கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேர்ப் பவனி, திருப்பலி பூஜைகளும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகள் அங்கு சென்றுள்ளனர். கடற்படையினரால் இதற்கான படகு சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேசுவரத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 4,296 பேர் சனிக்கிழமை புறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து 110 படகுகளில் செல்லும் இவர்களின் பாதுகாப்புக்காக, இரு விசைப் படகுகள், இரண்டு நாட்டுப் படகுகளில் 20 மீனவர்கள் செல்வதாகவும், பக்தர்கள் பாதுகாப்புக்காக “லைப் ஜாக்கெட்´ வழங்க இராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அரசியல் விவகாரச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. ஐநா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின்போது அவர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை-
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். போரிஸ் நெம்ட்சொவ் என்ற அவர் ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அவர் மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரெயினில் இடம்பெறும் யுத்தத்துக்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு அவர் ஆதரவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்துக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லண்டன் விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு-
லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இச் சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று அவர்மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டுவரும் சுபாஹரி, உள்நாட்டு யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு இலங்கையிலருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவராவார். அவரது கணவரான சோதிலிங்கம் செல்லத்துரை (44) தமது பிள்ளைகளின் கல்வி நிமித்தம் அவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்தார். இதனையடுத்து செல்லத்துரை தனது 18 வயது மகளான ஹம்சனாவுடன் கடந்த ஒக்டோபரில் லண்டன் சென்றார். இவர்களின் 22வயது மகன் இலங்கையில் அவர் கணனி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலரி மாளிகையின் பூக்கள் கம்பஹாவுக்கு மாற்றம்-
அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதன் காரணத்தினாலேயே இவையனைத்தும் அகற்றபட்டதாக, பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட அனைத்து பூந்தொட்டிகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமரின் ஊடக செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் சீனப் பிரதமர் சந்திப்பு-
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், சீனாவின் பிரதமர் லீ கேகியாங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. சீனாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது இலங்கையுடனான நல்லுறவுக்கு சீனா முக்கியத்துவம் வழங்கும் என்று சீனாவின் பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை நாட்டு மக்களின் அபிலாசைகளை முக்கியத்துவப் படுத்தும் வகையிலான வெளிவிவகார கொள்கையை வகுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவின் எதிர்க்கட்சிக் குழு இலங்கை வருகை-
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டின் எதிர்க்கட்சிக் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. அவர்கள் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது மாலைதீவில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது விடுதலை தொடர்பில் ராஜதந்திர உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளின் விபரம் கோரல்-
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எல்லோரும் திரும்பி வரவிரும்பமாட்டார்களென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை திரும்ப விரும்புவோரின் விவரங்களை கேட்டோம். இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய இலங்கை அகதிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பிவர விரும்பவில்லை. திரும்பி வர விரும்புவோரும் உள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
செட்டிக்குளம், மிஹிந்தலை பகுதிகளில் பலத்த காற்று, வீடுகளுக்கு சேதம்-
