வலி மேற்கு பிரதேசசபைப் பகுதிகளில் மகளீர் எழுச்சிவாரம்-

makaleer thinam2நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் மகளீர் எழுச்சி வாரத்தின் பொருட்டு எழுச்சி நாள் ஒன்றாகிய இன்றையதினம் வலி மேற்கு பகுதியில் உள்ள மாற்று வலு உள்ள பெண்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான கருத்தமைவு நடைபெற்றது. இவ் நிகழ்வில் 50ற்கும் மேற்பட்ட மாற்று வலு உள்ள பெண்கள் கலந்து கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாற்று வலு உள்ளவர்கட்கும் அன்பளிப்பாக சுகாதாரப் பொதிகள் வழங்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பி.ராஜ்குமார், நல்லூர் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி.கோமதி உலக தரிசன நிறுவனப் செயல்திட்ட பணிப்பாளர் அலெக்ஸ் மற்றும் கருவி நிறுவனத்தின் பணிப்பாளரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில்,

இன்றைய இவ் மகளீர் எழுச்சி வாரத்தினை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வெறுமனே மகளீர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு மேலாக ஒருவார காலமாக மகளீர் தொடாடபிலான பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து அதன் வாயிலாக மகளீர் தினத்திற்கும் மகளீருக்கும் பெருமை சேர்ப்பதே எனது இலக்காக உள்ளது. இவ் நிகழ்விலும் இன்றைய எழுச்சி நாள் ஒன்றில் மாற்று வலு உள்ள மகளீர் தொடாபில் அவர்களது தேவைகளை ஆராய்ந்து அதன் வாயிலாக அவர்கள் தொடாபிலான பல்வேறு உதவித் திட்ங்களை ஆரம்பிப்பதே இலக்காக உள்ளது.

இவ் மாற்று வலு உள்ளவர்கள் தொடாபில் சமூகம் சார் சிந்தனையாளர்கள் மிக முக்கியம் வளங்கவேண்டியது அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது. இவ் மாற்று வலு உள்ளோர் தொடாடபில் பல் வேறு தேவைகள் உள்ளது. இவர்களையும் எமது சமூதாயத்தின பல்வேறு தேவைகள் தொடாபில் பயன்படுத்த முடியும் இவர்களுக்கான பல் வேறு ஊக்குவிப்புக்கள் மற்றும் உதவிகள் வழங்குவதன் வாயிலாக பிறரில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து தாமாகவே உழைக்கும் உத்பத்திகளுக்கு வலுச் சேர்ப்பவர்களாக இவர்களை மாற்ற வேண்டும். இவ் நூற்றண்டில் பெண்களது சாதனைகள் பல பல விடயங்களில் பல கோணங்களில் பெண்கள் பல் பரிமானங்களைக் கொண்டவர்களாக மாற்றம் அடைந்து வருகின்றமை யாவரும் அறிந்த ஒர் விடயம்.

இந்த வகையில் எமது பிரதேசத்திலும் பெண்கள் தொடாடபில் பல் வேறு மாற்றங்களை முனனேற்றம் நோக்கிய தானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ் விடயம் தெடாடர்பில் இவ் மகளீர் வாரத்திலேயே பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இதேவேளை இவ் எழுச்சி வாரத்தில் தினமும் ஒவ்வோர் வேலைத்திட்ங்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக இவ் மாற்று வலு உள்ளோர் தொடாபில் அவர்களுக்கு வளங்கப்பட்டு வரும் மாதாந்த கொடுப்பனவு தொடாடபில் அதிகரித்த கொடுப்பனவு வழங்கப்பட வெண்ம் என்ற கோரிக்கை உரிய முறையில் முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேவேளை இதுவரை உதவிக் கொடுப்பனவுகள் பெறாதோர் தொhடபில் அவர்கட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபபடும் எனக் குறிப்பிட்டார். 

makaleer thinam1makaleer thinam3makaleer thinam4makaleer thinam5makaleer thinam6makaleer thinam7