வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு விழா-
யாழ்ப்பாணம் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு விழா நேற்று (03.03.2015) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் து.சசீகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.சிவானந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் த.குமணண் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் திரு.அருள்ஞானானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது விருந்தினர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் சிறுவர்களது பாண்ட் வாத்தியம் முழங்க வரவேற்று அழைத்து வரப்பட்டனர். பின்னர் சிறுவர்கள் சாவதேச விதிமுறைகளுக்கு அமைய ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்வை சத்தியப் பிரமாணத்துடன் ஆரம்பித்தனர் இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்hத்தன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பாடசாலையின் நீர் விநியோகத்திற்காக இப்பாடசாலையின் பழைய மாணவர்களாகிய ஜேர்மனியில் வசிக்கும் திரு. திருமதி இராஜகுலேந்திரன் அவர்களால் நாலரை இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பெற்ற நீர்த்தாங்கியினையும் பிரதம விருந்தினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து நீர்வழங்கலை ஆரம்பித்து வைத்தார்.. Photos⇓இவ் நிகழ்வினைத் தொடாந்து பிரதம விருந்தினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், கிராமப்புற பாடசாலைகள் வலுப்படுத்தப்படவேண்டும் இவ் விடயம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் குறித்த சமூக மக்கள் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் இவ்வாறான வலுவான நிலையினை கிராமப்புற பாசாலைகள் பெறுமாயின் அதன் வாயிலாக மாணவர்கள் தூர இடங்களை நோக்கி நகர்வதனைத் தடுக்க முடீயும். இப் பாடசாலை தொடர்பில் இவ் பாடசாலைச் சமூகத்தினர் என்னிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுகளூடாக உதவிகளைப் பெற்று உதவுவதற்கு தயாராக இருக்கின்றேன். குறிப்பாக உங்கள் வகுப்பறைகளைப் புதிதாக அமைக்கும் நடவடிக்ககைக்கு வலுச் சேர்க்க உள்ளேன். நீண்ட போரின் பின்னர் தற்போது கிராமப்புறங்களில் வளர்ச்சியினைக் காணமுடிவதானது குறிப்பிக்கூடிய ஒன்றாக உள்ளது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் இவ் கிராம மக்கள் அதிகமாக ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். இவ் நிகழ்வின் இறுதியில் குறித்த கிராம மட்ட அமைப்புக்கள் தமது கோரிக்கைகள் தொடாபில் பல்வேறு வேண்டுதல்களையும் கையளித்தனர்.