வவுனியா செட்டிக்குளம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் நேற்றுமாலை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. செட்டிக்குளம் பகுதியில் 03 வீடுகளும் மிஹிந்தலை பகுதியில் 10 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனானா வானிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சர்வதேச மகளீர் தினத்தினையொட்டி வலி மேற்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு-
வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியில் சர்வதேச மகளீர் தினத்தினை ஒட்டி பல்வேறு வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்;பட்டுள்ளது. இதில் பாடசலை மாணவர்கட்கு 24 வகையான போட்டிகளும் பிரதேச மட்ட அமைப்புகளுக்கு 46 வகையான போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது. இவ் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு வெகு விமரிசையாக வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 08.03.2015 அன்று மாலை இடம்பெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். இவ் நிகழ்வு வருடம் தோறும் தவிசாளரால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு மேலாக இவ் ஆண்டு சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீர் எழுச்சி வாரமாக அனுஸ்டிக்க ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ் நிகழ்வுகள் தினமும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெறுகின்றது. இவ் எழுச்சி நாள் விபரம் வருமாறு
எழுச்சி நாள் -01
01.03.2015 – பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான ஆலோசனையும் பயிற்சியும்
மேற்படி விடயத்தினூடாக எமது பிரதேசத்திலுள்ள பெண் மாற்றுத் திறனாளிகளை இனங்கண்டு அவர்களது தற்போதய நிலையில் மாற்றத்தினையும் முன்னேறறத்தினையும் ஏற்படுத்தக்கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ளத்தக்கதான பொறிமுறைகளை ஒழுங்கு செய்தல் – இவ் நிலையில் தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் மேற்படி பெண் மாற்றுத் திறனாளிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது அவாகள் மூலமாக அவர்களது குடும்பத்தில் மேற்குறித்த தன்மையில் உள்ளவர்கள் காணப்படுவார்கள் ஆனால் அவர்கட்கு அறிவித்தலை சென்றடையத்தக்கதான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ் நிகழ்வு 01.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்
எழுச்சி நாள் -02
02.03.2015 – பெண்கள் வாயிலாக பிரதேச ரீதியிலான நிலைத்து நிற்கக்கூடிய சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் தொடாபிலான ஆலோசனையும் பயிற்சியும்
மேற்படி விடயம் தொடாடபில் எமது பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் இருந்தும் தலா இரண்டு பெண்கள் வீதம் தெரிவு செய்து இவ் விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதேவேளை அரச பொது நிறுவனங்களிலும் நீர் வினயோகம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் பணியாற்றக் கூடிய உத்தியோகஸ்தர்கள் பாடசாலை மட்டத்தில் பணியாற்றக் கூடிய உத்தியோகஸ்தர்கள் ஆகியோரை இவ் நிகழ்வில் கலநது கொள்ளசெய்வதன் வாயிலாக அணமைக் காலமாக ஏற்பட்டு வரும் நீர் தொடாபான பிரச்சனைகட்கு முகம் கொடுக்க தயாரான சமூக கட்டமைப்பை உருவாக்ககுவதோடு பாதூப்பான நிலையினையும் உருவாக்குதல்
இவ் நிகழ்வு 02.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்
எழுச்சி நாள் -03
03.03.2015 – மகளீர் கைப்பணிப் பெருடகாட்சியும் சந்தைப்படுத்தலும், தொழில் சந்தையும்
மேற்படி விடயம் தொடாடபில் எமது பிரதேசத்திலுள்ள மகளீர் கைப்பணி நிலையங்களின் உற்பத்திப பொருட்களை கொண்டதான பொருட்சகாட்சியினை நிகழ்துவதற்கூடாக மகளீர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர் வினைத்திறமைகளை வெளிக்காடடும் அதேவேளை அதற்குரிய சந்தைப்படுததல் தன்மைகளையும் ஊக்குவித்தல்- இவ் விடயம் தொடாபில் தங்கள் நிர்வாகத்திறகு உட்பட்ட கா.பொ.த உயர் தர மாணவர்களை இக் கண்காட்சிக்கு அனுப்புவீர்களேயானால் அவர்களுக்கு மேற்படி உற்பத்திகள் தொடர்பில் விளிப்புனர்வுகள் ஏற்படும் அதே வேளை உற்பத்திகளை சந்தைப்படுததுவதற்கான வாய்புக்கள் எதிர்கலத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ் நிகழ்வு 03.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்
