மகளீர் எழுச்சி வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்-
நேற்று (04.03.2015) புதன்கிழமை வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்படடு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் 4ம்நாள் எழுச்சி நாள் 4 முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. ந.பி.இராஜ்குமார் மற்றும் சங்கானை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி ச.நதியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நேற்றைய இவ் எழுச்சி நாள் நிகழ்வானது பிரதேச ரீதியில் விதவைப் பெண்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் பிரதேச ரீதியில் விதவைகள் அமைப்பபை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்ததது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றும்போது, எமது வலி மேற்கு பிரதேசத்தில் ஏறத்தாழ 3000 விதவைகள் வாழ்கின்றனர் இவர்களின் வதழ்வாதாரம் பெரும்பாலும் தங்கி வாழும் நிலையினையே கொண்டுள்ளது. நாம் இன்று இங்கு உருவாக்கும் இவ் அமைப்பின் வாயிலாக இவ் விதவைப் பெண்கள் தொடர்பான தேவைகளை அறிந்து அவர்களுக்கான உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதே நோக்கமாக உள்ளது. வெறுமனே எமது சமுதாயத்தில் உள்ள குறைகளை மட்டும் குறிப்பிடுவதில் பயன் எதுவும் இல்லை. இவ் குறைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் அதன் வாயிலாக உதவித்திட்டங்களைப் பெறத்தக்கதான நடவடிக்கைகளை மேற்கொள்வது இலகுவானதாக அமையும். இயற்கை நிலையில் விதவை என்பதற்கப்பால் விதவைகள் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்பது மிக மோசமான் ஒன்றாகவே கொள்ள முடியும். இவர்கள் தொடாடபில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கௌ;வதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
விதவைகள் என்ற நிலையில் எவ்வாறு இனி வாழ்வது என்ற தவிப்பு பலருக்கும் உண்டு இவ் வியம் எனக்கும் நன்கு தெரியும் அதனிலும் மிக முக்கியமாக நான் ஒரு பெண்ணாக இவ் இடத்தில் இருப்பதனால் உங்கள் உணர்வுகள் உள்ளார்ந்த ரீதியில் நான் நன்கு அறிவேன். நீங்கள் உங்கள் வாழ்கைக்கு பிறரில் தங்கியிருக்காது உங்கள் உழைப்பில் உங்கள் முயற்சியில் வாழ்வதற்கு முயற்சிப்பது எமது திறமையின் எடுத்துக்காட்டாக அமையும். இன்றைய இவ் நூற்றாண்டில் யாரிலும் தங்கியோ அன்றி யாருக்கும் அஞ்சியோ எந்தப் பெண்களும் வாழ வேண்டிய தேவை இல்லை. எப்படியும் வாழலாம் என்பவர்கள் நாம் அல்ல இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர்களே நாங்கள். முன் ஒரு காலத்தில் பேசப்பட்டு வநத நிலை இன்று மாறிவிட்டது. எமக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டால் ஒரு தையல் இயந்திரம் இருக்கின்றது நீங்கள் செய்வீர்களா என்று கேட்ட உடன் இலவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்ற நிலையில் அதனை நாம் பெற்று விடுவோம்.
அத்துடன் உங்கள் பெயருக்கு நேர் உங்களுக்கு உதவி வந்து விட்டது. என்ற நிலை உருவாக்கப்பட்டு விடும். அத்துடன் கேட்டால் கூறுவார்கள் உதவிகள் நிறைவுற்றது என்று இநத விடயம் தொடர்பாக தாங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும். நான் எக்காரணம் கொண்டும் பிறரில் தஙகியிருக்காது பிறரது உதவியை எதிர்பார்த்திராது என்னையும் என்னை நம்பி வாழ்பவர்களையும் எவ்வாறு காப்பது என்பதே ஆகும். இவ் விடயங்கள் தெடாபில் உங்களது உன்மை நிலை என்ன உங்களது வாழ்கையை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்பதை செயல்முறை வடிவத்திற்கு உங்கள் முலமாக உங்கள் பிரதேசத்தில் நடைமுறைப்படுததவே இவ் அமைப்பை ஸ்தாபிக்க வேண்டும் என்பது எனது அவாவாக அமைந்தது.
ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒருவர் என்ற நிலையில் எமது அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி உங்கள பிரதி நிதித்துவத்திற்கூடாக இவ் விதவைப் பெண்களின் உண்மை நிலையினை அறிந்து அவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதே நோக்கமாக உள்ளது. இவ் நிலை தொடாபில் உண்மையான உதவிகள் வழங்கப்படுதல் தொடாடபில் குறிதத துறைசார் அமைச்சு மற்றும் வட மாகாண சபை இதற்கும் மேலாக புலம் பெயர் உறவுகளுக்கும் வேண்டுகோள்களை முன்வைக்க தயாராக உளளேன் இவ் நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். உங்கள் பிரச்சனைகள் தொடர்பில் உண்மையான தன்மையை முன்வைக்க வேண்டும். என குறிப்பிட்டார். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட சங்கானை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி நதியா உரையாற்றுகையில், மேற்படி முயற்சியில் தங்களது அமைச்சினூடாக மேற்படி மேற்படி அமைப்பை பதிவுக்கு உடபடுத்தித் தருவதாக குறிப்பிட்டார்.