சர்வதேச மகளீர் தின எழுச்சி இரண்டாம் நாள் நிகழ்வுகள்-

makalir thinam..வலி மேற்கு பிரதேசசபைத் தவிசளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் எழுச்சி நாள் இரண்டின் இன்றைய தினத்தில் வலி மேற்கு பிரதேசத்தில் நீர் தொடர்பிலான பற்றாக்குறை மற்றும் பிரச்சனைகளை எதிர்நோக்கும் பகுதிகளின் பிரச்சனைகளை இழிவளவாக்கும் நிகழ்வின் கீழ் வலி மேற்கு பிரதேச பெண்களை மையமாக கொண்டு சுத்தமான குடிநீரின் ஊடாக வளமான வாழ்வை உருவாக்கும் நிகழ்வு இன்று வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வானது வலி மேற்கு பிரதே சபைத் தவிசளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான திரு.ந.பி.இரஜ்குமார், திரு.த.காங்கேயநாதன் உலக தரிசன திட்டப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்தும்போது தவிசாளர், இன்று மனித உடலுக்கு ஆரோக்கிய்ம் வழங்கும் இயற்கையின் கொடையாக இவ் நீர்வளம் உள்ளது. இவ் நீர்வளம் தொடர்பில் பல நீர் நிலைகள் எமது பிரதேசத்தில் இருந்தும் அவற்றினை உரிய முறையில் பாதுகாப்பதில் சமூக ரீதியாக அதிக அக்கறை ஏற்படுத்தப்படுவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ் விடயம் தொடாபிலும் குடும்பத் தலைவிகளாக விளங்கும் பெண்களுக்கு மிக காத்திரமான பங்கு உண்டு பெண்கள் ஆரோக்கியமான மகிழ்வான நிலைத்து நிற்கக்கூடிய சூழலை உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள் அவ் நிலையில் இன்றைய இரண்டாவது எழுச்சி நாளின்போது பெண்கள் தொடாபில் ஒரு மிக முக்க்pயமான பொறுப்பை ஏற்படுத்தும் பொருட்டு இவ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தேன். இவ்வருட இறுதிக்கு முன்னதாக எமது பிரதேச ரீதியான நீர் தொடாபில் ஒ;ர் முன்னேற்றமான நிலையினை இன்று இவ்இடத்தில் கூடியுள்ள பெண்களின் வாயிலாக எதிர்காலத்தில் பெறப்படும் தகவல்கள் வாயிலாக நிலைநிறுத்த நவடிக்கைகள எடுக்கப்படும் இன்றும் கூட எமது பிரதேசத்தில் நடைபெற்று வரும் நீர் விநியோகம் தொடாடபில் பெரும்பாலும் பெண்களே அவற்றின் ஒழுங்கமைப்பை தீர்மானிப்பதில் முன்னிலை வகிப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். எனக் குறிப்பிட்டார்.. இவ் நிகழ்விழனத் தொடாடந்து இன்றைய வளவாளர் இவ் நீர் தொடாபிலான கருத்துரையை வழங்கினார்