தமிழ் தேசிய இளைஞர் கழகம் தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்திற்கு உதவி-(படங்கள் இணைப்பு)
பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நேற்று (12.03.2015) வியாழக்கிழமை நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் நிதியுதவியை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தது. இவ் நிதியுதவியை புளொட் இயக்க முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பாடசாலை அதிபர் திருமதி. பத்மநாதன் அவர்களிடம் கையளித்தார். தொடர்ந்து மாணவர்களின் கல்வி நிலை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் புளொட் இயக்க முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர், ஆசரியர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர் துரை, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், உறுப்பினர் ர.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.