ஐ.நா அரசியல் விவகார பிரதி செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு-

maththiripalaபுதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி ஃபெல்ட்மன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. உள்ளக ரீதியாகவும், சர்வதேச மட்டத்திலும் புதியதொரு கோணத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இதன்போது ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார். இதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேராவையும், ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யுத்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை தொடர்பில், ஐ.நா சபையின் நிலைப்பாட்டை ஜெப்ரி ஃபெல்ட்மன் தெளிவுபடுத்தியதாக பதில் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம், நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரையும் ஜெப்ரி ஃபெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்-

aarpattamகாணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்துத் தருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள் மாத்தளை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சமூக நீதிக்கான மலையக அமைப்பின் ஏற்பாட்டில், மாத்தளை நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. அடிப்படை வசதிகளின்றி லயன் குடியிருப்புகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதுடன், பல்வேறு துன்ப துயரங்களையும் தாம் எதிர்நோக்கியுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமக்கான வீடமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் காலத்தை விரயமாக்காது சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாத்தளை மாவட்டத்திலுள்ள தோட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த சுமார் 300ற்கும் அதிகமான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். மாத்தளை பிரதான பஸ் தரிப்பிடத்திலிருந்து இரத்தோட்டை வீதியூடாக தனியார் பஸ் தரிப்பிடம் வரை கோஷங்களுடன் பேரணியாக சென்ற தொழிலாளர்கள் பின்னர் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது

இளைஞர்கள் காணாமற் போனiமை குறித்து முன்னாள் கடற்படை பேச்சாளரிடம் விசாரணை-

இளைஞர்கள் சிலர் காணாமல்போனமை தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் டி.கே.பீ.தஸநாயக்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டு காணாமல்போன சம்பவமொன்று குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய டி.கே.பி. தஸநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார். கொழும்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா விஜயம்-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை நேரப்படி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெனீவா நகரை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹ_சைனை, அமைச்சர் மங்கள சமரவீர நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கையில் மனித உரிமைகளின் நிலை மற்றும் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தவுள்ளார்.

இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் மாலைத்தீவுக்கு விஜயம்-

maldivessssமாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் பிரதிதிநிதிகள் குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. மாலைத்தீவின் எதிர்க்கட்சி குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இந்த குழு இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இதன்போது மாலைத்தீவின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக, மாலைத்தீவின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டப்படி தேர்தல் வேண்டும்-ஜேவீ.பி-

JVPதற்போதுள்ள நாடாளுமன்றத்தின் ஊடாக தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவித்துள்ளது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஜேவீபிக்கு முரண்பாடு இல்லை. ஆனால் தற்போது இருக்கின்ற நாடாளுமன்றத்தின் ஊடாகவே அதனை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. புதிதாக தேர்தல் நடத்தி தெரிவாகின்ற உறுப்பினர்களின் ஊடாகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று ரில்வின் சில்வா வலியுறத்திக் கூறியுள்ளார்.

.பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு-

5வயதான சிறுவன் ஒருவர் பாதுகாப்பற்ற கிணறொன்றில் வீழ்ந்து பலியான சம்பவம் ஒன்று வவுனியா ஓமந்தையில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தை – பாலமோட்டையில் இந்த சம்பவம் நேற்று இடமபெற்றிருந்தது. இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த இருமாத காலப்பகுதியில் இவ்வாறு பெற்றோர் அல்லாது பாதுகாவலரின் கவனயீனத்தால், 9 சிறார்கள் அனர்த்தங்களால் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளார்.

இலங்கையர் 85 பேர் இந்தோனேஷியாவில் தடுத்துவைப்பு-

கடவுச்சீட்டுக்களோ அல்லது சட்ட ரீதியான ஆவணங்களோ எதுவுமின்றி இந்தோனேஷியாவினுள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சுமார் 85 இலங்கையர்கள் வட சுமத்திராவின் பெலவான், மேதன் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன