வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)
வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.03.2015) திங்கட்கிழமை மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை. சிறப்பு விருந்தினர்களாக புளொட் முக்கியஸ்தரும். வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக உக்குளாங்குளம் சிவன் கோவில் பிரதம குரு தியாகஸ்ரீ சத்திதர குருக்கள், வைத்திய கலாநிதி எம்.மதிதரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.சத்தியநாதன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ஜெயக்கெனடி, மித்ரா மன்ற பணிப்பாளர் அரவிந்தன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, பண்டாரிக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ஜெயதிலக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், என பலர் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.