வலி மேற்கில் எழுச்சியுடன் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்-(படங்கள் இணைப்பு)

m00கடந்த 08.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபையில் மிகுந்த எழுச்சியுடன் சர்வதேச மகளிர் தினம். இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் காலை 10.00 மணியளவில் வலிமேற்கு பிரதேச சபை கலாசசர மண்பத்தில் வேள்ட் விசன் நிறுவன அனுசரணையுடன் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக சங்கானை பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா செந்தூரன், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி. றதினி காந்தநேசன், சங்கானைப் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியாம்பிள்ளை, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், சமூகசேவகியும் சமாதான நீதவானுமாகிய திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி, வலிமேற்கு பிரதேசத்தின் சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து, பிரபல சட்டத்தரணியும் நொத்தரிசும் ஆகிய செல்வி. சாருஜா சிவநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்

முன்னதாக வலக்கம்பறை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விருந்தினர்கள் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தொல்புரம் விக்னேஸ்வரா பாடசாலையின் மாணவிகள் பாண்ட் அணியினர் விருந்தினர்கட்கு உரிய அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தினர் தெடர்ந்து அராலி சரஸ்வதி பாண்ட் மாணவிகள் பாண்ட் இசை முழங்க மலர் மாலை விருந்தினர்கடகு அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஊர்வலம் வலி மேற்கு பிரதேச சபையை அண்மித்து வருகை தந்தபோது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் தமிழ் தாய் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடாந்து தழிழ் தாய் வாழ்த்தினை யாழ் பண்ணாகம் மெய்கண்டாண் மாணவிகள் வழங்கினர் தொடாந்து இவ் நிகழ்வுக்கு ஆசியுரை வழங்குவதற்கு வருகை தந்திருந்த சர்வதேச இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவரான சபா. வாசுதேவக் குருக்கள் மற்றும் தென் இந்திய திருச்சபை மூளாய் ஆதினத்தின் அருட்பணி. செயஸ்டியன் அன்டனி ஆகியோரின் மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகள் ஆரம்பமானது. இவ் நிகழ்வின்பொது பண்ணாகம் மெய்கண்டாண் மாணவிகள் தமிழ் மொழி வாழ்த்து வழங்கினர். தொடர்ந்து பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை ஆசிரியை செல்வி பூ.ஜெயமலர் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து சர்வதேச இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவரான சபா.வாசுதேவக் குருக்கள் மற்றும் தென் இந்திய திருச்சபை மூளாய் ஆதினத்தின் அருட்பணி. செயஸ்டியன் அன்டனி ஆகியோர் ஆசியுரையினை வழங்கினர். இதன்போது சபா வாசுதேவக் குருக்கள் அவர்கள் இவ் தினத்தில் அனைத்துப் பெண்களுக்கும் நல்லாசி வேண்டி பிரார்த்திப்பதாகவும் இவ் வேளையில் இன்றய பெண்கள் அடக்கமுடமையை கடைப்பிடிப்பது சாலச் சிறந்நது என்றும் இவ்வாறான பெண்கள் தினத்தினை இவ் பிரதேச சபைiயினை பெறுப்பேற்ற காலம் முதல் வெகு சிறப்பாக நடாத்திவரும் மதிப்புக்குரிய இவ் சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தன்னலம் அற்ற சேவையினைப் பராட்டுவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆசியுரை வழங்கிய அருட்பணி செபஸ்டியன் அன்டனி அவர்கள் குறிப்பிடுகையில் இன்றைய இவ் சிறப்பு மிக்க மகளிர் தினத்தில் மகளிரின் கரங்கள் வலுப் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இதேவேளை இந்த மகளிர் தினத்தில் இவ் மண்டபம் நிறைந்த இவ் மகிழ்ச்சியான உன்னதமான காரியத்ததை உரிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் எமது பிரதேசத்தின் இரும்புப் பெண்மணி எனப் புகழப்படும் இவ் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு இறைவன் மிகுந்த பலத்தினைக் கொடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனைத் தெடாந்து தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தiமையுரையை நிகழ்த்தினார். இதன்பேர்து இன்றய இவ் நாள் பெண்களின் எழுச்சிக்கு உரிய நாள் பெண்களின் சமூக மாற்றங்களை நோக்கிய புதுமைக்கு பழமையின் விடுதலைக்கும் உரிய மகத்தான நாள் உலக பெண்களுக்கு எமது இனம் முன்னுதாரணமான இனம் அவ்வாறு முன்னுதாரண இனத்தின் விடுதலைக்கு களமாடி கவியமாகிய இன்றும் வாழ்ந்து வரும் வீராங்கனைகளின் வரலாற்றை நேசிக்கும் நாள் இவ்வாறான மகத்துவமான நாள் தெடாடபில் இன்று இங்கு உரை நிகழ்த்துவதில் பெருமை அடைகின்றேன். மகிழ்வு அடைகின்றேன். வெறுமனே கடந்த ஆண்டுகள் போல் அல்லாது கடந்த காலங்கள்போல் இவ் வருடம் மகளிர் தினத்தினை எழுச்சியன ஒர் வாரமாக நிறைவு செய்துள்ளமை மகிழ்ச்சியான விடயம் ஆகும் கடந்த முதலாம் திகதி முதலாக ஏழாம் திகதிவரையில் பல்வேறு வகையான விழிப்புனர்வு மற்றும் பெண்கள் தெடாபிலான செயற்திட்டம் மற்றும் கண்காட்சிகள் நடாத்தப்பட்டது. இவ் செயற்பாடுகள் வாயிலாக பெண்கள் தொடர்பிலான பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இங்கு நிகழ்த்தப்பட்டது. இதற்கும் மேலாக கிராம மட்ட அமைப்புகளுக்கூடாக 46 வiயான போட்டிகள் பாடசாலை மாணவர்கட்குரிய 24 வகையிலான போட்டிகள் என பல தரப்பட்ட நிகழ்வுகள் இவ் எமது பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்து. இவ் விடயங்கள் பெண்களின் ஆற்றல் மேம்படுத்திய அதேவேளை குறித்த மகளிர் தினம் தொடாபில் மாற்றத்தினையும் ஒர் ஈர்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

