Header image alt text

காரைநகர் பிரதேச நிலைமைகள் குறித்து புளொட் தலைவர் ஆராய்வு-

fgfgfgffயாழ். தீவகம் காரைநகர் பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார். இந்த விஜயத்தின்போது காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் திரு. அ.ஆனைமுகன், வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.வ.சசிதரன் மற்றும் கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து புலம்பெயர் உறவுகளாhல் கரைநகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள இலவச மாலைநேரக் கல்விக்கான கட்டத்தினையும் திரு. சித்தார்த்தன் அவர்கள் பார்வையிட்டார். அத்துடன் குறித்த கல்வி அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், அவ் அமைப்பினுடைய செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டதோடு, எதிர்காலத்தில் குறித்த அமைப்புக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.

karainakar01 karainakar03 karainakar04 karainakar05 karainakar06

கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்-

eastern provinceகிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் சபையில் இன்று சமர்ப்பித்திருந்தார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக 19 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீ.பி. ஜயசுந்தர, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரிடம் விசாரணை-

jayasundaraஹெஜின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தரவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் இன்று முன்பகல் இடம்பெற்றதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நேற்று விசாரணை இடம்பெற்றிருந்தது. இதேவேளை முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பகிஸ்கரிப்பு-

jaffna campusயாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் இன்று மூன்றாவது தடவையாகவும் தமது வகுப்புக்களை பகிஸ்கரித்துள்ளார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு தடவைகளிலும் நுண்கலைப்பீடம் மற்றும் கலைப் பீடாதிபியினாலும் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்வில்லையெனவும் தமக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதற்கான விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தே குறித்த மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எழுத்து வடிவில் உரிய பதில் வழங்கும் வரை தாம் இந்தப் போராட்டத்தை தொடரப்போவதாகவும் நுண்கலைப் பீட மாணவர் மன்றத் தலைவர் சஜிந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக கடற்படையினர் கைது-

ravirajஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கடற்படையினரில் இருவர் ஓய்வு பெற்றவர்கள் எனவும் ஒருவர் தொடர்ந்தும் சேவையில் இருப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் அந்த வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பிற்காக இருந்த காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேள்ட் விசன் நிறுவன சர்வதேச பிரதிநிதி வலிமேற்குக்கு விஜயம்-

world visionகடந்த 23.03.2015 அன்று வேள்ட் விசன் நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதியான ஆன்று அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வலிமேற்கு பிரதேசசபைக்கு வருகை தந்திருந்தார். அவரை வரவேற்ற வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வலிமேற்கு பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனால் மக்கள் அடையும் நன்மைகள் தொடர்பில் சர்வதேச பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினார் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதி குறித்த பிரதேசசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றத்தினை வாழ்த்தியதோடு எதிர்காலத்தில் மேலும் வலுவடைய வேண்டியநிலை தொடர்பில் குறிப்பிட்டார். இதன்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வேள்ட் விசன் நிறுவன சர்வதேச பிரதிநிதி ஆன்று அவர்கட்கு நினைவுப்பரிசிலை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் வேள்ட் விசன் நிறுவன செயற்பாட்டு முகாமையாளர் அன்டனி மற்றும் திட்ட முகாமையாளர் அலெக்ஸ், வலிமேற்கு பிரதேசசபைத் செயலர் திருமதி. சாரதா உருத்திரசாம்பசிவன், பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், கிராமசேவகர்கள், கிராமமட்ட அமைப்பினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் போராட்டம்-

aarpattam (2)நிலுவை வேதன கொடுப்பனவை வழங்குமாறு கோரி மடடக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் இன்றுடன் 17வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடதாசி ஆலையின் நிர்வாக பிரிவு கட்டிடத்தின்மீது ஏறி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது போராட்டங்கள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சஜின் டி வாஸ் குணவர்தன வெளிநாடு செல்வதற்கு தடை-

sachin vassவெளிவிவகார முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டை இன்று நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றிக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானபோதே அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று உத்திரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யேமனில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை- 

yemenயேமனில் நிலவும் மோதல் காரணமாக அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவிக்கின்றது. 49 இலங்கையர்கள் யேமனில் பணிபுரிந்து வருவதாக பணியக் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரண்தெனிய கூறினார். அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்தவர இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யேமனில் 3000ற்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிவதனால் அவர்களை மீள அழைத்துவரும் திட்டத்துடன் இலங்கையும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடமும் இந்திய வெளிவிவகார அமைச்சிடமும் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியக பிரதிப் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனு நிராகரிப்பு-

courts (2)முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டின் பல பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பியதால் சிவிலியன்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவின் பிரதிவாதிகளாக துமிந்த நாகமுவ, முப்படைத் தளபதிகள், தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். அதன்படி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரத்கம பிரதேச சபை தலைவர் கொலைச் சந்தேகநபர் சரண்-

rathgamaரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஷ்பகுமார கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகிய ஜனித் மதுசங்க த சில்வா பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலவாக்கலை கிளனமேரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு உதவி-