எழுச்சி நாள் -04
04.03.2015 – வலி மேற்கு பிரதேச ரீதியான விதவைகள் சங்கம் அமைத்தலும் அவர்களுக்கான வாழ்வாதார செயல் திட்டம் அமைத்தலும்
மேற்படி விடயம் தொடாடபில் எமது பிரதேசத்திலுள்ள பல்வேறு நிலைகளிலும் பாதிபபுக்குள்ளாகி இன்று பெண் தலைமைத்துவ குடும்பம் என்ற நிலையினை அடைந்துள்ள குடும்பங்கள் தொடர்பில் மேலும் அவர்களது நிலையினை வலுப்படுத்தக்கூடிய வகையில் அவர்களது ஒற்றுமையையும் அனுபவங்களையும் மனதளவில் திட நிலையினையும் மேம்படுத்தும் பொருட்டு வலி மேற்கு விதவைகள் சங்கத்தினை அமைப்பதன் வாயிலாக பல்வகை உதவி சந்தர்ப்பங்களை ஏற்படுத்த கூடிய வகையயில் சங்கம் அமைத்தல் மறறும் அவர்களது தேவைகளை கண்டறிதல் இதன் வாயிலாக எதிர்காலத்தில் மேற்படி நபர்கள் தொடர்பில் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் தொடர்பில் மிகப் பொருத்தமான வினைத்திறன் மிக்க அபிவிருத்திப் பொறிமுறைகளை உருவாக்குதல்
இவ் நிகழ்வு 04.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்
எழுச்சி நாள் -05
05.03.2015 – மகளிருக்கான இலவச சட்ட ஆலோசனை
மேற்படி விடயம் தொடாடபில் எமது பிரதேசத்திலுள்ள பல்வேறு விடயங்களால் பாதிப்புக்கு உள்ளகி சட்ட ஆலோசனைகள் பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் தொடர்பில் அவர்களுக்கான வழிகாட்டல்களை பிரசித்தி பெற்ற வழக்குரைஞர்கள் வாயிலாக ஆலோசனை பெறுதலும் அதன் வழி அவர்களுக்hன உரிய தீர்வுகளை முன்னிறுத்தலும்
இவ் நிகழ்வு 05.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்
எழுச்சி நாள் -06
06.03.2015 – பாடசாhலை மாணவிகளுக்கான இலவச நடை முறைச் சட்டங்கள தொhபான கருத்தமைவு
இன்றைய சம காலத்தில் பாடசாலை மாணவிகள் பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும் இவ் விடயம் தொடாடபில் பாதுகாக்கக்கூடிய சட்டங்கள் தெடர்பில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவிகட்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் சட்ட வல்லுனர்களின் உதவியுடன் எமது பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் ஒரு மணி நேரத்தினை உள்ளடக்கியதான கருத்தமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய இடம் மற்றும் காலம் பின்னர் தங்களுக்கு அறியத் தரப்படும்
எழுச்சி நாள் -07
07.03.2015 – மகளீருக்கான இலவச வைத்திய ஆலோசனை
மேற்படி விடயம் தொடாடபில் எமது பிரதேசத்திலுள்ள பெண்களுக்கு மாத்திரம் பெண்களுக்கே உரிய சில நோய்கள் மற்றும் அவற்றினை கட்டுப்படுத்தும் கண்டறியும் வழிகள தொடாடபில் யாழ் பல்கலைக்கழக வளவாளர்கள் மற்றும் எமது பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் விகாட்டலுடன் இவ் நிகழ்வு இடம் பெறும்
இவ் நிகழ்வு 07.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்.
எழுச்சி நாள் -08
சர்வதேச மகளீர் நாள் நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச சபை மண்பத்தில் இம் பெறும்
சமூக மட்ட அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள போட்டிகள்.(உத்தேசமாக இடங்கள், நாள்கள் குறிக்கப்பட்டுள்ளன. வசதியை ஒட்டி மாற்றங்கள் மேறகொள்ளலாம்)
கட்டுரை போட்டி
தொ.இ போட்டிகள் பிரிவுஃ வயது விடயம்
01.1 கட்டுரை வளர்ந்தோர் போட்டி 20- 35 வயதுப் பிரிவு. பெண் தலையெடுக்கும் பெண்களுக்கெதிரான வன் முறைகளும், அவற்றை எதிர் கொள்ளலும்.
01.2 கட்டுரை வளர்ந்தோர் போட்டி 36- 50 வயதுப் பிரிவு. பெண் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன் முறைகளும், தீர்வும்
01.3 கட்டுரை வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்) சிறார்கள், பெண்கள் எதிர் நோக்கும் அண்மைக்காலப் பிரச்சினைகள்.
01.4 கட்டுரை பிரிவு1 வயது 11- 12. பெண்களும் சமூகக் கடமைகளும். ;(240-300 சொற்கள்)
01.5 கட்டுரை பிரிவு 2 வயது 13- 14. தமிழ் பெண் புலவர்கள்(300-350 சொற்கள்)
01.6 கட்டுரை பிரிவு 3 வயது 15- 16 சமகால பெண்களும், சவால்களும்(350- 500 சொற்கள்)
01.7 கட்டுரை பிரிவு 4 வயது 17- 19;. ஈழத்துப் பெண் எழுத்தாளர் ஒருவரது படைப்பிலக்கியம் சார்ந்த விமர்சன பார்வை. 500-600 சொற்கள்)
02.1 கவிpதை வளர்ந்தோர் போட்டி 20-35 வயது பெண். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ நவீனஃ மரபுக் கவிதை யு 4 தாளில் இருபக்கம்.