வெறுமனே மகளிர் தினம் அனுஸ்டிப்பதிலும் பார்க்க குறித்த மகளிர் தினம் தொடர்பில் சமூக மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தபபடுவது மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக இவ் மகளிர் தின எழுச்சி வாரத்தின்போது பல தரப்பட்ட பெண்கள் தொடாடபிலும் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வின் வாயிலாக அவர்களது அடிப்படைப் பிரச்சினைகள் அவாகளுக்கான தேவைகள் தொடர்பில் அறியக் கூடியதாகவும் அதே வேளை அவர்களுக்கான உதவித்திட்டங்கள் நோக்கி நகரக்கூடியதாகவும் அமைந்திருந்தமை மிகச் சிப்பான அம்சமாக அமைந்துள்ளது. இந்த வகையில் இவ் பெண்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உதவிகள் மற்றும் வலுவூட்டல்களை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை பெண்கள் தொடர்பில் வாழ்நாள் முழுமைக்கும் உழைக்கவேண்டிய நிலை உள்ளமை யாவரும் அறிந்த ஒர் விடயம் ஆகும். ஒய்வின்றி உழைக்கும் பெண்கள் தெடாபில் பல சவால்கள் உள்ளது. ஒர் அலுவலகத்தில் அடக்குமுறை பெண்கள் தலைமைப் பதவிக்கு வருவது தொடர்பில் அடக்குமுறை என பல பகுதிகளாலும் இவ் அடக்கு முறை இடம் பெறுவது குறிப்பிக்கூடிய ஒன்றாகும். இவ் அடக்கு முறை என்பது ஆண்களால் மட்டும் உருவாக்கப்படுவது என்பதற்கு மேலாக பெண்களின் பங்களிபபும் இவ் இடத்தில் உள்ளதை குறிப்பிட முடியும். இதனை நான் எனது இவ் தலைமைப் பதவிக் கூடாக அறிய முடிகின்றது. உணருகின்றேன். இவ் நிலையில் எமது பிரதேச சபையின் வேலைத் திட்டடங்களுக்கு அப்பால் இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கான பிரதான காரணம் எமது பிரதேச பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் வலுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