ssssநுவரெலியா தலவாக்கலை கிளனமேரா தமிழ் வித்தியாலயத்தில் 2015 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 26.03.2015 வியாழக்கிழமை அன்று புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாக மேற்படி பரீட்சை வழிகாட்டி நூல்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஏற்பாட்டில்; புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களை தலவாக்கலை ஐங்கரன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் தலவாக்கலை கிளனமேரோ தமிழ் வித்தியாலய நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

thlavakalai03 thlavakalai04

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்-

mahindaவிருப்பு வாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல்முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது. உத்தேச புதிய தேர்தல் முறைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படவிருக்கின்றது. இதில் 140 பேர் விருப்புவாக்குகளின்படியும், 80 பேர் தொகுதிவாரிமுறையின் கீழ் மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், 30 தேசிய பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான உறுதியான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் முறை குறித்து இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர், கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு-

karu jeyasuriya234 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது என அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கலைக்கப்படவிருப்பதனால் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மார்ச்; 15ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே 15ஆம் திகதி வரையிலும், மார்ச் 31ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் கொழும்பு, கண்டி மற்றும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபைகளுக்கு இது பொருந்தாது என்றும் அந்த மாநகர சபைகளின் பதவிக்காலம் இவ்வருடம் இறுதியிலேயே நிறைவடையவிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மாநகர சபைகள் 23, நகர சபைகள் 41 மற்றும் பிரதேச சபைகள் 271 என மொத்தம் 335 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அதில், 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போட்டால் வீதியில் இறங்குவோம்-கம்மன்பில-

uthaya kammanvilaஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராடவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இன்று கொழும்பில் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் சூட்டை குளிராக்கவென தேர்தலை பிற்போடும் திட்டத்தை செயற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மக்களை சந்தித்து கலந்துரையாடி அரசியல் செய்வது, புதிய அரசாங்கம் தமது இயலாமையை காட்டுவது, மஹிந்த ராஜபக்ஷமீது உயர்நிலையில் இருந்து கீழ்நிலை உறுப்பினர்கள் வரை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவரது புகழ் ஓங்கியிருப்பது போன்ற காரணங்களால் மஹிந்தவை மறக்கமுடியாது. வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று நாம் எச்சரித்ததால் அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆணையாளர்களுக்கு அளிக்காது பதவிகாலத்தை நீடித்துள்ளது, ஆயினும் உள்ளுராட்சி சபைகள் குறித்த அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு என அவர் மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு விபத்தில் இருவர் பலி, மீரிகம விபத்தில் 27பேர் காயம்-

accidentமட்டக்களப்பு பொலன்னறுவை வீதியின் வாழைச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவைக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தினால் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 மற்றும் 27வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொழும்பு குருநாகல் வீதியில் மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதியதில் இவர்கள் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் 17 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு-

rishad badyudeenஅமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்களே ஜாதிக்க பெரமுன என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தின் காணி கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்நாட்டு வெளிநாட்டு மக்களை குடியமர்த்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்களே ஜாதிக்க பெரமுன தெரிவித்துள்ளது. இந்த செயற்பாட்டிற்காக வெளிநாடுகளிடமிருந்து பணம் பெறப்பட்டமைக்கான தகவல்களும் உள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அங்குருகல்லே சிறி ஜினானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் விசாரணை-

ajith nivatஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். “ஹெஜின்” எண்ணெய் கொள்வனவின்போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பண மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவினர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் மத்திய வழங்கி ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று முற்பகல் 9.30 தொடக்கம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

சங்கானை காளி கோவிலடியில் முதியோர் நிகழ்வுகள்-
ainkaranயாழ். சங்கானை காளி கோவிலடிப் பகுதியில் அண்மையில் முதியோர் நிகழ்வு மிக கோலகலமாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேசசபையின் தவிசளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன், வடமகாண சபை உறுப்பினர் திரு. ப.சுகிர்தன், சங்கானைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், சமூகசேவை உத்தியோகஸ்தர் கிராமசேவை உத்தியோகஸ்த்தர், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. திரு. கோபாலகிருஸ்னன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க- வன்னி பிரதிநிதிகள் சந்திப்பு (BBC)

ranil in kilinochchஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மூன்று நாள் வடக்கு பயணத்தின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்தச் சந்திப்பில் சிறிதரன் கலந்து கொள்ளவில்லை.
எனினும், பிரதமருடனான சந்திப்பில் தானும் மற்றுமொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மற்றும் நலன் விரும்பிகள் சிலரும் கலந்து கொண்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது ஐ.நாவின் பிரதிநிதி-

un repஐ.நாவின் விசேட பிரதிநிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் இன்று இலங்கைக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மை, நல்லிணக்க செயன்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே பப்லோ டி கிரிப் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி, அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர் மட்டப் பிரதிநிதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

