வலி மேற்கில் மகளீர் எழுச்சிவார ஆறாம்நாள் நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 2015ம் ஆண்டிற்குரிய சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் மகளிர் எழுச்சி வாரத்தின் 6ம்நாள் நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் இம்பெற்றது. .இவ் தினத்தினுடைய கருப்பொருளாக பெண்கள் தொடர்பான நோய்களும் உளத்தாக்கங்களும் எனும் தலைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைததிய கலாநிதி எ.சுரேந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை விரிவுரையாளர் கலாநிதி அ.கண்ணதாசன் வலி மேற்கு பிரதேச பொதுச் சுகாதார பரிசகர்களான கிருபன் மற்றும் தபேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் நிகழ்வில் தவிசார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, எமது மகளிர் எழுச்சி வாரத்தின் ஓர் அங்கமாக இவ் விடயத்தினை இங்கு நடாத்துவதில் பெரு மகிழ்வு அடைகின்றேன். இவ் நாட்டில் பெண்கள் தொடாடபில்பல் வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றது. குறிப்பாக நீண்ட போரின் பினனரான சூழ்நிலையில் பெண்கள் நேரடியான தக்கங்களுககு உட்பட்ட அதேவேளை பல வழிகளிலும் மறைமுக தாக்கத்திற்கும் உட்பட்டுள்ளனர் இவ் பெண்கள் தொடர்பில் அவர்களது மனதளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் அவர்கள்; கடந்த காலத் தாக்கங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதே எனது இவ் நிகழ்வின் நோக்கம் ஆகும். இந்த வகையில் இவ் நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்வடைகின்றேன். கடந்தகால வடுக்கள் என்றும் எம்மத்தியில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றிற்கு சரியான பரிகாரம் காணப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ் பெண்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும் அதன்போது தான் குடும்பம் பலம் பெறும் இதன் வாயிலாகவே ஒரு தேசம் பலம் பெற முடியும். எவ்வாறு ஒரு குடும்பத்தின் இயக்கத்தில் பெண் முக்கியத்துவம் பெறுகின்றாளோ அவ்வாறே நாட்டின் இயுக்கதிற்கும் பெண் முக்கியமானவளாக அமைகின்றாள். இவ்வாறான முக்கிய நிலையில் சமூக இயக்கத்தில் பெரும் பங்கு கொள்ளும் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டிய நிலை முக்கியமானது என குறிப்பிட்டார் இதனைத் தெடாடந்து வைத்திய கலாநிதி சுரேந்திரகுமார், கலாநிதி கண்ணதாசன் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் மேற்படி நிகழ்வுக்கான முழுமையான அனுசரணை வேல்ட் விசன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.