகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. ⇓Photos