திட்டமிட்டவகையில் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக அவர்கள் உயர் நிலை அடைவதைத் தடுப்பதற்கு மறைமுகமாக பல சக்திகள் செயற்பட்டு வருகின்றது. இவ் நிலை தொடர்பில் மிக அவதானமாக இருக்கவேண்டிய நிலை உள்ளது. எதற்கும் அஞ்சாது தடைகளை வெற்றிப்படிகளாக மாற்றி அதன் வாயிலாக உயர்நிலை அடைவது மிக முக்கியமான வெற்றியாக அமைந்துள்ளது. இவ் இலக்கினை நோக்கி பெண்கள் முன்னேறுவதற்கு முயற்சிக்வேண்டும். இன்று இவ் இடத்தில் இவ் நிகழ்சியினை வேள்ட்விசன் நிறுவனத்தின அனுசரணையுடன் மேற்கொண்டதற்கான பிரதாண காரணம் பெண் பிள்ளைகள் தொடாடபிலாக மாற்றங்கள் முன்னேற்றங்களில் அவ் நிறுவனத்தாரது நோக்கங்களும் அமைந்தமை ஆகும். இதேவேளை இன்றைய இந்த விழாவின் வெற்றியும் பெண்களுக்கு உரிய தாகவே உள்ளது என்பதனையும் இ.வ் இடத்தில் குறிப்பிட்டுக கொள்ள விரும்புகின்றேன். எனது இவ் ஏற்பாடுகள் தொடாடபில் கோட்டக்கலவிப் பணிப்பாள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாதர் கிராம முன்னேற்றச் சங்கங்கள் வழங்கிய உயரிய அhபணிப்புடனான ஒத்துழைப்பே காரணம் எனக் குறிப்பிட முடியம். இந்த வகையில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கும் மேலாக எமது பிரதேசம் தொடாபிலான பெண்களது தற்போது எதிர்நோக்கப்ப்டு வரும் பிரச்சனைகள் தொடாபில் அரச அதிகாரிகள் உடனடியாக தீர்வுகாண முன்வர வேண்டும் இதேவேளை பெறுப்பேற்றுள்ள இவ் மாற்றம் நோக்கிய புதிய அரசு இன்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவின் போது எமது பிரதேசத்தினைச் சேர்ந்த 10000 பெண்களின் கையொப்பதினை பெற்று இவ் மகளிர் தினத்தினை விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் இதற்கான அங்கிகாரத்தினை பாராளுமன்றத்திடம் பெற்று மேற்கொள்ளுமாறு கோரி அன்று இவ் நாட்டின் அதி உத்தம ஜனாதிபதியாக இருந்தவரின் பாரியாரும் நாட்டின் முதற் பெண்மணியிடமும் வினயமாக கோரினேன் இன்றுவரை எதுவித பதிலும் இல்லை. இதற்கும் மேலாக கொடிய போரால் பாதிககப்பட்டு இன்று வாழ்ந்து வரும் பெண்கள் தொடர்பில் இவ்அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இதேவேளை காணமல் போய் இன்றுவரை ஏங்கிக் கலங்கி நிற்கும் தாய்மார், மனைவிமார் மற்றும் பிள்ளளைகள் தொடர்பில் மழுப்பலற்ற உரிய பதிலை அரசு வழங்க வேண்டும். பெண் அரசியல் கைதிகள் தொடாபில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை வேண்டும் குறிப்பாக போரின் மிகக் கோடுரமான வேதனைகளுடன் வாழும் வன்னி உறவுகள் தொடாடபில் அக்கறை சேலுத்தப்படுதல் வேண்டும். தாயை சிறையில் சென்று பார்க் முடியாத நிலையில் உள்ள சிறுமி தொhடபில விமோசனம் கிடைக்கப்பெற வேண்டும். இந்த நாட்டில் உள்ள சனத்தொகையில் அரைவாசிக்கு மேல் பெண்கள் உள்ள நிலையில் பெண்கள் தீர்மானிக்கும் ஆற்றலை கொண்டுள்ளனர் இவ் வகையில் புதிய இவ் அரசு பெண்கள்மீதும் பெண் பிள்ளைகள் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் வெகு விரைவில் புதிய அரசின் ஜனாதிபதி அவர்கட்கு பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தெடாபில் கோரிக்கையை சமர்பிக்க உள்ளேன் எனக் குறிப்பிட்டார் இதே வேளை வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வகையில் பல துறைசார் பெண்களதும் ஆற்றல் மற்றும் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் 28 பெண்கள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அவர்களின் விபரம் வருமாறு