02.2 கவிpதை வளர்ந்தோர் போட்டி 36- 50 வயதுப் பிரிவு. பெண ‘நாமெலாம் புதுமைப் பெண்கள்’ நவீனஃ மரபுக் கவிதை யு 4 தாளில் இருபக்கம்.
02.3 கவிpதை வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்) ‘ஆனையடக்கிய அரியாத்தை காண்’
நவீனஃ மரபுக் கவிதை யு 4 தாளில் இருபக்கம்.
02.4 கவிpதை பிரிவு 1 வயது 11- 12. ‘எங்கள் அம்மா’
16 வரிகள்
02.5 கவிpதை பிரிவு 2 வயது 13- 14. “நாம் பெண்கள்”
ஏ 4 தாளில் ஒரு பக்கம்
02.6 கவிpதை பிரிவு 3 வயது 15- 16
02.7 கவிpதை பிரிவு 4 வயது 17- 19;. “புது யுகம் படைப்போம். புறப்பட்டு வாரும்” நவீனஃ மரபுக் கவிதை யு 4 தாளில் இருபக்கம்.
03.1 சிறுகதை வளர்ந்தோர்போட்டி 20- 35 வயது பெண் ‘சாதனை படைப்போம் வேதனை தீர்ப்போம்’ நவீனஃ மரபுக் கவிதை யு 4 தாளில் இருபக்கத்திற்குக் குறையாமல்.
03.2 சிறுகதை வளர்ந்தோர் போட்டி 36- 50 வயது பிரிவு. பெண் குடும்பப் பொறுப்பினை எடுத்தியம்பும் சம்பவம் கொண்ட சிறு கதை ஏ 4 தாளில் 3 பக்கத்திற்கு மேற்படாமல்;.
03.3 சிறுகதை வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்)
03.4 சிறுகதை பிரிவு 3 வயது 15- 16 நல்ல மாணவன்ஃ நல்ல மாணவி.
03.5 சிறுகதை பிரிவு 4 வயது 17- 19;. உயர்விற்கு வழி சமைத்த உத்தம ஆசிரியர். உயர்விற்கு வழி சமைத்த உத்தம பெற்றோர்.
04.1 பேச்சு வளர்ந்தோர்போட்டி 20- 35 வயதுப் பிரிவு. பெண் போட்டி ஆரம்பமாகுமுன் எழுமாற்றாக வழங்கப்படும்.( 5 நிமிடம்)
04.2 பேச்சு வளர்ந்தோர் போட்டி 36- 50 வயதுப் பிரிவு. பெண் போட்டி ஆரம்பமாகுமுன் எழுமாற்றாக வழங்கப்படும்.( 6 நிமிடம்)
04.3 பேச்சு பிரிவு 1 வயது 11- 12. ‘அம்மா என்றால் அன்பு’ (3 நிமிடம்)
04.4 பேச்சு பிரிவு 2 வயது 13- 14. தாய்க்குலம் போற்றுவோம்.(4- 5 நிமிடம்)
04.5 பேச்சு பிரிவு 3 வயது 15- 16 வீரப் பெண்கள் (5 நிமிடம்)
04.6 பேச்சு பிரிவு 4 வயது 17- 19;. போட்டி ஆரம்பமாகுமுன் எழுமாற்றாக வழங்கப்படும்.( 5-7 நிமிடம்)
05.1 ஓவியம் திறந்த போட்டி 20 வயதிற்கு மேற்பட்டோர். பெண்கள் எழுச்சியைச் சித்தரிக்கும் ஓவியம்.
05.2 ஓவியம் பிரிவு 1 வயது 11- 12. வீடும், வயலும் இயற்கைக் காட்சி
05.3 ஓவியம் பிரிவு 2 வயது 13- 14. நான் காண விரும்பும் காட்சி
05.4 ஓவியம் பிரிவு 3 வயது 15- 16 பெண்ணியம் சார்ந்த படைப்பு யு 3 தாளில். நீர் வர்ணம் அல்லது மெழுகு சோக்.
05.5 ஓவியம் பிரிவு 4 வயது 17- 19;. பெண்ணியம் சார்ந்த படைப்பு யு 3 தாளில். நீர் வர்ணம் அல்லது மெழுகு சோக்.