மிஹின் எயார் விமானம் அவசரமாக தரையிறக்கம்-

mhin airகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்காவுக்கு சென்ற மிஹின் எயார் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 7.30க்கு புறப்படவிருந்த விமானம், காலை 9.30க்கே புறப்பட்டது என பயணிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக. அந்த விமானம் 10.45க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எம்.ஆர்.எல்501 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யேமனிலுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நாவின் உதவி கோரல்-

yemen workersயேமனில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு ஐக்கிய நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவர, இந்திய கடற்படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார். மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா, கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே யேமன் நாட்டில் நிர்க்கதியாகியுள்ளனர். இதேவேளை. யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள 3,500க்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசு கப்பல்களை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளது. மோதல்கள் வலுவான நிலையில் யேமன் சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

உள்ளுராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் நீடிப்பு-

sri lanka (4)234 உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புக்களின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, அரச நிர்வாக மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார். அதற்கமைய 201 பிரதேச சபைகள், 30 நகர சபைகள் மற்றும் 03 மாநகர சபைகளின் ஆட்சிக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த உளளுராட்சி அமைப்புக்களில் தொகுதிவாரி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளதால், அவற்றின் ஆட்சிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. மேலும் 65 உள்ளுராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், 21 அமைப்புக்களின் ஆட்சிக் காலம் ஒக்டோம்பர் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2 வாரங்களுக்குள் நாடாளுமன்றம் கலைப்பு-

laksman kiriyellaஎதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைக்கும் சூழ்நிலை ஒன்று உருவாகலாம் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கட்சியின் அரசாங்கம் சக்திமயப்படுத்தப்படும். இதற்கு மக்களின் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அதேநேரம் தற்போது எதிர்க்கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாதிருக்கின்ற கட்சி ஒன்றை நம்பி நாட்டை கொடுக்கக்கூடாது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆதரவாளர்களிடையே மோதல்-

paநீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கைச் சேர்ந்தோரும் பொலிஸில் இணையவேண்டும்-பிரதமர்-

ranilநாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற சிவில் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர், வணிகர் கழக உறுப்பனர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக பெண்கள் அமைப்பின் பிரதிநிதி சுட்டிகாட்டியதோடு பெண்களை தலைமைத்துவமாக கொண்டு செயற்படும் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை மற்றும் சுயஉற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் சந்தைவாய்ப்பு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தனர் அதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வரவேண்டும். தற்போது நாட்டில் 200 ஆண், பெண் தமிழ் பொலிஸாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஊடகங்கள்மூலம் விளம்பரப்படுத்தி எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகள் இனணத்து கொள்ளப்படவுள்ளார்கள். மேலும் கொழும்பில் திங்கட்கிழமை இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 28 March 2015
Posted in செய்திகள் 

edved fr

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போஆ மாநாட்டில் விசேட உரை-

maiththiriசீனாவில் நடைபெறும் ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியுள்ளார். ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகள் 2800 பேரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷ_வோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தினார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி-

hinduஇலங்கை அரசாங்கம் இந்தியாவையும், சீனாவையும் சமநிலையில் கையாள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை தமது ஆசிரிய தலையங்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு வார காலத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். புதிய அரசாங்கம் இலங்கையில் பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் சீனாவை பாதிக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனாவின் துறைமுக நகர நிர்மாணப் பணிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து சீன அரசாங்கம் கரிசனை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிகராக சீனாவுடனான உறவையும் சமநிலையில் பேணும் வகையிலான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அகதிகளைத் தடுக்கும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு-

australiaசட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் பயணிக்காதிருக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரேலியா திருப்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் தீர்வுக்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு-கூட்டமைப்பு-

tna (4)தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் சந்திக்கின்ற காணிப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை குறித்து பிரதமர் கருத்து-

ranil01காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யவிருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றபோது இரகசிய முகாம்கள் எவையும் இருக்கவில்லை. சில காலங்களுக்கு முன்னரும் அவ்வாறான முகாம்கள் இருக்கவில்லை. ஆனால் அதற்கும் முன்னர் இவ்வாறான இரகசிய முகாம்கள் இருந்ததா? என்பது குறித்து தம்மால் முடியாது. ஆனால் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் போது இந்த விடயங்கள் உள்ளிட்ட முழுமையான ஆய்வின் பின்னர், தகவல் வழங்கப்படும். அதன் பின்னர் இது குறித்த தீர்வினை காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி-

wi fiபிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (30.03.2015) தொடக்கம் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்i எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக விஜய அமரதுங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழப்பு-

sirisenaகோடரித் தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டிருந்தார். இதேநேரம் பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 3மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் 26ம் திகதி, கோடரி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் – விஜயகாலா மகேஸ்வரன்

jaffna_unp_10பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்துகொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு அவர்கள் வருகை தராதது கவலையளிக்கின்றது. அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை செய்வதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டுமென கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர்; கலந்துகொண்டனர்.

வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – பா.உ.சிறிதரன்

jaffna_unp_9பிரதமர் விக்கிரமசிங்க யாழில் கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளில் என்னையும் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும்  அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. Read more