கௌரவிப்பு பெறுபவர்கள்
1) செல்வி. தாரணி குமாரகுலசிங்கம்
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.
2) திருமதி .தனபாலசிங்கம் நேசராணி,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

3) செல்வி. தயாளினி கந்தையா,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.
4) திருமதி பகீரதன் அருந்தவம்,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

5) திருமதி. சந்திரசேனா சத்தியமாலா,

2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.
6) திருமதி. சிவபாலன் சரோஜினிதேவி,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

7) திருமதி. குலேந்திரன் லங்கேஸ்வரி,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

8) திருமதி. தவநாயகம் இந்திரா,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

9) திருமதி.குகபரன்.அனுராதா,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

10) திருமதி.இரட்ணராஜா. பிரகலா,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

11) திருமதி.சுந்தரபாரதி.சிவமலர்,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த அதிபர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

12) செல்வி.ஜெயராணி.நாகலிங்கம்,
2014ம் ஆண்டில் கல்வித் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த அதிபர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

13) வைத்திய கலாநிதி(திருமதி).நிர்மலா.சண்முகநாதன்,
2014ம் ஆண்டில் சுதேச மருத்துவத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த வைத்திய சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

14) செல்வி.சாந்தா.மரியாம்பிள்ளை,
2014ம் ஆண்டில் கல்வி நிர்வாகத்; துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த கல்வி நிர்வாகி ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

15) வைத்திய கலாநிதி.(திருமதி).றதினி.காந்தநேசன்,
2014ம் ஆண்டில் மருத்துவத்துறைக்கு துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த வைத்திய சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

16) திருமதி.பிரேமலோஜி.சுரேஸ்குமார்,
2014ம் ஆண்டில் உளவளத்துனை சேவைத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த உளவளத்துறை சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

17) திருமதி.சிறீகோகிலாம்பிகை.ஆணந்தகிருஸ்ணன்,
2014ம் ஆண்டில் உளவளத்துனை துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த உளவளத்துனை சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

18) திருமதி.ரஞ்சி.சுதாகரன்,
2014ம் ஆண்டில் சமூக சேவைத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

19) திருமதி.ஸ்ரீதேவி. கண்ணதாசன்,
2014ம் ஆண்டில் நடனத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த நடனத்துறை ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

20) திருமதி.ஆனந்தவல்லி.சிவதட்சனாமூர்த்தி
2014ம் ஆண்டில் அரச நிர்வாகத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த அரச நிர்வாக சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

21) திருமதி.ஜெயந்தி.தெய்வேந்திரம்
2014ம் ஆண்டில் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த பொதுச் சுகாதார சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

22) திருமதி.ஜெயகுமாரி.இராஜேந்திரன்
2014ம் ஆண்டில் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த பொதுச் சுகாதார சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

23) திருமதி.மணோன்மணி.கணபதிப்பிள்ளை
2014ம் ஆண்டில் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த பொதுச் சுகாதார சேவையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

24) செல்வி.பாலச்சந்திரன்.ரஜிதா
2014ம் ஆண்டில் விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தமையை இட்டு சிறந்த சாதனையாளர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

25) செல்வி.லீலாவதி.மாரிமுத்து
2014ம் ஆண்டில் முன்பள்ளி துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.

26) செல்வி.நாகலிங்கம்.நிரஞ்சலா.
2014ம் ஆண்டில் முன்பள்ளி துறைக்கு ஆற்றிய மிக உன்னதமான சேவையின் பொருட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி தவிசாளரால் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை இவி நிகழ்வில் ஏராளமான வெற்றியாளர்களும் கலந்து சிறப்புப்பரிசுகள் பெற்றுக் கொண்டனர்.

m01 m02 m03 m04 m05 m06 m08 m09 m10 m11 m12 m13