06.1 கிராமியப் பாடல்; போட்டி வளர்ந்தோர்போட்டி 20- 35 வயதுப் பிரிவு. பெண் பெண்கள் பெருமையை நிலை நிறுத்தும் நாட்டார் மெட்டிலமைந்த பாடல்கள். முதலிடம் பெறுவோர், மார்ச் எட்டாம் திகதிய நிகழ்வின்போது , பின்னணி இசையுடன் மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
06.2 கிராமியப் பாடல்; போட்டி வளர்ந்தோர் போட்டி 36- 50 வயதுப் பிரிவு. பெண் மேற்படி
06.3 கிராமியப் பாடல்; போட்டி வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்)
மேற்படி
07.1 சமநிலை ஓட்டம் வளர்ந்தோர்போட்டி 20- 35 வயது பெண் தலையில் சும்மாடு வைத்து அதன் மீது தண்ண்Pர்க் குடம் வைத்து வேகமாக நடத்தல்
07.2 சமநிலை ஓட்டம் வளர்ந்தோர் போட்டி 36- 50 வயது பிரிவு. பெண் தலையில் சும்மாடு வைத்து அதன் மீது தண்ண்Pர்க் குடம் வைத்து வேகமாக நடத்தல்
07.3 சமநிலை ஓட்டம் வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்) தலையில் சும்மாடு வைத்து அதன் மீது தண்ண்Pர்க் குடம் வைத்து ஓடுதல்ஃவேகமாக நடத்தல்
08.1 கோலம் போடுதல் பிரிவு 1 வயது 11- 12.
08.2 கோலம் போடுதல் பிரிவு 2 வயது 13- 14.
08.3 கோலம் போடுதல் பிரிவு 3 வயது 15- 16
08.4 கோலம் போடுதல் பிரிவு 4 வயது 17- 19;.
09.1 பொங்கல் பொங்குதல் வளர்ந்தோர்போட்டி 20 ற்கு மேல் – (ஆண் ூ பெண்)
10.1 மாலை கட்டுதல் பிரிவு 1 வயது 11- 12.
10.2 மாலை கட்டுதல் பிரிவு 2 வயது 13- 14.
10.3 மாலை கட்டுதல் பிரிவு 3 வயது 15- 16 உம் அதற்கு மேலும்.
11.1 மெதுவான சயிக்கிள் ஓட்டப் போட்டி வளர்ந்தோர்போட்டி 20- 35 வயதுப் பிரிவு. பெண்
11.2 மேற்படி வளர்ந்தோர் போட்டி 36- 50 வயதுப் பிரிவு. பெண்
11.3 மேற்படி வளர்ந்தோர் போட்டி 51 வயதுக்கு மேற்பட்டோர். (ஆண் ூ பெண்)
போட்டிகள் நடைபெறும் இடமும், காலமும். :
வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபம்.
• 2015.03.01 காலை 09.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை. ஓவியம்,
• 2015.03.01 பிற்பகல் 01.00 மணி தொடக்கம் சிறுகதை,
• 2015.03.01 காலை 09.00 மணி தொடக்கம் கட்டுரை கவிpதை.
• 2015.03.01 காலை 09.00 மணி தொடக்கம் பி.ப. 01.00 மணிவரை பேச்சுப் போட்டிகள் பிரிவு 1, 2, 3, இடம்பெறும்.
• பிற்பகல் 01.30 மணி தொடக்கம் ஏனைய பிரிவினருக்கான பேச்சுப் போட்டிகள்.
• 2015.02.28 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம். கிராமியப் பாடல்; போட்டி
சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் கோவில் மண்டபம்:
• 01.03.2015 கோலம் போடுதல் போட்டி காலை 09.00 மணி தொடக்கம்
• 01.03.2015. பொங்கல் பொங்குதல் போட்டி காலை 09.00 மணி தொடக்கம்
சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் கோவில் வீதி.
2015.03.07 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம
• சமநிலை ஓட்டம். வளர்ந்தோருக்கான சகல பிரிவினருக்குமானது.
• மெதுவான சயிக்கிள் ஓட்டப் போட்டி
• 08.03.2015 பிரதேச சபை மண்டபம்:
• பிற்பகல் 03.00 மணி தொடக்கம் உரைகள், வெற்றி பெற்றோரது கிராமியப் பாடல்களும், பரிசளிப்பு வைபவமும்.